தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 oktober 2014

இலங்கை உட்பட மூன்று நாடுகள் தொடர்பில் விசாரணை: ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

புலி ஆதரவாளர்கள் ரணிலுக்கு அனுப்பிய ஈமெயில் அமைச்சர் விமலிடம் சிக்கியதா?
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 10:52.32 AM GMT ]
விடுதலைப் புலி ஆதரவாளர்களால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட ஈமெயில் ஒன்று தன்னிடம் சிக்கியுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரியில் அரச ஊழியர்களுக்கு ஜனசெவன வீடமைப்புக் கடன் மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவங்ச மேற்கண்ட பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விடுதலைப் புலிகள் விரைவில் பகிரங்கமாக அறிவிப்பார்கள். அதற்கான மாநாடு ஒன்று மலேசியாவில் நடைபெற உள்ளது.
விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர் சார்ள்ஸ் ஞானகோனின் சகோதரர் இதனை ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் படி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பான மின்னஞ்சல் கூட எங்களிடம் உள்ளது.
தற்போது ரணில் விக்கிரமசிங்கவும் சிங்கப்பூரில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். அவர் புலிகளின் மாநாட்டில் கலந்து கொள்வாரா என்பது குறித்து தெரியாது. ஆனாலும் அவருக்கு ஆதரவளிக்கவே சார்ள்ஸ் ஞானகோன் உள்ளிட்ட புலிகளின் ஆதரவாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதே சார்ள்ஸ் ஞானகோன் என்பவர் தான் சட்டவிரோதமான முறையில் ஐ.தே.க. வின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு பெருந்தொகைப் பணத்தை அனுப்பி வைத்த விவகாரத்துடன் தொடர்புடையவர்.
இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகளுடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு உள்ள தொடர்பு குறித்து எல்லோரும் அறிந்தே வைத்திருக்கின்றார்கள் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnpy.html


இலங்கையில் அணிவகுக்கும் போர்க்கப்பல்கள்: ரஷ்ய போர்க்கப்பல் கொழும்பு வருகை
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 10:57.25 AM GMT ]
ரஷ்யாவின் பாரிய போர்க்கப்பல் ஒன்று இன்று அதிகாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
மொஸ்க்வா எனும் பெயருடைய குறித்த போர்க்கப்பல் நட்புறவு அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்துக்கு வருகை தந்திருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது.
கப்பல் கொழும்பில் தரித்திருக்கும் காலப்பகுதியில் இன்று மரியாதை நிமித்தமாக கடற்படைத் தளபதியை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தவும் கப்பலின் கட்டளைத்தளபதி உள்ளிட்டோர் எதிர்பார்த்துள்ளனர்.
மொஸ்க்வா போர்க்கப்பல் நாளை மாலை கொழும்புத் துறைமுகத்திலிருந்து மீண்டும் புறப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnpz.html


இலங்கை உட்பட மூன்று நாடுகள் தொடர்பில் விசாரணை: ஐ.நா மனித உரிமை ஆணையாளர்
[ வியாழக்கிழமை, 23 ஒக்ரோபர் 2014, 11:21.48 AM GMT ]
இலங்கை உட்பட மூன்று நாடுகள் தொடர்பாக 3 விசேட குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
இலங்கை, சிரியா, மத்திய ஆபிரிக்க ஆகிய நாடுகள் தொடர்பாகவே இந்த விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றிய அறிக்கை சமர்பித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
தான் இந்த பதவியை பொறுப்பேற்ற பின்னர் கையிருப்பில் உள்ள நிதியுடன் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஆச்சரியமடைந்ததாகவும் ஹூசைன் குறிப்பிட்டுள்ளார்.
முழு அமைப்பில் இருக்கும் பணத்தில் மிகவும் குறைந்தளவான நிதியே மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்திற்கு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARXKXnp0.html

Geen opmerkingen:

Een reactie posten