தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

தலையை துண்டிக்கும் தீவிரவாதியை கொல்லுங்கள்: கேமரூன் உத்தரவு (வீடியோ இணைப்பு)

தொடந்து பிணையக் கைதிகளின் தலையை துண்டிப்புகளை நடத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியை கொலை செய்யுமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டுள்ளார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக செயற்பட்ட அமெரிக்காவை அச்சுறுத்தும் வகையில், அந்நாட்டு பிரஜைகளான பத்திரிகை நிருபர்கள் ஜேம்ஸ் போலே, ஸ்டீவன் சாட்லாப், இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸ் என 3 பேரை தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஆலன் ஹென்னிங் படுகொலை செய்த காணொளி வெளியான 12 மணி நேரத்தில், பிரித்தானியாவின் உளவு அமைப்புகளான எம் 15, எம் 16 மற்றும் ஜிசிஎச்கியூ ஆகியவற்றின் தலைவர்களை, பிரித்தானிய பிரதமர் கேமரூன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது, பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளவர்களை தலையை துண்டித்து கொலை செய்து வருகிற ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி ஜானின் (Jihadi John) இருப்பிடத்தைக் கண்டுபிடித்து கொல்லவோ அல்லது உயிரோடு பிடிக்கவோ உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten