[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 02:10.30 AM GMT ]
அண்மையில் தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சென்னை சென்றிருந்த உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இந்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தையானது இந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வடக்குகிழக்கில் இராணுவத்தினர் அதிக பிரசன்னம் மற்றும் காணி சுவீகரிப்புகள் என்பன தொடர்ந்தும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன
இது நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்தநிலையில் வடக்கு கிழக்கின் தலைமைகள், பெருந்தோட்ட தொழிலாளர்களின் தலைமைகள் மற்றும் தமிழ்பேசும் முஸ்லிம் தலைமைகள் என்பன தமது சமூகங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடவேண்டு;ம் என்றும் சுரேன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தகர்த்து இந்தியா, பிராந்திய தலைமைத்துவத்தையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவேண்டும் என்றும் சுரேன் கருத்து வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv3.html
கிறிஸ் நோனிஸ்சின் நடவடிக்கை தவறு - மன்னிப்புக் கோர வேண்டும்: ரணில்
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 04:27.36 AM GMT ]
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பிரிட்டனுக்கான சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த சுற்றுப்பயணத்தின் இடையில் முன்னாள் தூதுவர் கிறிஸ் நோனிஸ் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்திருந்தார். இந்தச் சந்திப்பு பர்மிங்காமில் நடைபெற்றிருந்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸின் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியின் ஆதரவைப் பெறும் நோக்கில் கிறிஸ் நோனிஸ், ரணிலைச் சந்தித்திருந்தார். எனினும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக, கிறிஸ் நோனிஸ் மீதுதான் தவறு என்று குற்றம் சாட்டிய ரணில், அவர்தான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, ஷேணுகா செனவிரத்தின இலங்கையின் மூத்த ராஜதந்திரிகளில் ஒருவர். வெளிநாட்டமைச்சின் செயலாளர். அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதற்கோ, மரியாதைக்குறைவாக நடத்துவதற்கோ எந்தவொரு ராஜதந்திரிக்கும் உரிமை கிடையாது. இவற்றுக்கு மேலாக அவர் ஒரு பெண். எனவே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பில் கிறிஸ் நோனிஸ் உடனடியாக ஷேணுகாவிடம் மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று ரணில் வலியுறுத்தியிருந்தார்.
ரணிலின் இந்தப் பதிலால் கடும் அதிர்ச்சியுற்ற கிறிஸ் நோனிஸ், மெதுவாக அங்கிருந்து நழுவிச் சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv7.html
Geen opmerkingen:
Een reactie posten