அரசின் வரவு செலவுத் திட்டத்தால் மக்களின் அன்றாட பிரச்சினைகள் தீரப்போவதில்லை: முன்னிலை சோசலிசக் கட்சி
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 10:59.39 AM GMT ]
தன்னால் வழங்க முடிந்த அளவை வழங்க முடியும் என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அதிகமாக பயந்து போன நேரத்தில் கொடுப்பது இந்த சொஞ்சம் என்றால், இந்த அரசாங்கத்திடம் இதனை விட ஒன்றை எதிர்பார்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் நேற்றைய வரவு செலவுத் திட்டத்தில் அனைவருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துள்ளது. மக்கள் பாரிய அழுத்தங்களில் இருந்தனர்.
பொருளாதார பாதிப்புகள் காரணமாக மக்கள் வீதியில் இறங்கும் நிலைமை காணப்பட்டது. நிலைமை மோசமாகி வருகிறது என்பதை அரசாங்கம் அறிந்து கொண்டிருந்தது.
எதிர்க்கட்சிகள் ஏன் மகிந்தவை கண்டு பயப்படுகின்றன எனக் குறிப்பிட்டு அரசாங்கம் சுவரொட்டிகளை ஒட்டியிருந்தது.
மக்கள் மீது அரசாங்கம் எந்தளவு பயத்தை கொண்டுள்ளது என்பதை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் காணமுடிந்தது. நான்றாக பயந்த பின்னர், கொடுக்க முடிந்ததையையே கொடுத்துள்ளது.
தேர்தல் நெருங்கும் தருவாயில் மக்களை எவ்வளவுக்கு ஏமாற்ற முடியுமோ அந்தளவுக்கு அரசாங்கம் ஏமாற்றியுள்ளது.
அரசாங்கம் வழங்கியுள்ள நிவாரணத்தில் வாழ முடியுமா என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.
அரச ஊழியர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 2200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் 15 ஆயிரம் ரூபாவாகவும் தனியார் துறையினரின் குறைந்தபட்ச சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனை பாரிய அதிகரிப்பதாக காட்ட அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஆனால், இலங்கை மத்திய வங்கி கூறுவது போல் ஒரு குடும்பத்தின் மாதாந்த செலவு 52 ஆயிரத்து 134 ரூபா.
இலங்கையின் 84 லட்சம் பேரை கொண்ட மனித வளத்தில் 50 ஆயிரம் ரூபாவுக்கும் மேலதிகமான வருமானத்தை பெறுவோர் 5 லட்சத்து 34 ஆயிரம் பேர் மாத்திரமே.
குறைந்தபட்ச சம்பளத்தையும் வாழ்வதற்கு தேவையான செலவுகளை நோக்கும் போது நாட்டின் கீழ் வகுப்பு மக்களின் வருமானம் மிகவும் குறைவான நிலையிலேயே உள்ளது எனவும் துமிந்த நாகமுவ மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp6.html
தெஹிவளையில் தோட்டக்களுடன் துப்பாக்கி மீட்பு
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 11:34.45 AM GMT ]
தமக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த துப்பாக்கியும் தோட்டக்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும் இந்த சம்பவம் தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmqy.html
அடுத்த வாரம் நாடு திரும்பும் சந்திரிக்கா- சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களை சந்திக்க திட்டம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 11:20.48 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதியின் புதல்வி யசோதராவிற்கு மூன்றாவது பிள்ளை அண்மையில் பிறந்தது.
பிறந்த பிள்ளை மற்றும் மகளின் நலன் குறித்து அறிய முன்னாள் ஜனாதிபதி அண்மையில் லண்டன் சென்றார்.
நேற்று முன்தினம் நாடு திரும்பவிருந்த அவர் சில தினங்கள் பயணத்தை ஒத்திவைத்தாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதுகாக்கும் அமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, மாதுளுவாவே சோபித தேரர் ஆகியோருடன் கலந்துரையாட உள்ளதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmp7.html
Geen opmerkingen:
Een reactie posten