சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜெயில், ஜாமீன் மறுப்பு போன்றவற்றால் தமிழகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கருத்து கூறியுள்ள சுப்ரமணிய சாமி, அதிமுகவினர் சினிமாத்தனமாக போராடுகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். அவரும், தமிழக சட்டம் - ஒழுங்கை காப்பதில், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் அதிமுகவினர் பள்ளி, கல்லுாரிகளை மூடுவது, பேருந்துகளை ஓடவிடாமல் செய்து வருவது என்று தங்கள் சினிமாத்தனத்தை காட்டி வருகின்றனர்.
இது மறுபடியும் தொடர்ந்தால்,அதை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வேன். தமிழகத்தில் 356 சட்டப் பிரிவைப் பயன்படுத்தி, அ.தி.மு.க., அரசை கலைக்கக் கோருவேன்.
கவர்னர் ஆட்சி கொஞ்ச காலத்துக்கு இருக்கட்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை கலைப்பது என் எண்ணம் அல்ல. அதற்காக ஒரு அரசு, மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல், தொடர்ந்து ஒரு குற்றவாளியின் விடுதலைக்காக, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருந்தால் அதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியாது.
எனக்கு தமிழக மக்களும், அவர்கள் நலனும்தான் முக்கியம். அதேபோல ஊழலால் இந்திய பொருளாதாரம் சுரண்டப்படுவதை எதிர்த்து போராடுவதும் தான் என் வாழ்நாள் கடமை.
அதை இறுதி வரையில் தொடர்ந்து செய்வேன், ஊழல்வாதிகள் யாரையும், எப்பவும் விடமாட்டேன் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?20SAlRdbdSY063402cMQ3222Ym73adcfDOK40eM6AKaecWo4A4ce2JOm23
|
Geen opmerkingen:
Een reactie posten