[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 12:41.40 AM GMT ]
கஜீபன் சர்மிளா நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சுவிட்ஸர்லாந்துக்கு செல்லவிருந்த பயணத்துக்கு தடைவிதிக்கப்பட்டது.
சுவிட்ஸர்லாந்துக்கு செல்வதற்கான உரிய வீசாவை கொண்டிருந்த போதும் அவரது கணவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதால் அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்மிளா, சிறிது நேரம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது சுவிஸ் அதிகாரிகள் சென்று அவரை விடுவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளை மீள்கட்டியெழுப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த கோபி கடந்த ஏப்ரலில் பதவியாவுக்கு அப்பால் உள்ள காட்டில் வைத்து படையினரால் கொல்லப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnvz.html
இலங்கை சந்தேக நபரை நாடு கடத்தல்: இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையில் முரண்பாடு?
[ திங்கட்கிழமை, 06 ஒக்ரோபர் 2014, 02:20.28 AM GMT ]
இந்தியாவில் அமைந்துள்ள அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தும் திட்டமொன்றை முன்னெடுத்ததாக இலங்கையரான சுலைமான் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுலைமான் என்ற இலங்கையரை மலேசிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணைகளுக்காக சுலைமானை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியுள்ளது.
சந்தேக நபர்களை நாடு கடத்திக்கொள்வது தொடர்பில் கடந்த 2012ம்ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எனினும், இலங்கைப் பிரஜை ஒருவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக மலேசியா அறிவித்துள்ளது.
இலங்கையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், விசாரணைகளுக்காக குறித்த இலங்கையரை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATaKWnv4.html
Geen opmerkingen:
Een reactie posten