தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 oktober 2014

மகிந்த ராஜபக்ஷ பாசிசவாதி: விக்ரமபாகு கருணாரட்ன!

மனிதவுரிமை ஆணைக்குழுவை நாடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:36.17 AM GMT ]
பொலிஸாருக்கு எதிராக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸாரினால் தங்களின் சத்தியாக்கிரக கூடாரம் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரசிந்து ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை தவறாகப் பயன்படுத்தி பொலிஸார் செயற்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவிற்கு முரணாக பொலிஸார் செயற்பட்டிருப்பின் அதுகுறித்து மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ அல்லது நீதிமன்றத்தை நாட முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo2.html

நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அரசாங்கத்தின் அமைச்சர்கள்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:43.43 AM GMT ]
பிரபல சிங்களத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான கயேஷா பெரேராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடைபெற்ற மது விருந்தில் ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நேற்று நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவினருக்கு மிகவும் நெருக்கமானவருமான சஜின் வாஸ் குணவர்ன, அமைச்சர்கள் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, துமிந்த திஸாநாயக்க உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்களின் கல்வி சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க கயேஷா பெரேராவின் சிறந்த நண்பர் எனக் கூறப்படுவதுடன் அவருக்கே கயேஷா கேக் வெட்டி ஊட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo3.html
என்னை பதவியில் இருந்து விலக்க போவதாக கூறும் கதைகளில் உண்மையில்லை: ராஜித
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 05:56.46 AM GMT ]
மீன்பிடி மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து ஜனாதிபதி தன்னை நீக்க உள்ளதாக பரவி வரும் வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது எதிர்க்கட்சிகள் கட்டவிழ்த்து விடும் கட்டுக்கதைகள் எனவும், நேற்று முன்தினம் ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் மீன்பிடி விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீன்பிடி விவகாரம் மாத்திரமல்லாது தனது பணிகள் குறித்தும் ஜனாதிபதி தன்னை பாராட்டியதாகவும் ராஜித கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo4.html
மகிந்தவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை: அரசின் இடதுசாரி கட்சிகள்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 06:14.57 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஆகியன தெரிவித்துள்ளன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லங்கா சமசமாஜக்கட்சியின் தலைவரான அமைச்சர் திஸ்ஸ வித்தாரண, கட்சியின் மத்திய செயற்குழுவில் கூடிய கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும். இதுவரை கட்சி எந்த தீர்மானங்களையும் எடுக்கவில்லை எனக் கூறியுள்ளார்.
அதேவேளை மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்னும் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை எனவும் அது குறித்து தற்போது எதனையும் தெரிவிக்க முடியாது எனவும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அமைச்சர் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo5.html
மகிந்த ராஜபக்ஷ பாசிசவாதி: விக்ரமபாகு கருணாரட்ன
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 06:21.22 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாசிசவாத ரீதியான அரசியலை நவசமசமாஜக் கட்சி எதிர்ப்பதாக அதன் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
எப்படியிருந்த போதிலும் மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவார்.
மகிந்த தேர்தலில் போட்டியிட முடியாது என எந்த வாதங்களை முன்வைத்தாலும் எந்த சட்டங்களை கொண்டு வந்தாலும் அவை செல்லுபடியாகாது.
மகிந்த சட்டத்திற்கு அமைய செயற்படும் நபர் அல்ல என்பதே இதற்கு காரணம்.
நாம் இப்படியான பாசிசவாத சக்திகளை எதிர்க்க வேண்டும். இதனால் விமர்சன ரீதியான ஆதரவை நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவோம்.
பாசிசவாதத்தில் இருந்து உடைந்து செல்ல போவதாக கூறும் ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், பாசிசவாதத்தின் ஆசிரியர்.
இவர்கள் இல்லாமல் மகிந்த ராஜபக்ஷவுக்கு இந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ள முடியாது எனவும் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmo6.html

Geen opmerkingen:

Een reactie posten