பிரபாகரனும், நானும் தடாகத்தில் நீச்சலடித்தோம் ன பொய் பிரச்சாரம் செய்த விமல் வீரவன்ச !
[ Oct 23, 2014 01:41:32 PM | வாசித்தோர் : 3580 ]
அதன்பிறகு பாராளுமன்றத்தில் அவரை கண்டு நான் அந்த சீடி குறுவெட்டை எனக்கும் காட்டும்படி கேட்டேன். நான் எப்படி நீச்சல் அடித்தேன் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், கடைசிவரை அப்படி ஒரு குறுவெட்டை எனக்கு அவர் காட்டவில்லை. அப்படி ஒரு சீடி இருக்குமானால், நான் அரசியலில் இருந்தே விலகி விடுகின்றேன் என நான் அதன்பிறகு பலமுறை கூறியுள்ளேன். இப்போதும் அதை நான் அவரிடம் கேட்கின்றேன். ஆனால், இதுவரையில் விமல் வீரவன்ச எனக்கு அந்த சீடியை காட்டவில்லை.
அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது, இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று தோன்றுகிறது. அவரது பெயரை ஒரு நாளைக்கு நூறுமுறை உச்சரித்து, இந்த அரசின் ஆட்கள் பொய் பிரசாரங்களை ஆரம்பித்துள்ளார்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதில் புலிகளின் மீதான தடை நீக்கப்படவில்லை. 28 நாடுகளை கொண்ட இந்த ஒன்றிய உறுப்பு நாடுகளை புலித்தடை தொடர்பாக ஆவணங்களை முன்வைக்கும்படி நீதிமன்றம் கோரியுள்ளது. இதை வைத்து கொண்டுதான் இவர்கள் இங்கே இப்போது அரசியல் செய்கிறார்கள். இந்த தீர்ப்புக்கும், எதிர்கட்சிகளுக்கும், ரணில் விக்கரமசிங்கவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறுகிறார்கள். இப்படி பொய்களை உருவாக்கி சொல்லும் குழுவின் தலைவர்தான் விமல் வீரவன்ச.
இதற்கு ஒரு காரணம் உள்ளது. இந்த ஆட்சி தேர்தலில் மக்கள் முன்னால் சென்று, நல்லாட்சியை பற்றியோ, மனித உரிமைகளை பற்றியோ, ஊடக சுதந்திரத்தை பற்றியோ, ஊழல் ஒழிப்பு பற்றியோ பேச முடியாது. இவர்களிடம் எஞ்சி இருப்பதெல்லாம், புனையப்பட்ட புலிக்கதைகள் மாத்திரமே. ஆகவேதான், இன்று இந்த அரசாங்கத்துக்கு மிகவும் வேண்டப்பட்டவராக, புலிகளின் தலைவர் பிரபாகரன் மாறியுள்ளார் என்று கூறுகிறேன். ஆனால், இந்த முறை இந்த புலிகள் பருப்பு வேகாது.
http://www.athirvu.com/newsdetail/1275.html
ஜெனீவா மனித உரிமைச் சபையின் உறுப்பு நாடாக இந்திய மீண்டும் தெரிவு !
[ Oct 23, 2014 04:00:21 PM | வாசித்தோர் : 690 ]
உறுப்புரிமையை பெறுவதற்காக இந்தியா, வங்காளதேசம், கட்டார், தாய்லாந்து, இந்தோனேஷியா இரகசிய வாக்கெடுப்பில் பேட்டியிட்டன. ஆனால் இந்திய மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது. மனித உரிமைச் சபையின் உறுப்புரிமை பதவியில் இரண்டு தடவைகள் அங்கம் வகித்த நாடுகள் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் விதி என்பது குறிப்பிடத்தக்கது. இன் நிலையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை சபையில் கொண்டுவரப்படும் தீர்மானங்களை இந்தியா எதிர்க்கும். அதற்கும் இது ஒரு நல்ல சந்தர்பமாக அமைந்துவிட்டது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
http://www.athirvu.com/newsdetail/1276.html
Geen opmerkingen:
Een reactie posten