தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

அருண் செல்வராசன் காவல் நீடிப்பு: காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு அதிகாரிகள் மனு!

ஜனவரி 9 ஆம் திகதி தேர்தலை நடத்த மகிந்த திட்டம்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:57.13 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி 9 ஆம் திகதி நடத்துவது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவனம் செலுத்தி வருவதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
2016 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னதாக ஜனாதிபதி இந்த தேர்தலை நடத்த உள்ளார்.
ஆளும் கட்சியினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சுமத்தும் நபர்களுக்கு, தனக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவை நிரூபிக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு முன்கூட்டியே தேர்தலை நடத்த உள்ளார்.
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலத்தின் நான்காம் ஆண்டு, இந்த வருடம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி பூர்த்தியாகிறது. இதன் பின்னர் தேர்தலை நடத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் அதிகாரம் உள்ளது.
முன்கூட்டி தேர்தல் ஒன்று நடத்தப்படலாம் என்ற ஊகத்தை அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல வெளியிட்டிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu3.html
அருண் செல்வராசன் காவல் நீடிப்பு: காவலில் எடுத்து விசாரிக்க புலனாய்வு அதிகாரிகள் மனு!
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 09:14.58 AM GMT ]
பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட அருண் செல்வராசன் உள்பட 5 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 15–ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி மோனி உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட ஜாகீர் உசேன் கடந்த வருடம் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமதுசலீம், ரசீக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமத்தில் தங்கியிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசன் என்பவன் கைது செய்யப்பட்டான்.
அனைவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அருண் செல்வராசனை 18–ந்தேதி முதல் 23–ந்தேதி வரை காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் நீதிமன்ற காவல் முடிந்ததையடுத்து அருண் செல்வராசன் உள்பட 5 பேர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது காவலை 15–ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி மோனி உத்தரவிட்டார்.
இந்தநிலையில் அருண் செல்வராசனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இன்று மீண்டும் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu4.html

Geen opmerkingen:

Een reactie posten