சற்று முன்னர் கல்பிடிய தளத்தில் குண்டுவெடிப்பு: 3 சிப்பாய்கள் எரிகாயத்தில் !
[ Oct 23, 2014 04:32:41 PM | வாசித்தோர் : 1330 ]
கல்பிடியாவில் அமைந்துள்ள கடற்படை மற்றும் சிறிய விமானப்படை தளம், நீண்ட நாட்களாக சீனாவின் கண்காணிப்பில் உள்ளது. சீனப் படைகள் அடிக்கடி இந்த தளத்திற்கு சென்றுவருவது வழக்கம். புதிய ஆயுதங்களை இலங்கை கொள்வனவு செய்தால், அதனை இந்த தளத்தில் வைத்தே பரிசோதனை செய்து வருகிறார்கள். இதேவேளை விமானத்தில் பொருத்தப்படும் புதியவை குண்டு ஒன்றை சமீபத்தில் இலங்கை பெற்றுக்கொண்டதாகவும், அதனை பொருத்தும் வேளை தான் இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாகவும் உள்ளூரில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. இக் குண்டு வெடிப்பு சற்று நேரத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இதில் 3 விமானப்படையை சேர்ந்த சிப்பாய்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என இலங்கை படைத்தலைமையகம் தற்போது ஒத்துக்கொண்டுள்ளது. இதேவேளை எந்த ஒரு புதிய ஆயுதத்தையும் தாம் பரீட்சித்துப் பார்கவில்லை என்றும், வழமையாக நடக்கும் பரிசோதனைகளை சிப்பாய்கள் மேற்கொண்டவேளை அது வெடித்துவிட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார். காயமடைந்த 3 சிப்பாய்களும் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1279.html
மகிந்தருக்கு பரிவட்டம் கட்டும் தமிழர்கள்: நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் விட்டாலும்..
[ Oct 23, 2014 04:43:44 PM | வாசித்தோர் : 2275 ]
இன்னும் இப்படியான் தமிழர்கள் இருக்கிறார்கள்: நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்.. அது அதனை தான் செய்யுமாம் . மகிந்தருக்கு பரிவட்டம் கட்டும் இவர்கள் எல்லாரும் எப்ப தான் திருந்தப்போகிறார்கள். இவர்கள் 1 லட்சத்தி 66 ஆயிரம் கொல்லப்பட்ட தமிழர்களின் குருதிக்கு மேல் நின்று பரிவட்டம் கட்டுகிறார்கள் ?




http://www.athirvu.com/newsdetail/1280.html
http://www.athirvu.com/newsdetail/1280.html
Geen opmerkingen:
Een reactie posten