தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

அரசியல் கோமாளிக்கு கிடைத்துள்ள ஆட்சி அதிகாரம்: தமிழ் நாட்டையே மிரட்டுகிறார்

அரசியல் கோமாளி என்று அனைவராலும் அழைக்கப்படும் சுப்பிரமணிய சுவாமி, சில வருடங்களுக்கு முன்னர் தனது கட்சியைக் கலைத்துவிட்டு பஜக வில் இணைந்தார். அன்று முதல் பல சர்சைகள் தோன்றியுள்ளது. இலங்கை அரச அதிபர் மகிந்தரின் நெருங்கிய நண்பரான சுப்பிரமணிய சுவாமி மோடியை தனது கைக்குள் போட்டுக்கொண்டு ஆடி வரும் நடகமே தனியாகும். செல்வி ஜெயலலிதா சிறையில் உள்ளதை பயன்படுத்தி தமிழர் விரோதப் போக்கை சுவாமி அரங்கேற்றி வருகிறார். இதேவேளை செல்வி ஜெயலலிதா கைது தொடர்பாக தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் ஜனநாயகப் போராட்டங்களை முடக்கவும் சு.சுவாமி யுக்தியைக் கையாண்டுள்ளார். அதாவது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள 356 வது பிரிவைப் பாவித்து அதிமுக வின் ஆட்சியை கலைக்க அவர் தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு மோடியும் உடந்தையாக உள்ளாரோ என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளது. மோடி மிகவும் மெளனமாக இருப்பதும், இலங்கை விவகாரம் தொடர்பாக சு.சுவாமி அதிகம் பேசுவதும் பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதுவரை கலமும் சோனியா காந்தியும் காங்கிரசுமே ஈழத் தமிழர்களின் பெரும் எதிரி என்று பலர் எண்ணி வந்தார்கள். ஆனால் நரேந்திர மோடி , ராஜபக்ஷவை விட மிகவும் மோசமான நபர் என்று பலர் கருத்துச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தவேளை, எத்தனை முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள் என்பது பலர் அறிந்த விடையம். தற்போது அமெரிக்காவுடன் இணைந்துள்ள மோடி, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது. இதன் எதிரொலிதான் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் பிரதி பலித்துள்ளது.
அதாவது விடுதலைக்காகப் போராடிய புலிகள் இயக்கம் பற்றி இனி வரும் காலங்களில் எந்தச் சந்ததியும் பேசக்கூடாது என்பது மோடியின் கொள்கையாக உள்ளது என்று கூறப்படுகிறது. அவர் அறிவுரைக்கு அமைவாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் முன் நாள் போராட்டக் குழுவினரை புறம் தள்ள ஆரம்பித்துள்ளார். இது புலிகளை மட்டும் அல்ல, அனைத்து போராட்ட குழுக்களையும் குறிவைத்தே நடத்தப்படுகின்ற விடையம் ஆகும். இதில் தமிழக மக்கள் மட்டும் அல்ல ஈழத் தமிழர்களும் விழிப்புடன் இருக்கவேண்டிய காலம் இது. இந்தியா தான் எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தாரும் என்று சொல்லும் அரசியல் வாதிகள் தலையில் சாணத்தை தான் கரைத்து ஊற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/1183.html

Geen opmerkingen:

Een reactie posten