தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

கோபியின் மனைவி கட்டநாயக்காவில் கைது ! தப்பிச் செல்ல பார்த்தார் என்கிறது அரசு !

புலிகளை மீளவும் கட்டி எழுப்ப பார்கிறார்கள் என்று ஒரு நாடகத்தை ஆடி, அதில் சம்பந்தப்பட்ட நபர்கள் என்று சொல்லி மூவரை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றது பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். இவர்களில் கோபி என்று அழைக்கப்படும், செல்வநாயகம் கயீபனின் மனைவி, சுவிஸ் செல்ல இருந்தவேளை கட்டநாயக்க விமான நிலையத்தில் வைத்து மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார். ஷர்மிலா என்னும் இந்த விதவைப் பெண், ஆவணங்களை சமர்பித்து முறைப்படி சுவிஸ் விசாவைப் பெற்றுள்ளார். அவர் நேற்று முந்தினம் கொழும்பில் இருந்து சுவிஸ் செல்ல தயாராக விமான நிலையத்தில் இருந்தவேளை சி.ஐ.டி பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இதேவேளை ஷர்மிலாவை கைதுசெய்து விமான நிலையத்தில் தடுத்து வைத்திருந்தவேளை, அவர் வைத்திருந்த விசா உண்மையான விசாவா என்று பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். அவர்கள் சுவிஸ் நாட்டு தூதுவரையும் இதுதொடர்பாக தொடர்புகொண்டு கேட்டுள்ளார்கள். சுவிஸ் நாட்டு அதிகாரி ஒருவர் நேரடியாகவே விமான நிலையம் வந்து, தாமே விசாவை வழங்கியதாகவும் ஷர்மிலா உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்காக சுவிஸ் செல்வதாகவும் கூறியுள்ளார். அத்தோடு அவரைக் கைதுசெய்யவேண்டாம் எனவும் சுவிஸ் நாட்டு அதிகாரி கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதனை சிங்களப் பொலிசார் நிராகரித்துள்ளார்கள். தற்சமயம் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஷர்மிலாவை வீட்டிற்குச் செல்ல பொலிசார் அனுமதியளித்துள்ளார்கள்.
ஆனால் சுவிஸ் செல்ல முடியாது என்று கூறியுள்ளார்கள். விசாரணைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால் அவர் சுவிஸ் செல்ல முடியாது என்று பயங்கரவாத தடுப்பி பிரிவினர் சுவிஸ் நாட்டு அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்கள். கடந்த ஏப்பிரல் மாதம் பதவியாக் காட்டுக்குள் வைத்து தாம், கோபியை சுட்டுக்கொன்றதாக இராணுவம் தெரிவித்து வருகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1163.html

Geen opmerkingen:

Een reactie posten