தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

விக்னேஸ்வரனை மோடியுடன் சந்திக்க வைக்க அதிகாரிகள் முயற்சி!

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது அவரை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவைக்க இந்திய அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
நவம்பர் 9 ஆம் திகதியன்று நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் சொற்பொழிவொன்றை நிகழ்த்துவதற்காக அரச சார்பற்ற அமைப்பு ஒன்று விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விக்னேஸ்வரனும் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் விக்னேஸ்வரனை பிரதமர் மோடியுடன் சந்திக்க வைக்கமுடியுமா? என்பது தொடர்பில் உறுதியான நிலை ஏற்படவில்லை என தெரியவருகின்றது.
பிரதமர் மோடி எதிர்வரும் 11ஆம் திகதியன்று மூன்று நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்தநிலையில் விக்னேஸ்வரன் முதலில் புதுடில்லிக்கு சென்ற பின்னர் சென்னைக்கும் விஜயம் செய்யவுள்ளார் என தெரியவந்துள்ளது.
வடக்கு மாகாண முதலமைச்சர் நவம்பரில் இந்தியா விஜயம்- மோசடியை சந்திப்பாரா?
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் வேலைகளில் புதுடெல்லி அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் என்ற அரசசார்பற்ற நிறுவனத்தின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியா செல்ல உள்ளதுடன் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வொன்றில் விரிவுரையை வழங்க உள்ளார்.
எவ்வாறாயினும் இந்திய பிரதமர் மற்றும் வடக்கு முதலமைச்சர் இடையிலான சந்திப்பு குறித்து இந்திய பிரதமரின் அலுவலகத்தில் இருந்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு வடக்கு மாகாண சபை தேர்தலில் பின் இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு வாய்மொழி மூல அழைப்பை இந்தியா விடுத்திருந்தது.
கடந்த மே மாதம் இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற வைபவத்தில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்ததுடன் அவர் அதனை நிராகரித்திருந்தார்.
வடக்கு மாகாண நிர்வாகத்திற்கும் கொழும்பு அரசாங்கத்திற்கும் இடையில் கடந்த சில மாதங்களாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதை திருப்பு விழா உட்பட ஜனாதிபதி கலந்து கொண்ட விழாக்களை விக்னேஸ்வரன் பகிஷ்கரித்திருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்தனர்.
நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கூடிய முன்னேற்றங்களை ஏற்படுத்தவில்லை என அவர்கள் இந்தியாவிடம் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எவ்வாறாயினும் வடக்கில் அண்மையில் நடைபெற்ற கூட்டங்களில் உரையாற்றிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வடக்கின் அபிவிருத்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கட்டை போடுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது 10வது வரவு செலவுத் திட்டத்தை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஐக்கியமான தேசத்தை உருவாக்கவும் நாட்டின் சகல சமூகங்களின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்துடன் கைகோர்க்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo0.html

Geen opmerkingen:

Een reactie posten