தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

புலிகள் மீதான தடைநீக்கம் குறித்து பிரிட்டன், நெதர்லாந்து கடும் அதிர்ச்சி: சுமந்திரன் கருத்து


ஈரான் பெண்ணை மணந்தார் மாலக்க சில்வா
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 10:22.35 AM GMT ]
அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக்க சில்வா ஈரானிய பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளார்.
ஈரானின் இஸ்பான் நகரில் இந்த திருமணம் கடந்த வார இறுதியில் நடைபெற்றுள்ளது. மாலக்க சில்வா நீண்ட காலமாக காதலித்து வந்த ஈரானிய பெண்ணான உர்ஃபா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மாலக்க சில்வாவின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மேர்வின் சில்வா உட்பட குடும்பத்தினர் ஈரானின் இஸ்பான் நகருக்கு சென்றுள்ளனர்.
குடும்ப உறவினர்களை தவிர தனக்கு நெருக்கமான சிலருக்கு மாத்திரமே அமைச்சர் மேர்வின் சில்வா திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஈரானின் இஸ்பான் நகரில் வாழும் செல்வந்த குடும்பத்தை சேர்ந்த உர்ஃபா என்ற பெண் துபாயில் சுங்க வரிச்சலுகை வர்த்தக நிலைய தொகுதியில் மாலக்க சில்வாவை சந்தித்துள்ளதுடன் அதன் பின் இருவரும் காதலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் மீதான தடைநீக்கம் குறித்து பிரிட்டன், நெதர்லாந்து கடும் அதிர்ச்சி: சுமந்திரன் கருத்து
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 10:37.51 AM GMT ]
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டிந்த தடை நீக்க விவகாரம் குறித்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்ட தடைநீக்க விவகாரம் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டது.
ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளில் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புகளுக்கு எதிராக அந்நாடுகளின் அரசுகள் செயல்பட முடியாது.
அந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியல் தலையீடுகள் இன்றி வழங்கப்பட்ட தீர்ப்பாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.



Geen opmerkingen:

Een reactie posten