தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 6 oktober 2014

முல்லைத்தீவில் ஆசிரியர் தடியெடுத்து நடாத்திய தாண்டவம் - 4 மாணவிகள் வைத்தியசாலையில் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாலிநகர் மகாவித்தியாலயத்தில் ஆசிரியர் ஒருவர் நடாத்திய தாண்டவத்தில் 4 மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் பாடநேரத்தில் வாணி விழா நிகழ்வுக்கான நடனப் பயிற்சிக்கு இந்த நான்கு மாணவிகளும் சென்றுள்ளனர். இதனால் குறித்த பாட ஆசிரியர் இந்த நான்கு மாணவிகளையும் தண்டித்து அச்சுறுத்தியுள்ளார்.
தரம் 10 இல் கல்வி பயின்று வருகின்ற இந்த நான்கு மாணவிகளும் ஒருவர் பின் ஒருவராக மயக்கமடைந்துள்ளனர். இதனால் இம்மாணவிகள் மல்லாவி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக விளக்கம் கோரும் நோக்குடன் இம்மாணவிகளின் பெற்றோர்களும் பழைய மாணவர்களும் அதிபரிடம் சென்றபொழுது குறித்த ஆசிரியர் பாடசாலையிலிருந்து வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்வித் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/1162.html

Geen opmerkingen:

Een reactie posten