பஹரீன் இளவரசர் ராஜதந்திர பாதுகாப்பை இழந்தார்: மகிந்தருக்கு ஏன் செய்ய முடியாது ?
[ Oct 08, 2014 05:45:27 AM | வாசித்தோர் : 7250 ]
இதேவேளை பாதிக்கப்பட்ட நபர் சும்மா இருக்கவில்லை. சூ வில்லியம் என்னும் பிரபல வழக்கறிஞரை வைத்து அமர்வு நீதிமன்றில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். 2 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தடாலடியாக நேற்று ஒரு தீர்பை வழங்கியுள்ளார்கள். குற்றம் இழைத்த பஹரின் இளவரசருக்கு ஏன் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் ? அவர் குற்றம் இழைத்துள்ளார் என்று நிரூபணமாகியுள்ளது. எனவே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள, பாதுகாப்பை விலக்கவேண்டும் என்று நீதிபதிகள் பிரித்தானிய அரசுக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்கள். இத் தீர்ப்பால் பஹரின் நாடே ஆடிப்போயுள்ளது. இதனால் அன் நாட்டு இளவரசர் இனி பிரித்தானியாவுக்குள் வர முடியாது. வழமையாக அவர் லண்டன் வந்து அடிக்கடி பிரித்தானிய மகாராணியை பார்த்துச் செல்வது வழக்கமாம்.
இவருக்கே இந்த நிலை என்றால், 40,000 ஆயிரம் உயிர்களை மேமாதத்தில் மட்டும் குடித்த மகிந்தருக்கு எதிராக ஏன் வழக்கு தொடர முடியாது ? என்ற கேள்வி எழுகிறது அல்லவா. இந்த வழக்கை நடத்தியதாகக் கூறப்படும் சூ வில்லியம் குறித்த இந்த சொலிசிட்டர் கம்பெனியில் தான் வேலைபார்பதாக அதிர்வு இணையத்திற்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் விபரங்களை நாம் இங்கே இணைத்துள்ளோம்.
Sue Willman,
of Deighton Pierce Glynn,
webpage : http://www.deightonpierceglynn.co.uk/
http://www.athirvu.com/newsdetail/1178.htmlமுதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சிவாஜிலிங்கம் பலத்த பதிலடி !
[ Oct 08, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 6325 ]
அவர் அங்கு மேலும் கூறியதாவது,
'எமது தேசிய விடுதலைப் போராளிகளை கொச்சைப்படுத்துபவர்களை தமிழினத் துரோகிகள் என கூறலாம். வடமாகாண சபை தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட வரும்படி விக்னேஸ்வரனை, இரா.சம்பந்தன் அழைத்த போது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே போட்டியிட வருவேன் என விக்னேஸ்வரன் கூறினார். அப்போது அவருக்கு தெரியவில்லையா நாங்கள் ஆயுதக்குழுக்கள் என்று. அப்போது ஆயுதக்குழுக்களுடன் இணைந்து, பிரபாகரன் மாவீரன் என்று தேர்தல் பிரசாரம் செய்து தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர், போராட்ட அமைப்புக்களுடன் இணைந்திருக்க முடியாது என்கிறார்.
வடமாகாண சபையில் இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 30 பேரில், 13 பேர் போராட்டக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். அதாவது, ஈ.பி.ஆர்.எல்.எப்.ஐச் சேர்ந்த அறுவரும் டெலோவைச் சேர்ந்த ஐவரும் புளொட் அமைப்பைச் சேர்ந்த இருவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் இணைந்தே சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சராக அங்கீகரித்தனர். நாங்கள் அனைவரும் 27 வருடங்களுக்கு முன்னர் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஐனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டுவிட்டோம். 1969ஆம் ஆண்டு ஆயுதப் போராட்டக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைவர்கள் அந்த ஆயுதக் குழுக்களுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கி வந்தனர்.
1981இல் டெலோவை சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை உள்ளிட்ட போராளிகள் கைது செய்யப்பட்ட போது, அவர்களுக்காக சிவசிதம்பரம் உள்ளிட்ட தலைவர்க்ள நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டிருந்தனர். 1985ஆம் ஆண்டு திம்புவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 5 போராட்டக் குழுக்கள் கலந்துகொண்டிருந்தன. 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கூட்டமைப்பாகவே பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டனர். எமது இந்த போராட்ட இயக்கங்களில் இருந்து 30 ஆயிரம் போராளிகள் தங்கள் இன்னுயிரை நீர்த்தமையால் இன்று எமது பிரச்சினை சர்வதேச ரீதியில் பேசப்படுகின்றது.
எங்கள் ஆதரவுடன் எங்கள் தோள் மீது ஏறி நின்று தீண்டத்தகாதவர்கள் என்று கூற முடியாது. அதனை நாங்கள் அனுமதிக்க போவதில்லை. முதலமைச்சர் உட்பட எவரையும் இவ்வாறு கதைப்பதற்கு அனுமதிக்கமாட்டோம் என அவர் மேலும் கூறினார்.
http://www.athirvu.com/newsdetail/1175.htmlநரேந்திர மோடியின் நாடகம் ஆரம்பம்: ரகசிய சந்திப்பில் நடந்தது என்ன ? இதோ உண்மைகள் !
[ Oct 08, 2014 06:30:55 AM | வாசித்தோர் : 18020 ]
கடந்த 27ம் திகதி முதல் பெங்களூர் சிறையில் செல்வி ஜெயலலிதா சிறையில் அடைபட்டு உள்ளார். அம் மாநிலத்தை ஆட்சி செய்வது காங்கிரஸ் கட்சிதான். செல்வி ஜெயலிதாவோடு கூட்டுச் சேர விரும்பியுள்ள காங்கிரஸ் தற்போது அவருக்கு உதவ முன்வந்துள்ளது. இதனால் நேற்றைய தினம்(07) ஜெயலலிதா தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று அவரை விடுதலை செய்வார்கள் என்று பலராலும் எதிர்பார்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அவர் உச்ச நீதிமன்றம் செல்லவேண்டி உள்ளது. அங்கு சென்றால் கூட பிணை கிடக்காமல் போகலாம் என்று கூறப்படுகிறது. காரணம் என்னவென்றால் அது கருநாடக அரசு அல்ல. மத்தியில் உள்ள மோடி அரசாங்கமே இதற்கு காரணம் என்ற உண்மை மெல்ல மெல்ல தெரிய ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்களில் பஜக கட்சி கொடிகட்டிப் பறந்தாலும், தமிழகத்தில் அதன் செல்வாக்கு இன்னும் சரிந்த நிலையில் தான் உள்ளது. அவர்கள் தமிழகத்தில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அதனால் ரஜனியை வைத்து பெரும் அரசியல் ஆரம்பிக்க நரேந்திர மோடி ஒரு ரகசிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். உங்களுக்கு இப்போது தெரியும் ஏன் அம்மாவுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை என்று. குறித்த சில காலம் வரை அவரை அப்படியே அடைத்துவைத்து, அதற்குள் தமிழக அரசியலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர நரேந்திர மோடி திட்டங்களை தீட்டி வருகிறார் என்பது இப்போது தமிழர்களுக்கு நன்றாக புரியும்.
http://www.athirvu.com/newsdetail/1179.html
Geen opmerkingen:
Een reactie posten