தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 oktober 2014

திறமையானவர்களுக்கு அரசியலில் இடமில்லை: அதிருப்தியில் ரவி கருணாநாயக்க!



ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இத்தாலி சென்றடைந்தார்
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 06:12.19 AM GMT ]
இத்தாலி சென்றுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அங்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டுள்தாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலி மற்றும் வத்திகான் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
இத்தாலி நேரப்படி இரவு 7 மணிக்கு ரோம் ஃபியூமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை வத்திகான் பிரதான அதிகாரி ஜோசோ வெத்தன் மற்றும் இத்தாலிக்கான இலங்கையின் தூதுவர் நாவலகே போர்னாட் குரே ஆகியோர் வரவேற்றனர்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று வத்திகானில் புனித பாப்பரசர் முதலாது பிரான்ஸிஸை அப்போஸ்தலர் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இதனை தவிர வத்திகான் அரசின் பிரதம செயலாளர் மற்றும் பிரதமர் வணக்கத்திற்குரிய கர்தினால் பியேத்ரோ பெரோலின் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
புனித பாப்பரசர் அடுத்த வருடம் ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதுடன் அது தொடர்பான அழைப்பினை ஜனாதிபதி, பாப்பரசரிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo2.html
திறமையானவர்களுக்கு அரசியலில் இடமில்லை: அதிருப்தியில் ரவி கருணாநாயக்க
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 06:16.17 AM GMT ]
திறமையான செயற்பாடுகளைக் கொண்டவர்களுக்கு அரசியலில் உரிய இடம் வழங்கப்படுவதில்லை என்று ரவி கருணாநாயக்க அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட திறமையான பலர் ஆளுங்கட்சிக்குள் இருப்பதாக ஐ.தே.க. உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியில் ஜனாதிபதி குடும்பத்தை விட ஏனையவர்களே சிறப்பான முறையில் செயல்படுவதாகவும், ஆனாலும் அவர்களின் செயற்பாடுகளின் நற்பெயரை ராஜபக்ஷ குடும்பம் தட்டிக் கொள்வதாகவும் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுங்கட்சிக்குள் இருக்கும் திறமைசாலிகள் குறித்து ராஜபக்ஷ குடும்பத்தினர் மதிப்பளிப்பதில்லை. அதனைப் போன்ற நிலை தற்போது ஐ.தே.க. விலும் ஏற்பட்டுள்ளது. திறமைசாலிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
கட்சியில் சஜித் பிரேமதாசவை விட திறமையானவர்கள் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை என்றும் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo3.html

Geen opmerkingen:

Een reactie posten