தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 8 oktober 2014

ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம்!- ஜே.வி.பி.

புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 04:18.08 PM GMT ]
பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் இன்று பிரித்தானிய அரசாங்கத்துடன் பேச்சு நடத்துகின்றனர்.
உலக தமிழர் பேரவை இதனை தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படுவதாக பேரவை குறிப்பிட்டுள்ளது.
தமது அமைப்பும் வேறு தமிழ் அமைப்புக்களும் பிரித்தானிய பிரதி வெளியுறவு அலுவலக அமைச்சர் ஹுகோ ஸ்வைரியை சந்திக்கின்றனர்.
இது பிரித்தானிய அரசாங்கம் உலக தமிழர் பேரவையுடன் நடத்தும் முதல் சந்திப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmv0.html
ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகுவிரைவில் தமிழ்நாடு வருவார்: ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 07 ஒக்ரோபர் 2014, 11:45.49 PM GMT ]
இது இறுதி தீர்ப்பு அல்ல. ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகுவிரைவில் தமிழ்நாடு வருவார் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொருளாளரும், முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சட்டத்தின் மீதும், நீதித்துறையின் மீதும் அபார நம்பிக்கை கொண்டுள்ளவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா.
காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகளை சட்டப்போரின் மூலம் சாதித்துக் காட்டிய ஜெயலலிதா, தனக்கு ஏற்பட்டுள்ள தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி, தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்து மீண்டும் ஜொலிப்பார்கள். மிளிருவார்கள், தமிழ்நாட்டை ஆளுவார்கள் என்பதில் எள்ளளவும் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தற்போது தமிழ்நாட்டில் இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி, ஜெயலலிதாவின் பாதையில் நடைபெறும் அ.தி.மு.க.வுக்கு அவப்பெயரும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன.
தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள், அ.தி.மு.க. அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் அரசின் மீது சட்டம்-ஒழுங்கு குறித்து பொய்க்குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கு எள் முனையளவும் இடம் கொடுக்காத வகையில் அ.தி.மு.க.வினர் நடந்துகொள்ள வேண்டும் என இந்த தருணத்தில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியினை, ‘‘சட்டத்தின் ஆட்சி’’ என்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள ஜெயலலிதாவின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு நிச்சயம் முறியடிக்கும்.
தற்போது, ஜெயலலிதாவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இறுதித்தீர்ப்பு அல்ல.
தனது வாதத்திறமையால், உறுதிகொண்ட நெஞ்சினால், நேர்மைக் குணத்தால் தமிழக நலன்களுக்காக பல வழக்குகளில் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று இருக்கிறார்கள்.
இந்த வழக்கிலும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
ஜெயலலிதா சட்டத்தின் துணையோடு வெகு விரைவில் தமிழகம் வருவார்.
எனவே, எவ்வித போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் என்று ஜெயலலிதா மீது உயிரையே வைத்துள்ள, எம்.ஜி.ஆரின் இரத்தத்தின் இரத்தமான கழக உடன்பிறப்புகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATbKWmv1.html
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம்!- ஜே.வி.பி.
[ புதன்கிழமை, 08 ஒக்ரோபர் 2014, 12:22.02 AM GMT ]
ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கும் முட்டாள்தனத்தை மீண்டும் செய்ய மாட்டோம் என வடமத்திய மாகாணசபையின் ஜே.வி.பி கட்சி; உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பிரீமன் வீதியில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பகிரங்க மேடைகளில் ஜே.வி.பி கட்சியை விமர்சனம் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அண்மையில் கோரியிருந்தார்.
ஜே.வி.பி கட்சி தொடர்பில் ஜனாதிபதிக்கு திடீர் கருணை மலர்ந்துள்ளது.
கடந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவை சந்தித்தது.
அதனைத் தொடர்ந்து ஜே.வி.பி. மீது அரசாங்கத்தின் கரிசனை அதிகரித்துள்ளது.
ஒரு தடவை செய்த முட்டாள்தனத்தை மீளவும் செய்ய நாம் தயாரில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாம் தவணைக்காக போட்டியிட அரசியல் அமைப்பில் எவ்வித இடமும் கிடையாது.
அரசியல் அமைப்பிற்கு எதிராக ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டால் பாரியளவில் போராட்டம் நடத்தப்படும்.
பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனீஸ் மீது தாக்குதல் நடத்திய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிற்கு பாவ மன்னிப்பு பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மஹிந்த அவரை வத்திக்கானுக்கு அழைத்துச் சென்றார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலின் போது விமல் வீரவன்ச தேசிய சுதந்திர முன்னணியின் பஞ்சாயுத சின்னத்தில் போட்டியிட்டார்.
தேர்தல் மேடைகளில் ஜனாதிபதியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தற்போது மீண்டும் ஜனாதிபதியின் பக்கத்தில் சென்று அமைதியாக இருக்கின்றார்.
ஜனாதிபதியுடன் நெருக்கமான மேர்வின் சில்வாவும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிக்க நிபந்தனைகளை விதித்துள்ளார் என வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATcKWmv2.html

Geen opmerkingen:

Een reactie posten