தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு- பொலிஸ் நிலையம் முன்பாக மிதி வெடி: அதிர்ச்சியில் பொலிஸார்!

இலங்கையின் தீவிரவாதம் நாட்டை தனிமைப்படுத்தும்: ரவூப் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 03:28.33 AM GMT ]
இலங்கையில் அதிகரித்து வரும் தீவிரவாத போக்குகள் சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உம்ரா கடமைக்காக சவூதி சென்று நாடு திரும்பிய போது ரியாத்தில் வைத்து இந்த வாரம் செய்தி நிறுவனம் ஒன்றிடம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரச்சினை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டாமையானது துரதிஸ்டவசமானது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்தநிலையில் இந்தப்பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வைக் காணாதுபோனால் சர்வதேச அரங்கில் இலங்கை தனித்து விடப்படக்கூடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டின் நீதியமைப்பு ஒன்று இருக்குமானால் பௌத்த பிக்குவாக இருந்தாலும் அதனை கடைபிடிக்க வேண்டும் என்று ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXnx7.html

ரயில் தண்டவாளத்தில் படுத்து எதிர்ப்பு: கண்டியில் எழுவர் கைது (செய்தித் துளிகள்)
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:08.46 AM GMT ]
ரயில் தண்டவாளத்தில் படுத்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட ஏழு சிங்களவர்கள் கண்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் கண்டியில் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக  தெரிய வருவதாவது,
கண்டியிலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட மாலைநேர கடுகதி ரயிலில் ஏழு பயணிகள் குடிபோதையில் அட்டகாசம் செய்துள்ளனர்.
ரயில்வே பாதுகாப்புப் பிரிவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து கடுகண்ணாவை ரயில் நிலையம் சென்றடையும் முன் பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
ரயில் கடுகண்ணாவையை சென்றடைந்தவுடன், ரயில்வே பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் குடிகாரர்கள் ரயிலிலிருந்து பலவந்தமாக இறக்கப்பட்டுள்ளார்கள்.
எனினும் அவர்கள் அங்கிருந்து அகன்று செல்ல மறுத்து பொலிசாருடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் குடிகாரர்கள் ஏழுபேரும் ரயில் எஞ்சின் முன்பாக தண்டவாளத்தில் படுத்துக் கொண்டதுடன், எஞ்சின் கீழாகவுள்ள சக்கரம் அருகிலும் தலைவைத்துள்ளனர்.
இதன் காரணமாக ரயில் வழமையை விட அரைமணிநேரம் தாமதமாகியுள்ளது.
இதனையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர். ரயில்வே தண்டவாளத்தில் படுத்து இடையூறு ஏற்படுத்தியதற்கான கடும் குற்றச்சாட்டின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் 29ம் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கொழும்புக்கு அண்மித்த பகுதியொன்றைச் சேர்ந்த சிங்களவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில் குடும்பஸ்தர் பலி
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊட்வீல் தோட்டம் பிரேமோர் பிரிவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
24.10.2014 அன்று இரவு 7 மணியளவில் பிரேமோர் பிரதேசத்தில் இவரின் வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இவ்வாறு உயிரிழந்தவர் பிச்சமுத்து முத்துசாமி (வயது 60) இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்ப பிரச்சினையால் ஏற்பட்ட கைகலப்பில் குறித்த நபர்களினால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி நபர் தாக்கப்பட்ட பின்னர் அக்கரப்பத்தனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிறகு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்கள் 3 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmoy.html
பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கி தவறுதலாக வெடித்து மகனுக்கு காயம்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:09.17 AM GMT ]
பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்த சம்பவத்தில் அவரது மகன் காலில் காயமடைந்துள்ளார்.
கொட்டாஞ்சேனைப் பகுதியில் வசிக்கும் பிரதிப்பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கே இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.
இது தொடர்பான செய்தியொன்றை இன்றைய திவயின பத்திரிகை வெளியிட்டுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் வியாழக்கிழமை இரவு கடமையை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் தனது கைத்துப்பாக்கியை மேசையொன்றின் மீது வைத்த அவர் குளிப்பதற்காக சென்றுள்ளார். அதற்கிடையில் அவரது 14 வயது மகன் கைத்துப்பாக்கியை எடுத்து பரிசோதித்துள்ளார்.
அதன் போது தவறி நிலத்தில் கீழே விழுந்த கைத்துப்பாக்கி, தற்செயலாக வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் பிரஸ்தாப பையனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அவரது மனைவியிடம் பொலிசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர் என்றும் திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அண்மைக்காலமாக பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmoz.html
கிளிநொச்சியில் தேர்தல் அலுவலகம் திறந்து வைப்பு- பொலிஸ் நிலையம் முன்பாக மிதி வெடி: அதிர்ச்சியில் பொலிஸார்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:11.16 AM GMT ]
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகம் ஒன்று நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் செயலகம் இயங்கிவந்த கட்டட  தொகுதியில், இந்த தேர்தல் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த நிகழ்வில் பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட், வட மாகாண தேர்தல் ஆணையாளர் நமீல், மேலதிக அரசாங்க அதிபர், உதவி தேர்தல் ஆணையாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக மிதி வெடி – அதிர்ச்சியில் பொலிஸார்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு முன் மூன்று மிதி வெடிகளை பொலிஸார் வெள்ளிக்கிழமை மீட்டுள்ளனர். குடி நீர் விநியோகம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடும் தேசிய நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினர் நீர் குழாய்களை பொருத்த கிடங்குகளை வெட்டிய போதே இந்த மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இவ்வேலை நிறுத்தப்பட்டு மிதிவெடி அகற்றும் வேலை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo1.html

Geen opmerkingen:

Een reactie posten