நிபந்தனைகளுக்கு உட்பட்டால் பதவியை தொடரத் தயார் – கிறிஸ் நோனீஸ் !
[ Oct 02, 2014 04:33:07 PM | வாசித்தோர் : 1665 ]
தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தொடர்ந்தும் உயர்ஸ்தானிகர் பதவியை வகிக்கப் போவதாக நோனீஸ் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், கிறிஸ் நோனீஸ் தாக்குதல் சம்பவம் குறித்து வெளிவிவகார அமைச்சு இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் நடத்திய பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நோனீஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக தமது ராஜினாமா கடிதத்தை வெளிவிவகார அமைச்சிற்கு அனுப்பி வைக்கவில்லை எனத் தெரிவி;க்கப்படுகிறது.
http://www.athirvu.com/newsdetail/1125.htmlயாழில் எறிகணைக் கோதுகளை கொண்டு சென்ற நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் !
[ Oct 02, 2014 04:42:17 PM | வாசித்தோர் : 1315 ]
யாழ்ப்பாணத்திலிருந்து மாகோவிற்கு ஷெல்களின் வெற்றுக்கோதுகளை பட்டா ரக வாகனத்தில் கடத்தி சென்ற இருவரை மிருசுவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (30) மாலை கைது செய்ததாக கொடிகாமம் பொலிஸார் கூறினார்கள். அவர்களிடமிருந்து 5 ந்ஷல்களின் கோதுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறினார்கள்.
இரும்பு கொண்டு செல்வதாகக்கூறி அதனுள் மறைத்து ஷெல் கோதுகளை கொண்டு செல்லும் போது, மிருசுவில் பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் கூறினார்கள். இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1126.html
Geen opmerkingen:
Een reactie posten