லண்டன் ஹரோவில் தமிழீழ பெண்கள் எழுச்சி நாள்: வரும் ஞாயிறு மாலை நடைபெறும் !
[ Oct 22, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 1740 ]
தமிழீழத்தில் ஆக்கிரமிப்புத் துயரப் புதர் முட்கள் கீறிக் கிழித்திட துடித்தெழுந்த பெண்கள் விடுதலைப் போராட்ட வரலாறு படைத்தனர். உலகமே வியக்கும் வகையில் படையணி நகரும் பெண்கள் படையணி நகரும் என உறுதியோடு இலட்சியப் பாதையில் பயணித்தனர். பெண் என்பதற்காக அடக்கப்படுகின்ற குமுகாயச் சீர்கேடுகளை உடைத்தெறிந்தனர். அரசியல், பொருளாதார, குமுகாய அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெண்கள் புரிந்த ஈகங்கள் ஈடிணையற்றவை. இன்று வரை அரச பயங்கரவாதத்திற்கு முகங் கொடுத்துப் பெண்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
எமது தாய் நிலமான புலத்திலும், புகலிடங்களான புலம் பெயர் நாடுகளிலும் பெண்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்கின்ற போதும் தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கின்றனர். உலகெங்கும் பரந்து வாழ்கின்ற போதும் தமிழீழம் என்னும் இலக்கை அடைவதற்கான பயணத்தில் நாம் எல்லோரும் ஒன்றுபடுதலின் அவசியத்தை அனைவரும் உணர்ந்துள்ளனர். எனவே காலத் தேவை உணர்ந்து அனைவரும் காத்திரமான பணி புரிய ஒன்று பட்டு உழைப்போம் என விடுதலைக்காக விதையானோர் மீது வீர உறுதி எடுப்போம். இம்மாதம் 26ம் நாள் 2ம் லெப் மாலதியின் நினைவு வணக்க மற்றும் தமிழீழப் பெண்கள் நாள் எழுச்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரும் வாருங்கள்.
பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்
http://www.athirvu.com/newsdetail/1271.htmlதேவியனின் தாயாருக்கு 6 வருட கனடா விசா எப்படி கிடைத்தது என்று விசாரணை !
[ Oct 22, 2014 05:06:27 AM | வாசித்தோர் : 8595 ]
யாழ்ப்பாணம், சாவக்கச்சேரியிலிருந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை காலை 1மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்த அவர், அதிகாலை 4.45க்கு பயணிக்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான கிவ்.ஆர் 683 விமானத்தின் மூலம் டோஹா ஊடாக கனடாவுக்கு செல்லவிருந்ததாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கஜீபனின் தயார் வைத்திருந்த ஆவணங்கள் போலியானவை என்று கூறியே முதலில் அவர் கைதுசெய்யப்பட்டார். ஆனால் அவை அனைத்தும் சரியான முறையில் பெறப்பட்டவை என்று பின்னர் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளார்கள். அத்தோடு அவர் எவ்வாறு 6 வருட கனேடிய விசாவைப் பெற்றார் என்று தெரியவில்லை என்றும் , இது தொடர்பாக தாம் கனேடிய தூதுவரிடம் விளக்கம் கேட்க்கவுள்ளதாகவும் புலனாய்வுத்துறையினர் மேலும் தெரிவித்துள்ளார்கள்.
விடுதலைப் புலிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் உதவ என புலம் பெயர் நாட்டில் ஒரு அமைப்பு கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் பல அன்னிய சக்திகள் இணைந்துள்ளதாகவும் சிங்கள புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளார்கள். இதில் சில நாட்டு அரசாங்கங்களும் இணைந்துள்ளனவா என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். விசாரணைகள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அது முடியும்வரை தாம் கஜீபனின் தாயாரை நாட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/newsdetail/1273.html
Geen opmerkingen:
Een reactie posten