தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 oktober 2014

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது !

காரை நகர் பஸ் நிலையத்தில் CCT கமரா பொருத்திய லண்டன் நபர் !

[ Oct 02, 2014 05:25:04 PM | வாசித்தோர் : 7950 ]

காரைநகர் பேருந்து நிலையத்தில் தனியார் ஒருவரால் பொருத்தப்பட்டிருந்த 2 சி.சி.ரி கமராக்களை புதன்கிழமை (01) அகற்றியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். காரைநகர் பகுதியை சேர்ந்தவரும் தற்போது இலண்டனில் வசித்து வரும் ஒருவரே இந்த சி.சி.ரி கமராக்களை பொருத்தி, காரைநகரில் நடைபெறும் விடயங்களை அவதானித்து வந்துள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மேற்படி நபர் காரைநகர் அபிவிருத்தி சங்கத்துக்கு நிதியுதவி செய்பவர் என்றும், இவருடைய நிதியுதவிலேயே காரைநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருந்தது எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளார்கள். இவரால் கட்டப்பட்ட பஸ் நிலையத்திலேயே மேற்படி CCTV கமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த கமரா ஊடாக, லண்டனில் இருந்தே பார்க கூடிய அதி நவீன வசதிகளை அது கொண்டுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அருகில் உள்ள வை-பை மூலமாக இன்ரர் நெட் சென்று அதனூடாக வீடியோ காட்சிகளை அனுப்பக்கூடிய கமராவாக அது இருந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
மேற்படி 2க்கும் மேற்பட்ட கமராக்களை தாம் அகற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை பாதுகாப்பு காரணங்களுக்காக போடப்பட இக்கமராக்களை பொலிசார் அகற்ற இவ்வறு ஒரு நொண்டிச் சாட்டை சொல்கிறார்களோ தெரியவில்லை என ஊர் மக்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1128.html

கண்டியில் பாடசாலை வேனுக்குள் மாணவியை வல்லுறவு செய்த சாரதி கைது !

[ Oct 02, 2014 04:52:10 PM | வாசித்தோர் : 3385 ]
கண்டியில் உள்ள பிரபல மகளிர் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 17 வயது மாணவியை பாடசாலை வேனுக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கண்டி வாவி சுற்றுவட்ட சிவப்பு மதகு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் வல்லுறவு முயற்சி இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை பொலிஸார் சந்தேகநபரை மடக்கிப்படித்துள்ளனர்.
குறித்த மாணவி வேன் சாரதியால் மூன்று வருடங்களாக இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். சாரதியின் வேன் கறுப்புக் கண்ணாடி பொருத்தப்பட்டதெனவும் அது அகில இலங்கை அனைத்து மாவட்ட பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவை சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி வைத்திய பரிசோதனைக்கென கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1127.html

Geen opmerkingen:

Een reactie posten