[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 07:18.05 AM GMT ]
ஐக்கிய தேசியக் கட்சியின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த மின்சக்தி, எரிபொருள்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இந்தத் தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் மின்சார சபை குறித்த 16 கோடி ரூபா அளவில் நட்டமடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அதே காலகட்டத்தில் இடைத்தரகர் நிறுவனங்களின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட நிலக்கரியிலும் சுமார் நூற்றைம்பது கோடிரூபா பணம் விரயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விசாரணைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தில் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும் தனது ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை இவ்வளவு தெளிவாக பட்டியலிட்டு வெளிப்படுத்தியதில்லை.
அந்த வகையில் அரசாங்கம் ஏதோ ஒரு திட்டத்துடனேயே இந்த ஊழல்களை பகிரங்கப்படுத்தியிருப்பதாக சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே கடந்த 2012ம் ஆண்டில் மின்சார, எரிபொருள் அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க, தற்போது அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXntz.html
சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்தான் எனக்குப் பிடிக்கும்! அர்ஜுன பூடகம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 07:21.32 AM GMT ]
சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அர்ஜுண, ஐ,தே.க. வுக்கு கட்சி மாறப் போவதாக அண்மைக்காலங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பாக கொழும்பு டுடே செய்திச் சேவை அவரது கருத்தைக் கேட்டிருந்தது.
பொதுமக்களுக்கு நல்லது செய்யும் ஒருவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதன் போது கட்சி, வேறுபாடுகள் பார்க்கக் கூடாது.
என்னைப் பொறுத்தவரை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகள்தான் பிடித்தமானவை . இடதுசாரிக் கட்சிகளின் அரசியலும் பிடித்தமான விடமாகும் என்று பூடகமாக கருத்து வெளியிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு கட்சி மாறப் போவதை தனது ஆதரவாளர்களிடமும் பகிர்ந்து கொண்டிருந்த அர்ஜுண, தற்போது திடீர் பல்டி அடித்து இவ்வாறு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt0.html
அஷ்ரப் போன்று தீர்மானத்தை எடுக்க வேண்டும்: ரவூப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 07:28.30 AM GMT ]
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எ.மன்சூர் தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உறையாற்றும் போதே இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற ஒரேயொரு பாதுகாப்பு கவசம் முஸ்லிம்களின் தனித்துவமான அரசியலாகும் இதை எம்மவர்கள் மறக்க கூடாது.
நமது கட்சி அரசுக்குள் எதிர்கட்சியாக செயல்படுகின்றது. இது ஜனாதிபதிக்கு தலையிடியாக இருந்தால் அதில் எந்த தவறும் இல்லை என்னுடைய இயக்கத்தின் தார்மீக பொறுப்பு அதுவாகும்.
மறைந்த தலைவர் பிரேமதாஸ ஜனாதிபதியாக்கிய பின்னரும் எதிர்கட்சியில் இருந்தார் மறைந்த தலைவர் அஷ்ரப், அனால் நான் ஜனாதிபதியின் எதிரியாக இருக்கின்றேன். இப்படியான சூழ்நிலையிலே நாம் இருக்கின்றோம்.
கட்சி மட்டத்திலும், சிவில் மட்டத்திலும் கலந்துரையாடி தீர்க்கமான முடிவையும் மேற்கொள்வோம்,கட்சியையும் முஸ்லிம் மக்களையும் பாதுகாப்பது கட்சியின் தீர்க்கமான முடிவாகும் அதை எப்படி செய்யவேண்டுமென்பது மசூரா அடிப்படையில் மிக நிதானமாக நேர்மையாக சுயநலமற்று நாம் தீர்மானம் எடுப்போம் அதற்காக எந்த தியாகத்தையும் செய்வோம் என்றும் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnt1.html
Geen opmerkingen:
Een reactie posten