தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

கோட்டாவை கொலை செய்தவர்களை அழைத்துவர முயற்சியாம்…

வடமராட்சியில் உருக்குலைந்த பெண்ணின் சடலம்!



விறகு வெட்டுவதற்காகச் சென்ற சிலர் அங்கிருந்த பெண்ணின் சடலத்தைக்கண்டு நெல்லியடி பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அங்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தச் சடலம் இதுவரை இனங்காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.Vadamarase-Death
http://www.jvpnews.com/srilanka/84825.html

கோட்டாவை கொலை செய்தவர்களை அழைத்துவர முயற்சியாம்…

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவர்கள் மேற்கண்ட தகவலை தெரிவித்தனர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர், மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட பின்னர் மலேசியாவுக்கு குடிபெயர்ந்து சென்றுள்ளார். அவர், இந்த வழக்கில் அரசதரப்பு சாட்சியாக்கப்பட்டவராவார். அவரை இலங்கைக்கு கொண்டுவர சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய சதி செய்தமை, கொலை செய்ய முயன்றமை என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் இருவர் மீது தொடரப்பட்ட வழக்குகள் விசாரணையின்போது, வழக்கு நடத்துனர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இவ்வாறு நீதிமன்றத்தில் கூறினார்.
முதலாவது குற்றவாளியான ரத்னாயக்க அல்லது சுது மல்லி, தமிழீழ வீடுதலை புலிகள் அமைப்பின் தற்கொலை படைபிரிவை சேர்ந்த தியாகராசா பிரபாகரன் அல்லது அன்பு மற்றும் பொட்டு அம்மான், செல்வமோகன் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்யமுயன்றார் என்று கூறப்பட்டுள்ளது, செல்வமோகன் பின்னர் அரசதரப்பு சாட்சியாக்கப்பட்டார்.
முதலாவது சந்தேக நபரான வீரகோனும் மூன்றாவது சந்தேக நபரான செல்வமோனகனும் 2009 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் திகதியன்று விமான நிலையத்தில் இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது சந்தேகநபர் கற்பிட்டியில் ஒளிந்திருக்கும்போது கைது செய்யப்பட்டார். இவர், வழங்கிய தகவலின் அடிப்படையில் அதிசக்தி வாய்ந்த வெடிப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் இரகசிய பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இந்த வழக்கு விசாரணை பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
http://www.jvpnews.com/srilanka/84828.html

Geen opmerkingen:

Een reactie posten