[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 06:29.45 AM GMT ]
இருப்பினும், இந்த சந்திர கிரகணத்தை இலங்கையில் முழுமையாக காணக் கிடைக்காது என்றும் சந்திர கிரகணத்தின் இறுதிக் கட்டத்தை மாத்திரம் மாலை நேரத்தில் இலங்கையில் காணலாம் என்றும் வானவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலும் அவுஸ்திரேலியா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளிலும் இந்த சந்திர கிரகணத்தை முழுமையாக காணலாம் என்று வானவியல் நிபுணர் அநுர சீ.பெரேரா தெரிவித்தார்.
இந்த சந்திரகிரணகம் காரணமாக, பௌர்ணமி தினத்தன்று இரவு சிவந்த நிலவைக் காணலாம் என்றும் இதற்கு 'ரெட் மூன்' என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo5.html
இலங்கை சிறையில் துர்நாற்றம் வீசிய உணவு வழங்கினர்: விடுதலையான மீனவர்கள் கண்ணீர் பேட்டி
[ வெள்ளிக்கிழமை, 03 ஒக்ரோபர் 2014, 06:46.27 AM GMT ]
இலங்கை சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று விடுதலையான இராமேஸ்வரம் மீனவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
கச்சதீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்கின்றனர்.
கடந்த மாதம் இராமேஸ்வரம், தங்கச்சி மடம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 36 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்தது.
இந்நிலையில் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 76 பேரை விடுவிக்க அந்நாட்டின் அதிபர் ராஜபக்ச உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதியை சேர்ந்த 36 மீனவர்கள் விடுவிக்கபட்டனர்.
அவர்கள் நேற்று இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டு, மாலையில் மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர்.
இராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள் கூறுகையில்,
இலங்கை சிறையில் எங்களை சிங்கள கைதிகளுடன் அடைத்து கொடுமைப்படுத்தினர். இதனால் சிறையில் தூங்கக்கூட இடமின்றி தவித்தோம். மேலும் சுகாதார மற்ற குடிநீர், தூர்நாற்றம் வீசிய உணவு போன்றவற்றை வழங்கினார்கள் என்று கண்ணீர் மல்க கூறினர்.
http://www.tamilwin.com/show-RUmszATXKVeo6.html
Geen opmerkingen:
Een reactie posten