தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 oktober 2014

மோசடிக்காரர்களுக்கு புகலிடம்: அமைச்சர் விமல் மீது பகீர் குற்றச்சாட்டு!

மகிந்தவை தோற்கடிக்கும் தேவை ஜே.வி.பிக்கு இல்லை: முன்னாள் எம்பி குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 12:58.07 PM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து விரட்டும் தேவையை புறந்தள்ளி விட்டு ஜே.வி.பி பல்வேறு சின்னப் பிள்ளை விளையாட்டுக்களை விளையாடி வருவதாக அந்த கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜே.வி.பி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை தவிர்க்க பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி வருகிறது.
ராஜபக்ஷவின் ஆட்சியோ பிரச்சினையாது என்றால், அது சர்வாதிகார ஆட்சி என்றால் அதனை ஆட்சியை விரட்டும் வேலைகளில் ஜே.வி.பி ஈடுபட வேண்டும்.
அதனை விடுத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையாளரிம் கோரிக்கை விடுக்க கூடாது.
மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஆட்சியில் அமர்த்து ஒப்பந்தம் ஒன்றையே ஜே.வி.பி தற்போது மேற்கொண்டு வருகிறது.
மகிந்த ராஜபக்ஷவை வெற்றி பெற செய்வதற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்தல் சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளன என்பதை ஜே.வி.பி அறியும்.
அரசாங்க தரப்பினர் இவ்வாறு தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், தேர்தலை நடத்த கூடாது என்ற கதைப்பது, சிறுவயதில் விளையாடும் போது பந்து அடுத்த தோட்டத்திற்குள் விழுந்தால் ஆட்டமிழப்பு என்று கூறுவது போன்ற செயல் எனவும் அந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnvy.html
நந்த மல்லவராச்சிக்கு விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் பதவி
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:01.26 PM GMT ]
சட்டம், ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை விளையாட்டு அமைச்சில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில் வெளிநாடொன்றின் தூதுவர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட இருந்தார். எனினும் தனிப்பட்ட காரணங்களால் நந்த மல்லவராச்சி தூதுவர் பதவியை மறுத்திருந்தார்.
அதன் காரணமாக தற்போது விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnvz.html
மோசடிக்காரர்களுக்கு புகலிடம்: அமைச்சர் விமல் மீது பகீர் குற்றச்சாட்டு
[ வெள்ளிக்கிழமை, 24 ஒக்ரோபர் 2014, 01:04.19 PM GMT ]
பாரியளவிலான மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு அமைச்சர் விமல் வீரவன்ச புகலிடம் அளித்து வருவதாக குற்றச்சாட்டொன்று எழுந்துள்ளது.
அமைச்சர் விமல் வீரவன்சவின் கீழ் உள்ள பொறியியல் கூட்டுத்தாபனத்தின் உதவிப் பொதுமுகாமையாளராக முன்னாள் ராணுவ உயரதிகாரியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ராணுவத்தில் இருந்தபோது 22 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த வழக்கில் தண்டனை பெற்றவர் என்பது தெரிய வந்துள்ளது. மேலும் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் கடந்த 2011ம் ஆண்டு முதல் இராணுவ சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவரை அரச நிறுவனமொன்றின் அதிகாரமிக்க பதவியொன்றில் அமைச்சர் விமல் வீரவன்ச நியமித்துள்ளது நீதித்துறை வட்டாரங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கு முன்னர் அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சி முக்கியஸ்தர் ஒருவர் பொறியியல் கூட்டுத்தாபனத்தில் பெரும் நிதி கையாடல் ஒன்றில் மாட்டிக்கொண்டிருந்தார். எனினும் அவருக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்காமல், பதவியிலிருந்து இடைநிறுத்தி அவரைப் பாதுகாப்பதற்கு விமல் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இவ்வாறாக மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இலகுவாக அணுகக் கூடியவராகவும், அவர்களுக்கான புகலிடமாகவும் அமைச்சர் விமல் வீரவங்ச மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARYKXnv0.html

Geen opmerkingen:

Een reactie posten