தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

பாலச்சந்திரனின் இன்றைய நாள் தெரிகிறதா…

பாலச்சந்திரனின் இன்றைய நாள் தெரிகிறதா…

இன்று (10/1/14) அன்புத் தம்பி பாலச்சந்திரனின் 16வது பிறந்தநாள்.. தமிழீழ தேசத்தின் மீது இனவெறியர்களும், ஏகாதிபத்தியங்களும் நடத்திய போரில் இனவிடுதலை கோரிக்கையான தனித்தமிழீழ கோரிக்கையை மனதில் ஏந்தி போரிட்டு வீரமரணம் அடைந்த போராளிகள் மற்றும் தமிழீழ மக்களின் உருவகமாக இருப்பவன் பாலச்சந்திரன்.. இனப்படுகொலைக்கு ஆளான தமிழ் மக்களின் ஒட்டுமொத்த சாட்சியாக இருக்கின்றான் பாலச்சந்திரன்.
பால் முகம் மாறாத அந்த பாலகனின் முகம் இங்கு தூங்கி கிடந்த அண்ணன்களை வீறு கொண்டு எழவைத்திருக்கின்றது வீரம் தெறிக்கும் அவனது விழிகள் ஈழச்சுடரை எமது கைகளில் திணித்து இனத்தின் விடுதலையை நோக்கி ஓடவைத்திருக்கின்றது. பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டு அவன் சுட்டு கொல்லப்பட்ட காட்சிகள், பாதுகாப்பான இடங்கள் என அறிவிக்கப்பட்ட இடங்களை நோக்கி ஓடி வந்த எம் மக்கள் குண்டு மழையால் கொடூரமாக கொல்லப்பட்டதை நினைவுபடுத்துகின்றது.
அவன் மார்பை துளைத்த ஒவ்வொரு குண்டுகளும் இனத்தை அழிக்க துடித்த இனவெறியர்களையும், எம் மண்ணனை சுரண்ட நினைத்த ஏகாதிபத்தியங்களையும்(அமெரிக்கா,இந்தியா,சீனா,ஜப்பான்) எங்களுக்கு நினைவுபடுத்துகின்றது. தான் கொல்லப்படப்போவது தெரிந்தும் மாறாத உறுதியை கொண்டிருந்த அவன் விழிகள், இறக்கப்போவது தெரிந்தும் இனவிடுதலைக்காக போரிட்டு உயிர்நீத்த என் போராளிகளை நினைவுபடுத்துகின்றது.
எம் மக்கள் மிகுந்த உவகையுடன் கொண்டாடிய உனது பிறந்தநாள் இன்று ஓட்டுமொத்த தமிழனத்தின் விடிவுநாளாக மாறியிருக்கின்றது. அன்புத் தம்பி, பாலச்சந்திரா! உன் சாட்சியாக, உனது அண்ணன்களாகிய நாங்கள் இன்றொரு சபதத்தை ஏற்றுக்கொள்கின்றோம், ”எமது வாழ்நாள் முழுவதும் உண்மையாகவும், உறுதியாகவும், நேர்மையுடனும் எம் இனத்தின் விடுதலைக்காக ”தனித்தமிழீழத்திற்காக” களமாடுவோம்” எள்ளளவும் என் இனத்திற்கு இழுக்கு ஏற்படும் அளவுக்கு எமது செயல்கள் அமையாது என்று” ஆயிரம் கைகளை ஒன்றிணைத்த வீர விழியே.. உன் வழி நின்று ஈழம் மீட்போமடா.., பாலச்சந்திரா! —–பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்palasintern palasintern-01
- See more at: http://www.asrilanka.com/2014/10/01/26585#sthash.PLAg8VYZ.dpuf

Geen opmerkingen:

Een reactie posten