தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

ரவுடிகளால் ரணகளமாகும் யாழ்ப்பாணம் !

விடுதலைப்புலிகளை நினைக்க வைக்கும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்கின்றன. விடுதலைப் புலிகள், கடந்த காலத்தில் செய்தவைகள் நல்ல செயல்களா ? தீமையான செயல்களா என பட்டிமன்றம் போட்டு வாதிடுவோர் கூட சொல்லும் ஒரு விடையம் உள்ளது, புலிகளால் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட ரவுடிகளின் சாம்ராஜ்யமே ஆகும். அத்துடன் புலிகளின் காலத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் கொலை கொள்ளை போன்றவைகளும் மிகச் சொற்ப வீதத்திலேயே காணப்பட்டன.
இது யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இடங்களிலும் இவ்வாறான நிலை இருந்தது. இதே வேளை புலிகள் இல்லாத காலப்பகுதியிலும் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் அடங்கி ஒடுங்கியிருந்தனா் ரவுடிகள். மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தினாலேயே அவா்களைப் படையினா் மறித்து கும்பாபிசேகம் செய்த சம்பவங்களும் போர்க்காலத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் தற்போது நிலமை தலைகீழாக மாறிவிட்டது. கூட்டுக்குள் அடைபட்டுக் கிடந்த குரங்குகளுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்ட நிலமைபோல் ஆகிவிட்டது தற்போதய யாழ்ப்பாண இளம்சமூகத்தின் நிலை.
ஆவா குறுாப், பாவா குறுாப், சங்கிமங்கி குறுாப் என பல ரவுடிக் கூட்டங்கள் உருவாகி வடபகுதி மக்களின் நிம்மதியைச் சீரழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இளம் பெண்கள் தெருவால் செல்லமுடியாத நிலை யாழ்ப்பாணம் உட்பட்ட பிரதேசங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. ரவுடிகள் அதிகம் நடமாடும் பகுதிகளாக தனியார் கல்வி நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், பேரூந்துநிலையங்கள், கோவில்கள் போன்ற இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள பொலிசாரும் இந்த ரவுடிகளுக்கு துணைபோவதாக மக்கள் சந்தேகப்படுகின்றார்கள். அத்துடன் சில பொலிஸ்நிலையங்கள் ரவுடிகளை பிடித்து நியாயமான முறையில் நீதிமன்றத்தில் ஒப்படைத்தாலும் அங்கு வரும் சட்டத்தரணிகளால் அவா்களுக்கு சுலபமான முறையில் பிணை கிடைத்து வெளியே வந்து மீண்டும் அட்டகாசத்தில் ஈடுபடுகின்றார்கள்.
புலிகளில் காலத்தில் யாழ்ப்பாணத்தில் வேலை இல்லாமல் இருந்தவா்களில் முக்கியமானவா்கள் இந்தச் சட்டத்தரணிகள் ஆவார். ஆனால் தற்போது இவர்களுக்கு தான் வேலை அதிகமாக உள்ளது. காசுக்காக ரவுடிகளை வெளியே எடுக்கும் இவர்கள் அவர்களுக்கு புத்திமதி கூட சொல்வதே இல்லை. அண்மையில் கொக்குவில் பகுதியில்நடந்த சம்பவம் ஒன்றில் மோட்டார் சைக்கிளில் தனது மகளை ஏற்றிக் கொண்டு தனியார் கல்வி நிலையத்திற்குச் சென்றுள்ளார் தந்தை. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவா் பின்னால் இருந்த மகளை அங்கசேட்டை செய்துவிட்டு சென்றுள்ளனா். தந்தை பதற்றத்தில் மோட்டார் சைக்கிளை மதிலுடன் மோத விட்டதால் தந்தையும் மகளும் காயமடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ் பெருமாள் கோவிலுக்கு அருகில் கண்ணாதிட்டி வீதி சந்திக்கும் சந்தியில் ஒரு கடையின் அருகே சில ரவுடிகள் நின்று அப்பகுதியில் உள்ள கல்வி நிலையத்திற்கு வரும் மாணவிகளுடன் பெரும் சேட்டைகளில் ஈடுபடுவதாக தெரியவருகின்றது. இது தொடா்பாக யாழ் பொலிசாருக்கு பல தடவை தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியும் பொலிசார் அசண்டையீனமாக இருக்கின்றனா். குடாநாட்டில் சேவையில் ஈடுபடும் தனியார், அரச பஸ்களிலும் ரவுடிகளில் அட்டகாசம் அதிகரித்துள்ளது. மது போதையில் பஸ்களில் ஏறும் ரவுடிகள் பெண்களுடன் அங்கசேட்டையில் ஈடுபடுவதும் தகாத வார்த்தைப் பிரயோகங்கள் மேற்கொள்வதுமாக இருப்பதாக தொடா்ச்சியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு, கிழக்குப் பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த போது யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரிப் பகுதியில் தெருவில் சென்ற ஒரு யுவதியை துாசணத்தால் பேசிய நபா் ஒருவரைப் பிடித்த புலிகள் அந் நபருக்கு பேசிய இடத்தில் வைத்தே பச்சைமிளகாய் கொடுத்த சம்பவமும் இடம் பெற்றதை நாம் இங்கே நினைவு கூற விரும்புகிறோம்.... இனி என்னவெல்லாம் நடக்க இருக்கிறதோ ?
http://www.athirvu.com/newsdetail/1272.html

Geen opmerkingen:

Een reactie posten