தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுப்படித்த மஹிந்த: கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு!



சட்டவிரோத மின்சாரம்: பார்வையிடச் சென்ற அதிகாரியை தாக்கிய மட்டு.விகாராதிபதி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:28.47 PM GMT ]
கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார புலனாய்வு பிரிவின் உத்தியோகத்தர் மட்டக்களப்பு நகரிலுள்ள பௌத்த விகாரையில் மின்சார பாவனையை பார்வையிட சென்ற போது அங்குள்ள பிக்கு இவரை தாக்கியுள்ளார்.
இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.
பௌத்த விகாரையில சட்ட விரோதமான முறையில் மின்சாரம் பாவிப்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சென்றபோது விகாரைக்கு பொறுப்பான அம்பேபிட்டிய சுமண ரத்ன தேரரால் தாக்கப்பட்டதோடு, அவதூறான வார்த்தைகளையும் பிரயோகித்துள்ளார்.
இவர்களோடு சென்ற பொலிஸாருடன் சம்பவத்தினை பார்த்துக் கொண்டு இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுமா என மின்சார சபை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, ஜனாதிபதி மகிந்தவையும் சுமண ரத்ன தேரர் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv3.html

தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாள்களாக்கியுள்ள வரவு செலவுத்திட்டம்: ஐ.தே.க (செய்தித் துளிகள்)
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:45.22 PM GMT ]
தேர்தலுக்கு முன்னர் பொதுமக்களை முட்டாளாக்கும் வரவு செலவுத்திட்டமே இன்று அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
இது ஒரு தொகை டொபியை வானத்தில் வீசியமைக்கு ஒப்பானது என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் எல்லோருக்கும் எதனையாவது கொடுக்க இந்த வரவுசெலவுத்தி;ட்டத்தின் மூலம் முயற்சித்துள்ளது.
எனினும் இந்த வரவுசெலவுத்திட்டத்துக்குள் சென்று பார்த்தால் அங்கு தெளிவான ஒதுக்கீடுகள் இல்லை என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபா வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
எனினும் ஆகக்குறைந்த சம்பளம், கொடுப்பனவுகள், அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படுதல் ஆகியவற்றை கவனிக்கும் போது இந்த வருடத்தில் 2500 ரூபா மாத்திரமே அரச சேவைகளுக்கான சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வரவு செலவுத்திட்டத்தின்படி அரச சேவையாளர்களின் சம்பளத்துக்காக 16 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதனை தற்போது பணியில் உள்ள 1.5 மில்லியன் அரச சேவைகளை கொண்டு பிரித்துப்பார்த்தால் ஒருவருக்கு 2700 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்துள்ளது என்று ஹர்சா குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியினர் தம்முடன் இரகசிய பேச்சு நடத்தினர்- ஐக்கிய தேசியக் கட்சி
ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியமையை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இது தொடர்பில் தகவல் அளித்துள்ளார்.
தமது கட்சியில் சேர்ந்துக்கொள்ளும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியின் பல உறுப்பினர்கள் முக்கியமாக அமைச்சர்கள் தமது கட்சியுடன் சேர்ந்துக் கொள்ள விருப்பம் வெளியிட்டுள்ளதாக அத்தநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் இதனை மறுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnw0.html

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கடுப்படித்த மஹிந்த: கூட்டமைப்பு - ஜனாதிபதி சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 02:51.39 PM GMT ]
வரவு செலவுத் திட்ட உரையை முடித்துவிட்டு வெளியே வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கடுப்படித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் அண்மைக்காலமாக ஜனாதிபதி மஹிந்தவை பய்யா (பட்டிக்காட்டான்) என்ற பட்டப் பெயரில் ஏளனமாக அழைத்து வருகின்றனர். ஒரு சில இணையத்தள ஊடகவியலாளர்கள் ஒரு படி மேலே சென்று தமது செய்தியறிக்கைகளிலும் பய்யா என்றே ஜனாதிபதியை விளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வரவு-செலவுத்திட்ட உரை நிகழ்த்துவதற்காக ஜனாதிபதி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். நாடாளுமன்ற அமர்வு முடிந்து ஜனாதிபதி வெளியே வந்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவர் முன்னால் எதிர்ப்பட்டனர்.
அவர்களைப் பார்த்தவுடன் புன்முறுவல் பூத்த ஜனாதிபதி , “பட்டிக்காட்டானின் பட்ஜெட் எப்படி? ” என்று கேட்டு கடுப்படித்தார். திகைத்துப் போன எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புன்முறுவலுடன் அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் தேநீர் விருந்துபசாரத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும்.
இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடன் ஜனாதிபதி மஹிந்த கைலாகு செய்து பேசியுள்ளதாக பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnw1.html

Geen opmerkingen:

Een reactie posten