தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

முதலமைச்சர் தொடர்பான கடிதத்தினை கூட்டமைப்பிடம் வழங்கவில்லை: அன்டனி ஜெயநாதன்!

கமலேஷ் சர்மா இலங்கை செல்கிறார்: யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்கிறார்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:11.34 PM GMT ]
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் செயலாளர் கமலேஷ் சர்மா நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கையில் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட விடயங்களை செயல்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து அவர், அமைப்பின் நடப்பு தலைவரான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு விளக்க உள்ளார்.
எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் கமலேஷ் சர்மா, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ உட்பட அரசாங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசவுள்ளார்.
இதனை தவிர இலங்கையின் தேசிய அபிவிருத்தி, போருக்கு பிந்திய திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயவுள்ள அவர், இலங்கை மனித உரிமை ஆணையாளர், தேர்தல் ஆணையாளர் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் செயலாளர், வடக்கு மாகாணத்திற்கு முதல் முறையாக விஜயம் செய்ய உள்ளதுடன் யாழ்ப்பாணம் செல்லும் அவர் மோதலுக்கு பின்னரான அபிவிருத்தி, தற்போதைய முன்னுரிமைகள், எதிர்நோக்கப்படும் சவால்கள் குறித்து ஆராயவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv1.html
மடிக்கணனியில் 26 லட்சம் பெறுமதியான தங்கம்! விமான நிலையத்தில் சிக்கியது
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:23.22 PM GMT ]
சட்டவிரோதமாக தங்கத்தை நாட்டுக்குள் எடுத்து வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரிலிருந்து வந்த விமானப் பயணிகளை சோதனையிட்டபோது இலங்கையர் ஒருவர் நேற்றையதினம் சிங்கப்பூர் சென்று இன்று நாடு திரும்பியிருப்பது தெரியவந்தது.
இதன் காரணமாக அவர் மீது சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள் அவரது உடைமைகளை தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.
அதன்போது குறித்த நபர் கையில் வைத்திருந்த மடிக்கணனியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் ஐந்து தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
500 கிராம் எடையான இந்த தங்கத்தின் பெறுமதி 26 லட்சம் ரூபா என சுங்க பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், அவர் கொண்டு வந்த தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
குறித்த 26 வயதான நபர் கொழும்பு தெமட்டகொடையில் பாரியளவிலான மொபைல் போன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஒருவர் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv2.html
முதலமைச்சர் தொடர்பான கடிதத்தினை கூட்டமைப்பிடம் வழங்கவில்லை: அன்டனி ஜெயநாதன்
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:40.54 PM GMT ]
முதலமைச்சர் தொடர்பாக எவ்விதமான குற்றச்சாட்டு கடிதத்தினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நான் சமர்ப்பிக்கவில்லை. நான் அவ்வாறான குற்றச்சாட்டு கடிதத்தினை சமர்ப்பித்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்விதமான உன்மையும் இல்லை என வடமாகாண சபை பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலை அல்லது உடன்பாடற்ற தன்மை உருவாகுவதை விரும்பும் சில தரப்புக்களின் திட்டமிட்ட சதி வேலையாகவே இதனை நாம் பார்க்கிறோம்.
மேலும் அவ்வாறான குற்றச்சாட்டு கடிதம் நான் வெளியிட்டிருப்பின் அதனை உரியவர்கள் பகிரங்கப்படுத்த வேண்டும் எனவும் கூறியிருக்கின்றார். வடமாகாண முதலமைச்சர் மீது குற்றம் சுமத்தி முதலமைச்சர் பதவியில் இருந்து இவ்வருட இறுதிக்குள் அவரை பதவி விலக்குமாறு கோரி அன்டனி ஜெயநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலமைக்கு கடிதம் எழுதியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேற்படி விடயம் தொடர்பாக மேலும் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் இடையில் எவ்விதமான முரண்பாடும் இல்லை. அவ்வாறு முரண்பாடுகள் இருப்பின் முதலமைச்சரை நேரில் சந்திக்கவும், விடயங்களை தெரியப்படுத்திப் பேசி தீர்த்துக் கொள்ளவும் எம்மால் முடியும். அவ்வாறு பல விடயங்களை நாங்கள் பேசியிருக்கின்றோம். தீர்வு கண்டிருக்கின்றோம்.
நிலை இவ்வாறிருக்க நான் முதலமைச்சரை குறித்து கட்சியின் தலமைக்கு எழுத்து மூலம் கடிதம் எழுத வேண்டிய தேவை அல்லது அவசியம் இருக்க வேண்டுமா? எனவே இது விசமத்தனமான பிரச்சாரம்.
உன்மையில் நான் அவ்வாறு கடிதம் எழுதியிருந்தால் அது கட்சியின் தலமைக்குச் சென்றிருக்கும். செய்தியை வெளியிட்டவர்கள் அது தொடர்பில் என்னிடம் கேட்டிருக்கவேண்டும். அல்லது கட்சியின் தலமையிடம் கேட்டிருக்கவேண்டும்.
எதுவும் இல்லாமல் வெறுமனே செய்திக்காக எழுதுவது முறையல்ல. எனவே இந்த விடயம் குறித்து எனக்கு முதலில் தெரியாமல் இருந்தது. பின்னர் எங்கள் அமைச்சர் ஒருவர் என்னோடு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியதன் பின்பாக நான் விழித்துக் கொண்டேன்.
ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் செய்தியை வெளியிட விரும்பவில்லை. இருந்தபோதும் இணையதளங்களில் வெளியான மேற்படி செய்தியினை மக்கள் சிலர் பார்த்துள்ளனர்.
எனவே மக்கள் மத்தியில் ஒரு தவறான கருத்துருவாக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் ஊடகங்களுக்கு பேசியிருக்கின்றேன். மக்கள் மத்தியில் அவ்வாறான தவறான கருத்துருவாக்கம் உருவாகவேண்டும் என்பதே அந்தச் செய்தியை உருவாக்கியவர்களின் நோக்கம் அதனை தேற்கடிக்கவேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv4.html

Geen opmerkingen:

Een reactie posten