தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

தயாசிறியுடன் ஹிருணிக்கா நட்பு! கடுப்பான ஹரின் பெர்னாண்டோ!



தயாசிறி ஜயசேகரவுடன் மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர நட்புக் கொண்டுள்ளது குறித்து ஹரின் பெர்னாண்டோ கடும் கோபத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது அரசாங்கத் தரப்பின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிறி களத்தில் இறங்கி பணியாற்றியிருந்தார்.
இதற்கிடையே தேர்தல் பணிகளுக்காக அங்கு சென்றிருந்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவுக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஏற்பட்டுள்ளது.
தமது நட்புக்கு அடையாளமாக தயாசிறியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.
இந்த விடயம் ஹிருணிக்காவின் முன்னைய நண்பர் ஹரினுக்கு கடும் கோபத்தை வரவழைத்துள்ளது.
தன்னை தோற்கடிப்பதற்காக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் நின்றவருடன் தனது தோழி எப்படி நெருங்கிப் பழகலாம் என்று அவர் சினம் கொண்டுள்ளார்.
மேலும் இனி தமக்குள் எந்தவிதமான உறவும் இல்லை என்றும் அவர் தொலைபேசி வழியாக ஹிருணிக்காவை திட்டித் தீர்த்துள்ளார்.
இது குறித்து ஹிருணிக்கா எதுவித கவலையும்படவில்லை.
எனினும் ஹிருணிக்கா எனும் தூண்டில் மூலமாக ஹரினை ஆளும்தரப்புக்குள் இழுத்துக் கொள்வதற்கு எதிர்பார்த்திருந்த ஜனாதிபதி தான் இதன் காரணமாக பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo4.html

Geen opmerkingen:

Een reactie posten