பிரதமராக மைத்ரிபால சிறிசேன??
பொலன்னறுவ மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனை ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுகாதார அமைச்சர் மைத்ரிபால சிறிசேனவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக பிரதமர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/84834.html
9வயது சிறுவன் அ’புரத்தில் மீட்பு
http://www.jvpnews.com/srilanka/84837.html
கோத்தாவிற்கு கேர்ணல் ஹரிஹரனின் செய்தி
விடுதலைப்புலிகளும், அரச படையினரும் வடபகுதியில் கடந்த 25 வருடங்களாக யுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களில் 100.000 பேர்வரை இருதரப்பிலும் உயிரிழந்தனர். விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு,யுத்தத்தில் தமது குடும்பத்தவர்களையும்,வாழ்வாதாரத்தையும், சொத்துக்களையும் இன்னும் பெருமளவு விடயங்களையும் இழந்த வடபகுதி மக்கள் அதிலிருந்து மீளவில்லை.
கடந்த 5 வருடங்களில் அரசாங்கம் பொதுத்துறையை மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்தியுள்ளது. மக்களின் அரசியல் மற்றும் பொருளாதார, உயிர்வாழ்தல் குறித்த விடயங்களுக்கு தீர்வு காணவோ அல்லது அதில் அக்கறை செலுத்தவோ அரசு தவறியுள்ளது. அதன் காரணமாக தனது மக்கள் மத்தியில் நம்பிக்கையையோ அல்லது பாதுகாப்புணர்வையோ ஏற்படுத்த அது தவறியுள்ளது.
அரசாங்கம் புனர்வாழ்வு என்ற விடயத்தை மிகவும் உணர்வுபூர்வமாக அணுகியிருந்தால், தமிழ்மக்கள் அதிகமாக வாழும்பகுதியில் இராணுவத்தின் பிரசன்னத்தை யாரும் எதிர்த்திருக்க மாட்டார்கள். அதிகார பகிர்வு குறித்த காப்பாற்றப்படாத வாக்குறுதிகள்
வந்த காலப்பகுதி முதல் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்க்கும், சர்வதேச சமூகத்திற்க்கும் வடக்கு, கிழக்கு மாகாணசபைகளுக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்து வருகின்றார். 2008 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்துவிற்க்கு வழங்கிய பேட்டியில் அவர் தனது நான்கு டி(ன) அணுகுமுறை குறித்து குறிப்பிட்டிருந்தார்.
அரசமைப்பின் 13 திருத்தம் இந்தியாவின் வற்புறுத்தலின் கீழ் கொண்டுவரப்பட்ட வேளை இரு தரப்பிலும் அரசியல் உறுதிப்பாடு இல்லாததால் அதனை வடக்குகிழக்கில் நடைமுறைப்படுத்தப்படமுடியவில்லை. எனினும் அரசியல் தலைவர் என்ற முறையில் இதனை நடைமுறைப்படுத்தப் போவதாக தனது அரசாங்கத்தின் விருப்பத்தை அவர் வெளியிட்டிருந்தார்.
தமிழ்மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்க்கும் நாங்கள் உறுதிமொழி வழங்கியுள்ளோம், நாங்கள் இதனை செய்யப்போகின்றோம், இதனை யாரையும் திருப்திபடுத்த செய்யவில்லை, இது நாட்டு மக்களுக்கான எனது கடமை’’ என அவர் குறிப்பிட்டார். எனினும் அவர் தனது வாக்குறுதிகளை காப்பாற்றவில்லை, அதன்பின்னர் அவர் தனது 4டிகள் குறித்து தற்போது பேவதில்லை, மறந்து விட்டார்.
ராஜபக்ச 13 திருத்தத்தை அமுல்படுத்துவதுடன் அதற்க்கு அப்பாலும் செல்வதாக உறுதியளித்த காரணத்தினாலேயே தமிழ்நாட்டின் அழுத்தங்களையும் மீறி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சாவின் ஈழயுத்தத்திற்க்கு இந்தியா ஆதரவளித்தது.தமிழ்தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் மேற்கொண்ட 15 சுற்று பேச்சுக்களின் போது முன்வைத்த நிபந்தனைகளில் எவற்றை தன்னால் வழங்க முடியும், எவற்றை வழங்க முடியாது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
கருத்துடன்பாட்டை எட்டுவதை பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் விட்டுள்ளேன் என்ற தந்திரோபாயத்தை அவர்கையாள்கிறார். பாராளுமன்ற தெரிவுக்குழு குறித்து நம்பிக்கை இல்லாததால் எந்த எதிர்க்கட்சியும் அதில் கலந்துகொள்ளவில்லை. கட்டமைப்பு பிரச்சினைகள்
யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நிலங்கள் குறித்த ஆவணங்கள் இல்லாத நிலைகாணப்படுகின்றது. ஆகவே விசாரணை மூலமாக இதனை உறுதிப்படுத்துவதற்க்கு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நடவடிக்கை மிகவும் தாமதமாக முன்னெடுக்கப்படுவதால் இராணுவம் நிலங்களை உரியவர்களிடம் கையளிப்பதை தாமதப்படுத்துகின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் தொடுத்த வழக்குகள் இன்னமும் நீதிமன்றத்தில் உள்ளதும் முக்கியமானது. வடமாகாண முதலமைச்சர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் காணப்படுகின்றார், தேர்தல் வேளையில் காணிகள் உரியவர்களிடம் திருப்பி கையளிக்கப்படுவதை உறுதிசெய்வோம் என தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுpவழங்கியிருந்தது. முக்கிய விவகாரங்களை விட்டுவிடுவோம் தனது பிரதம செயலாளர் நியமனத்தை கூட தனது விருப்ப்படி மேற்கொள்ள முடியாத நிலையில் அவர் உள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் கொழும்பி;ற்க்கும் யாழ்ப்பாணத்திற்க்கும் இடயையெ மோதல் மனோநிலையே காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு இயல்பாகவே சீற்றமடைந்துள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சுமை.
யுத்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் விடுதலைப்புலிகளின் சார்பில் செயற்பட்டது.விடுதலைப்புலிகளினதும், சுதந்திர தமிழ் தாயகத்தினதும் தீவிர ஆதரவாளர்களான அதன்சில உறுப்பினர்களால் விடுதலைப்புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமலுள்ளது. தமிழர் பகுதிகளில் மீண்டும் கால்பதிக்க முயலும் எஞ்சியிலுள்ள வெளிநாட்டு விடுதலைப்புலிகளுக்கு அவர்களது ஆதரவான கருத்துக்கள் உதவியாகவுள்ளன.
அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு காணப்படாவிட்டாலும், தோற்கடிக்கப்பட்ட ஒருமுயற்சியே இராணுவத்தின் சந்தேகங்களை கிழப்பிவிடுவதற்க்கு போதுமானது. இது தமிழ்புலிகளின் மீள் எழுச்சி குறித்த அச்சத்தை சிங்கள மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.இவ்வாறான அச்சத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வது ராஜபக்சவிற்க்கு அரசியல் ரீதீயாக சாதகமான விடயம், வடபகுதியில் இராணுவத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான நியாயப்படுத்தலிற்க்கும் இது உதவுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்க்குள் காணப்படும் பிரிவினைவாத மற்றும் தீவிரவாத குரல்களை கட்டுப்படுத்துவதற்கான யதார்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து கட்சி தலைமையிற்க்குள் காணப்படும் கருத்துவேறுபாடு காரணமாக கட்சி இரு குரலில் பேசுகின்றது. இதன் காரணமாக இனப்பதற்றம் என்பது தொடர்ந்து காணப்படுகின்றது.
தமிழில் ஈசா
http://www.jvpnews.com/srilanka/84840.html
Geen opmerkingen:
Een reactie posten