தனது கணணியில் இருந்து தரவுகளை அழிக்கும் கிறிஸ் நோனீஸ் !
[ Oct 07, 2014 03:09:52 PM | வாசித்தோர் : 7580 ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த இராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் தொடர்ச்சியாக கிறிஸ் நோனீஸ் உயர்ஸ்தானிகராலய அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ கணனியைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கணனித் தரவுகளை மீளப்பெற்றுக்கொள்ளல், சில தரவுகளை அழித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாகனத்தை பயன்படுத்தி வருவதாகவும், உயர்ஸ்தானிகராலயத்தின் திறவுகோல் நோனீஸிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1170.htmlசைக்கிள் கப்பில் சோனியா காந்தி உள்ளே பாய்ந்தார்: பெரும் விளையாட்டு ஆரம்பம் !
[ Oct 07, 2014 03:31:53 PM | வாசித்தோர் : 30770 ]
இதனைத் தொடர்ந்து அதிமுகவைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் சிலர் கர்நாடக முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் ஜார்ஜ், மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோருடன் பேசியுள்ளனர். அதே போன்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும், அதிமுக எம்.பி. ஒருவரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் பேசியுள்ளனர். இதனையடுத்து கடந்த 10 வருடங்களாக எதிரும் புதிருமாக இருந்த காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகள் தற்போது நட்பு வட்டாரத்தில் இறங்கியுள்ளது. இது பிற்காலத்தில் பெரும் அரசியல் மாற்றத்தை கொண்டுவர வல்லது என்று அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். அதாவது தமிழகத்தில் உள்ள 40 எம்.பி சீட்டுகளையும் கைப்பற்றும் பலத்தில் ஜெயல்லிதா உள்ளார்.
இவை அனைத்தும் காங்கிரசை சப்போட் செய்தால், சோனியாவுக்கு அதுவே பெரும் பலமாக மாறும் நிலை தோன்றும். இது இவ்வாறு இருக்க, 27ம் திகதி அன்று நீதிமன்றில் பிழையான தீர்ப்பு கிடைத்தால் அவரை சிறைக்கு அனுப்பாமல் அப்படியே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது குறித்து அம்மாநில முதல்வரோடு ஏற்கனவே அதிமுகவினர் பேசியுள்ளார்கள். முதலமைச்சர் சீதாராமையாவும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டார். அதிமுகவின நினைத்தது போலவே தீர்ப்பும் வந்துவிட்டது. உடனே மருத்துவமனைக்கு ஜெயலலிதாவை கூட்டிச் செல்ல திட்டம்மிட்டார்களா. ஆனால் செல்வி ஜெயலலிதா தான் அதனை மறுத்துவிட்டார். அவரது உற்ற நண்பி சசிகலா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்க்கவில்லையாம்.
கைது என்றவுடன் நெஞ்சுவலி வந்ததுபோல மருத்துவமையில் சென்று நடிக்க நான் விருப்பவில்லை. என்ன நடந்தாலும் பரவாயில்லை சட்டத்தை எதிர்கொண்டு தீர்ப்பை மாற்றுவேன். இல்லையென்றால் சிறையில் இருக்கிறேன் என்று அவர் பிடிவாதமாக கூறிவிட்டார். இதனால் அவர் சிறை சென்றதும், அவருக்கு சிறையில் வேண்டிய வசதிகளை சீதாராமையா ஏற்படுத்திக்கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. அங்கும் அவர் பட்டத்து இளவரசி போலவே வாழ்க்கை நடத்துகிறார். கர்நாடகாவில் பாதுகாப்பு இல்லை, எனவே செல்வி ஜெயலலிதாவை தமிழ் நாட்டு சிறைக்கு மாற்றவேண்டும் என்று கதைகளை கிளப்பி விடுதவே கர்நாடக அரசு தான் என்பது பலருக்கு புரியாத விடையமாக உள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1171.htmlபுலிகள் ISIS அமைப்புக்கு நிகரானவர்கள்: ஜெனீவாவிற்கான இலங்கை பிரதிநிதி தெரிவித்துள்ளார் !
[ Oct 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 3785 ]
இந்தியா மற்றும் அமெரிக்காவில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடைதொடர்ந்தும் நீடிப்பது தங்கள்கரிசனைகள் சரியானவை என்பதை உறுதி செய்லவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஐ.எஸ்ஐஎஸ் அமைப்புடனும் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டுள்ளார். இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் பிரதிநதியொருவர் சர்சதேச அளவில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை இந்த அமர்வில் பட்டியலிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1174.htmlமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிவாஜிலிங்கம் பலத்த பதிலடி !
[ Oct 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 5115 ]
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
'எமது தேசிய விடுதலைப் போராளிகளை கொச்சைப்படுத்துபவர்களை தமிழினத் துரோகிகள் என கூறலாம். வடமாகாண சபை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வரும்படி விக்னேஸ்வரனை, இரா.சம்பந்தன் அழைத்த போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே போட்டியிட வருவேன் என விக்னேஸ்வரன் கூறினார். அப்போது அவருக்கு தெரியவில்லையா நாங்கள் ஆயுதக்குழுக்கள் என்று. அப்போது ஆயுதக்குழுக்களுடன் இணைந்து, பிரபாகரன் மாவீரன் என்று தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர், போராட்ட அமைப்புக்களுடன் இணைந்திருக்க முடியாது என்கிறார்.
வடமாகாண சபையில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 30 பேரில், 13 பேர் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐச் சேர்ந்த அறுவரும் டெலோவைச் சேர்ந்த ஐவரும் புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்தே சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக அங்கீகரித்தனர். நாங்கள் அனைவரும் 27 வருடங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஐனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டுவிட்டோம். 1969ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் அந்த ஆயுதக் குழுக்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வந்தனர்.
1981இல் டெலோவை சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட போராளிகள் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்காக சிவசிதம்பரம் உள்ளிட்ட தலைவர்க்ள நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டிருந்தனர். 1985ஆம் ஆண்டு திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 போராட்டக் குழுக்கள் கலந்துகொண்டிருந்தன. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பாகவே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர். எமது இந்த போராட்ட இயக்கங்களில் இருந்து 30 ஆயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிரை நீர்த்தமையால் இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
எங்கள் ஆதரவுடன் எங்கள் தோள் மீது ஏறி நின்று தீண்டத்தகாதவர்கள் என்று கூற முடியாது. அதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. முதலமைச்சர் உட்பட எவரையும் இவ்வாறு கதைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் மேலும் கூறினார்.
http://www.athirvu.com/newsdetail/1175.html
Geen opmerkingen:
Een reactie posten