[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 01:15.31 AM GMT ]
பாணந்துறை ஹொரோதுடுவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் எந்தவொரு நன்மையையும் அளிக்கவில்லை.
"மஹிந்தவிற்கு முடியும் என" எல்லா இடங்களிலும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளார்.
எனினும் நாம் நினைக்கின்றோம் மஹிந்தவிற்கு மூன்றாம் தடவை போட்டியிட முடியாது என்று, போட்டியிட்டாலும் வெற்றியீட்ட முடியாது.
தற்போது ஜனாதிபதி மஹிந்தவின் ஜாதகத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
ஊவா மாகணசபைத் தேர்தலில் மக்கள் சிறந்த பாடமொன்றை அரசாங்கத்திற்கு கற்பித்தனர்.
இந்த அரசாங்கத்தில் அநேகமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பது மக்களுக்கு தெரியும்.
அன்று எங்களது படைவீரர்களை, பௌத்த பிக்குகளை கொலை செய்த கருணா அம்மானை ஜனாதிபதி மடியில் வைத்து பாலூட்டுகின்றார்.
எனினும் ஜனாதிபதி நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என குறிப்பிடுகின்றார்.
நாட்டின் பெரும்பகுதி சீனாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ராஜபக்ச குடும்பம் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கின்றது.
நாட்டு மக்கள் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மத்தள விமான நிலையம்ää ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றை சீனாவிற்கு வழங்க தற்போதே திட்டம் தீட்டப்பட்டுள்ளது
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தீர்மானம் மிக்கதொன்றாகும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWer3.html
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அரவிந்த டீ சில்வா வீடுகளில் கொள்ளை
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 01:30.59 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் வீடு நேற்று முன்தினம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நுகோகொட்டை அம்புல்தெனியவில் அமைந்துள்ள வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் சுமார் ஏழு லட்ச ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டுள்ளனர்.
வீட்டில் எவரும் இல்லாத நேரத்தில் தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைரும் சிறந்த துடுப்பாட்ட வீரரமான அரவிந்த டீ சில்வாவின் வீடு கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொழும்பு தேர்ஸ்டன் வீதியில் அமைந்துள்ள வீட்டில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் பாதுகாப்பு பெட்டகமொன்றில் வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு வெளிநாட்டுப் பணம் இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
அரவிந்த மற்றும் அவரது மனைவி விடுமுறையை கழிப்பதற்காக இங்கிலாந்து சென்றிருந்தனர்.
காப்புப் பெட்டகம் திறக்கப்பட்டு பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
நேற்று நாடு திரும்பிய அரவிந்த காப்புப் பெட்டகத்தை பார்த்த போது பணம் கொள்ளையிடப்பட்டதனை அறிந்து கொண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இரகசிய குறியீட்டு இலக்கத்தைப் பயன்படுத்தி காப்புப் பெட்டகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த இரகசிய இலக்கம் அரவிந்த, அவரது மனைவி மற்றும் அரவிந்தவின் தாய் ஆகியோருக்கு மட்டுமே தெரிந்திருந்தது எனத்தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் வீட்டில் பணியாற்றி வந்த 8 ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த காப்புப் பெட்டகத்தில் இலங்கையின் முன்னணி ஜோதிட நிபுணர் ஒருவரின் வெளிநாட்டுப் பணமும் வைக்கப்பட்டிருந்தது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWer4.html
அபிவிருத்திக்காக உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: அரியநேத்திரன் பா.உ
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 02:15.25 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளி கிராமத்தில் லண்டன் நம்பிக்கை ஒளி நிறுவனத்தின் நிதியுதவியின் மூலம் மட்டக்களப்பு உலக நண்பர்களின் தேவைகளுக்கான அமைப்பினால் படுவான்கரை மீனவர்களுக்கு வலைகள், தோணிகள் என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது தமிழ் மக்களும் சலுகைகளுக்காக ஒருபோதும் வாக்களித்ததாக சரித்திரம் கிடையாது. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் எவ்வித சலுகையும் இல்லை என்று தெரிந்தும் எமது இனத்திற்கான தனித்துவத்தினை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவே தமிழ் மக்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தங்கள் வாக்குகளை வழங்குகின்றார்கள் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.
நாம் வாக்களிப்பது தமிழர் என்கின்ற எமது தேசிய இனம், நாம் தமிழ் மக்கள் என்று சொன்னால் அனைத்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பது அனைத்து தமிழர்களினதும் கடமையாகும். ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கின்றது. நாம் பௌத்தர்களாக இருந்தால் நிச்சயமாக ஒரு சிங்களக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். நாம் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு தனித்துவமாக கட்சிகள் இருக்கின்றது. அவர்கள் தமிழ் கட்சிகளுக்கு வாக்களிக்கவும் மாட்டார்கள் வாக்களிப்பதும் தவறு. அதுபோலவே தமிழர்கள் நாங்கள் எமது தனித்துவம் கலாச்சாரம் பேணப்பட வேண்டும் என்று சொன்னால் எமது நிலம் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும்.
எமது தற்துணிவினை நாம் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் நாம் தொடர்ச்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கத்தான் வேண்டும். இதனை நாம் மனதார கிரகித்துச் செய்ய வேண்டிய கடமை உரிமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது.
65 வருடங்களாக எமக்கு சுதந்திரம் வேண்டும் உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறுபட்ட தியாகங்களை போராட்டங்களை மேற்கொண்டோம். 30 வருட அகிம்சை முப்பது வருட ஆயுதம் என்று தற்போது இராஜதந்திர ரீதியிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியாகச் சென்றிருக்கின்றது இதற்கு காரணம் எமது தமிழ் மக்கள் உறுதியாக தனித்துவத்தினை பேணியதன் காரணமாகத்தான் இன்று இவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது.
தற்போது அண்மைய செய்திகளைப் பார்த்தீர்களாக இருந்தால் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையினை நீக்கம் செய்து விட்டது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 27 நாடுகள் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை இந்தியா அமெரிக்கா போன்ற ஏறக்குறைய 40 நாடுகள் தடை செய்திருக்கின்றது. தற்போது அதில் உள்ள சில நாடுகள் அத்தடையினை நீக்கியுள்ளது. இந்த தடை நீக்கமானது எமது பிரச்சனை சர்வதேச ரீதியில் சென்றுள்ள நேரத்தில் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாக இருக்கின்றது.
இது அடுத்த கட்டத்திற்கான அதாவது எமது தேசியப் பிரச்சனையை பேசித் தீர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கின்றது. நாம் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் நாம் எவ்வாறு இருந்தாலும் எதை இழந்தாலும் எமது இறுதி இலக்கை அடைவதற்காக எம்மை நாங்கள் பலப்படுத்தியவர்களாகவும் எம்மை நாமே ஆளக் கூடிய தலைமை தேவை என்பதை உள ரீதியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்களுக்கு இவ்வாறான உதவிகள் புரிகின்ற எமது புலம்பெயர் உறவுகளின் நிறுவனங்கள் அவர்கள் வெளிநாடுகளில் இரவு பகலாக அந்த குளிருக்குள் கஷ்டப்பட்டு உழைக்கின்ற பணத்தில் ஒரு தொகையினை எமது தாயக மக்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று சேகரித்து அதன் மூலமே இவ்வாறான உதவிகள் புரிகின்றார்கள். அவர்களின் இவ் உதவிகள் வீணாகிவிடக் கூடாது.
இதன் மூலமான நல்ல பிரதிபலிப்புகளை நாம் அவர்களுக்கு காட்ட வேண்டும். இவ்வாறு இந்த வெளிநாட்டு அமைப்புகளில் பெரும்பாலும் வடமாகாண மக்களே இருக்கின்றார்கள். அவர்களுக்குள் வடக்கு கிழக்கு என்ற பாகுபாடு இல்லை. அவர்கள் தமிழர்கள் எமது இனம் என்ற ஒரு சிந்தனையிலேயே எமது மாகாண மாவட்டங்களுக்கு உதவிகள் புரிகின்றார்கள். அவர்கள் வழங்குகின்ற இவ்வுதவிகளை நாம் சிறப்பாக பயன்படுத்துகின்ற போது மேலும் மேலும் பல உதவிகளை அவர்களிடம் இருந்து நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களும் எமக்கு உதவிகள் செய்வதற்கு தயாராகவே இருக்கின்றார்கள்.
எமது வாக்குரிமை என்பது மிகவும் முக்கியமானது. அதனை நாம் மதிக்க வேண்டும் அது எமது உரிமையுமாகும். அபிவிருத்தி என்பதற்காக நாம் எமது உரிமைகளைப் விட்டுக்கொடுக்க முடியாது. அற்ப சலுகைகளுக்காக நாம் வாக்களிப்போமாக இருந்தால் அது எமது இனத்திற்குச் செய்யும் துரோகமாகும். அவ்வாறு நாம் செய்வோமாக இருந்தால் எமது இனத்தை மொழியை குலத்ததை மதத்தினை அனைத்தையும் நாம் கொல்கின்றவர்களாகவே கருதப்படுவோம்.
கடந்த தேர்தல்களில் எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் இருந்திருந்தால் எமது மாவட்டத்தில் படுவான்கரையின் எல்லைக்கிரமாங்களின் அத்துமீறிய சிங்கள மயமாக்கல் இடம்பெற்றிருக்கும் அதனை தடுத்து நிறுத்தியவர்கள் இன்று தடுத்துக் கொண்டிருப்பவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமே ஏனைய அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் வெறுமனே அவர்களின் சுகபோகங்களை பார்ப்பவர்களாகவே இருக்கின்றார்கள். எமது இனத்தின் நிலம், மொழி, கலாச்சாரம், பண்பாடு என்பனவற்றைத் தக்க வைத்துக்கொள்ள இருக்கும் ஒரே கட்சி எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம் தான்.
எனவே இவ்வாறான விடயங்களை நாம் கருத்திற் கொள்ள வேண்டும். இனி தேர்தல் வரப் போகின்றது பலர் வருவார்கள் பலர் பலவாறான கருத்துக்களைக் கூறுவார்கள். நாம் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஆனால் அது தொடர்பில் ஆளமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARWKWer5.html
அவுஸ்ரேலியா அகதிகளை நடத்தும் விதம் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் சுயேட்சை அமைச்சர்: வில்கி
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:03.02 AM GMT ]
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
அகதிகள் தொடர்பாக அவுஸ்ரேலியா அரசாங்கம் மனித உரிமை ,அகதிகள் சட்டம் ஆகியவை மீறியுள்ளதாகவும், தஞ்சம் கோருவோர் தொடர்பாக அரசாங்கத்தின் நடத்தை மேலும் அகதிகள், குழந்தைகள் உரிமைகள் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை மாநாட்டுக்கு முரண்பாடாக இருக்கின்றது.
அகதிகள் சாசனத்தின் படி சிறுவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது ,படகுகள் மூலம் வந்த அகதிகளின் பாதுகாப்பு கோரிக்கை விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் பரிசீலிக்கும் முறை சட்டத்துக்கு முரணானது, அரசின் கடும் போக்கு கொள்கை ,பலவந்தமான இடமாற்றம் ,கட்டாய தடுப்பு காவல் ,பெண்களை நடத்தும் விதம் அனைத்தும் மனித உரிமை மீறலை இந்த அரசாங்கம் செய்கின்றது என்பதை தெளிவாக காட்டுகிறது.
அகதிகள் தற்போது அவுஸ்ரேலியாவில் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும்,தடுப்பு காவலில் தம்மை தாமே துன்புறுத்தும் சம்பவம் இவை அனைத்தும் இந்த அரசின் மனித உரிமை மீறலேயே காட்டுகின்றது.
இது தொடர்பாக குடிவரவு அமைச்சர் மொரிசனிடம் கருத்து கேட்டுள்ளார்.
இவை அனைத்துக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszARWKWer7.html
Geen opmerkingen:
Een reactie posten