தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

உலகத் தமிழருக்கான ஐ.நா மன்றம் வீரம் செறிந்த கிளிநொச்சி மண்ணில்: துரை கணேசலிங்கம் முழக்கம்!

சபை ஒழுங்குகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்: சிவஞானம் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 07:53.57 AM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஆடை தொடர்பிலான விடயங்களில் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையில் இன்று காலை முதல் காணி தொடர்பிலான விசேட அமர்வு நடைபெற்று வருகின்றது. அமர்வை ஆரம்பித்து வைக்கும் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
104 உறுப்பினர்களை கொண்ட மேல் மாகாண சபையிலுள்ள உறுப்பினர்கள், சபை அமர்வுகள் இடம்பெறுகின்ற போது, ஒரே மாதிரியான ஒழுங்கான ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
ஆனால் எமது சபை அமர்வில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், வெவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும்.
எமது வடமாகாண சபை 25 வருடங்கள் பின்நோக்கிய நிலையில் இருக்கின்றது. இதனை முன்னேற்ற வேண்டியது எமது கடமையாகும். அத்துடன், சபை ஒழுங்குகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, உறுப்பினர்களை பேச அனுமதியளிக்கும் கால எல்லைக்குள் மாத்திரம் பேச வேண்டும், குறுக்காக பேசக்கூடாது, குழப்பங்களை சபைகளில் ஏற்படுத்தக்கூடாது. மேல் மாகாண சபையில் இத்தகைய ஒழுங்குகள் சீராக பேணப்பட்டு வருவதாக அவைத்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWluy.html
சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:17.02 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய சமையல் எரிவாயுவிற்கான விலை குறைக்கப்பட உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன் சீன ஜனாதிபதி இலங்கை வந்தபோது மின் கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu0.html

உலகத் தமிழருக்கான ஐ.நா மன்றம் வீரம் செறிந்த கிளிநொச்சி மண்ணில்: துரை கணேசலிங்கம் முழக்கம்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:40.42 AM GMT ]
உலகத் தமிழருக்கான ஐ.நா மன்றம் வீரம் செறிந்த கிளிநொச்சி மண்ணில் என அமைக்கப்படவுள்ளதாக உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் துரை கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 12வது தமிழ்ப் பண்பாட்டு மாநாடும் 40வது ஆண்டு நிறைவு விழாவும் கடந்த வாரம் வெகு சிறப்பாக ஜேர்மனி ஹம் நகரில் இடம் பெற்றது.
இம் மகாநாட்டில் உலகின் 50க்கும் அதிகமான நாடுகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுகர்கள் கல்வித் துறைசார் பேராசிரியர்கள் அடங்கலாக இலக்கிய மற்றும் பல சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பொதுச் செயலாளர் துரை கணேசலிங்கம்,
எதிர்காலத்தில் தமிழை வளர்க்க உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் தன்னால் ஆன முழு முயற்சியுடன் பல திட்டங்கள் மூலமாக செயற்படுத்தவுள்ளது. தமிழை காக்க நாம் அனைவரும் பங்காற்றுவது காலத்தின் கட்டாயம் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu2.html

Geen opmerkingen:

Een reactie posten