மெக்சிகோவில் 12 ஆண்டுகளுக்கு முன் தனது தாயால் கடத்தப்பட்ட பெண் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு சப்ரினா என்ற சிறுமி, நான்கு வயதாக இருக்கும் போது அவளது தாயாரால் கடத்தப்பட்டார்.
இச்சிறுமியை தீவிரமாக தேடிவந்த நிலையில், மெக்சிகோவில் இருந்து 140 கி.மீ தொலைவில் உள்ள எல்டாபேடா ட்ளாக்ஸ்கலா என்ற நகரத்தின் அருகே தாயும், மகளும் இருப்பதை மீட்பு படையினர் கண்டுபிடித்தனர்.
தற்போது அப்பெண்ணுக்கு 17 வயதாகிறது, தனது மகள் உயிருடன் பாதுகாப்பாக இருப்பதாக வரும் செய்தி தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என அப்பெண்ணின் தந்தையான க்ரெக் அல்லன் தெரிவித்துள்ளார்.
இதற்காக ஒட்டு மொத்த குடும்பமும் மீட்பு படையினருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
க்ரெக்குக்கும், அவரது மனைவி டாரா மேரி லோரென்சுக்கும் இடையே விவாகரத்து ஏற்பட்டபோது சப்ரினா தந்தையின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்தே சப்ரினாவை அவளது தாய் கடத்திக் கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
http://world.lankasri.com/view.php?20260222222PPBdcceaAmOJJ4ceeM6AAbbdcccMQCdbddTlAA004255nZ2e044E8oo23\
|
Geen opmerkingen:
Een reactie posten