[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 12:35.08 AM GMT ]
உலகெங்கும் 50க்கும் அதிகமான நாடுகளில் கிளைகளில் இருந்து வருகை தந்த அரசியல் பிரமுவர்கள் கல்வித் துறை சார் பேராசிரியாகள் அடங்கலாக இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பல சமூக ஆர்வலர்கள் ஹம் ஆலயத்தின் வழிபாட்டுடன் இரண்டாம் நாள் நிகழ்வுகளை ஆரம்பித்தனர்.
இம் மாநாட்டிற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உட்பட பேராசிரியர்கள் தமிழ்துறை ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இம் மகாநாட்டில் பழைமையான பத்திரிகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல உரைகளும் இடம்பெற்றதுடன், ஜேர்மனி நாட்டின் மாகாணக மட்ட அரசியல் பிரமுவர் ஒருவரும் இம் மகாநாட்டை கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnp6.html
ஆதரவாளர்களை சந்திக்க மறுக்கிறார் ஜெயலலிதா!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 01:32.01 AM GMT ]
கர்நாடகா பரப்பனா சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா,, பெரும்பாலான நேரங்களை பத்திரிகை வாசிப்பதற்கும் காலை நேர நடைப்பயிற்சிக்கும் செலவிடுவதாக சிறையதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நாள்தோறும் அவரை பார்க்க ஆதரவாளர்கள் சிறைக்கு வந்து காத்திருக்கின்ற போதும் அவர்களை, அவர் பார்க்க விரும்பவில்லை.
நேற்றும் பெருமளவான ஆதரவாளர்கள் சிறைக்கு வெளியில் காத்திருந்தனர்.
எனினும் அவர்களை சந்திக்க முடியாது என்று ஜெயலலிதா தகவல் அனுப்பியுள்ளார்.
இதேவேளை தமிழக மக்களை அமைதி காக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnp7.html
சேனுகாவுக்காகவே நோனிஸை அறைந்தார் சஜின்: காதுக்கு சிகிச்சை பெற்றார் நோனிஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:15.17 AM GMT ]
நியூயோர்க்கில் அண்மையில் இடம்பெற்ற விருந்துபசாரம் ஒன்றின்போது சஜின் வாஸ், கிறிஸ் நோனிஸை அறைந்தமை தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த சம்பவத்தை அடுத்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கிறிஸ் நோனிஸ் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இந்தநிலையில் குறித்த விருந்துபசாரத்தின்போது சஜின் வாஸ், கிறிஸ் நோனிஸை ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தைகளால் திட்டிப்படி தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உனக்கு ஆதரவு என்று நினைக்க வேண்டாம் என்று சஜின் வாஸ், நோனிஸிடம் இதன்போது கூறியுள்ளார்.
முதலில் நோனிஸை கன்னத்தில் அறைந்த அவர், பின்னர் இரண்டாவது கன்னத்தில் அறைந்ததாக சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது கிறிஸ் நோனிஸின் இடதுகாது சிறிது நேரம் கேட்கும் சக்தியை இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் நியூயோர்க்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
நோனிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக செயற்பட வில்லை- வெளிவிவகார அமைச்சு
இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் கலாநிதி நோனிஸ், நியூயோர்க்கில் இலங்கை வர்த்தக சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்தின்போது பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸினால் தாக்கப்பட்ட சம்பவம் உலகெங்கும் இலங்கையின் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளுக்கு சாட்சியாக்கப்பட்டது யாவரும் அறிந்ததே.
இந்த சம்பவத்தை சுமூகமாக தீர்க்க ஜனாதிபதி தனது இத்தாலிய விஜயத்தின் போது நடவடிக்கை எடுக்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
எனினும் வெளிவிவகார அமைச்சரினால் ஏதுவும் செய்ய முடியாத நிலையில் இப்பொழுது இலங்கை உயர் ஸ்தானிகர் மீது புதிய குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயமாக ”மெக்ஸ்வுட் நிறுவனம்” நுவரெலியா பகுதியில் நடாத்தும் தேயிலை தோட்டத்தில் தேயிலையை விற்பனையை பிரித்தானியாவில் அதிகரிக்கும் நோக்கத்திலேயே தூதுவர் அதிக கவனம் செலுத்தியதாகவும் இலங்கை சார்பாக அவர் எதனையும் செய்யவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த பொதுநலவாய மகாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் அவர்களை, இவரது குடும்பம் நடாத்திவரும் தேயிலை தோட்டத்திற்கும், தொழிற்சாலைக்கும் விமானப் படை ஹெலிகொப்டர் மூலம் அழைத்து சென்று தேயிலை விற்பனையை அதிகரிக்கவே செயற்பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இளவரசர் சார்ள்ஸ் அவர்களுக்கும், அவர்களுடன் சென்றவர்களுக்கும் தங்கள் குடும்ப உற்பத்தியான தேயிலை தூள் பக்கட்டுகளை வழங்கியதாகவும் நோனிஸ் மீது குற்றம் சுமத்தியுள்ளதாக இன்றைய ஆங்கில நாளேடு ஒன்று தெரிவிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnqz.html
வத்திக்கானில் ஐ.தே.க எம்.பியை ஓரம் கட்டிய ஜனாதிபதியின் படப்பிடிப்பாளர்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:28.29 AM GMT ]
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ அழைப்பை அடுத்து புனித பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கைக்கான விஜயம் ஜனவரி 12 முதல் 15ஆம் திகதி என்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் பெரும்பாலும் ஜனவரி 9 ஆம் திகதியன்று இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இந்த வருடம் நவம்பர் 20 ஆம் திகதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பாப்பரசர் இலங்கையில் தங்கியிருக்கும் போது இடம்பெறும் நிகழ்வுகளை கொழும்பு கர்தினால் மல்கம் ரஞ்சித் அறிவித்திருந்தார்.
இதன்படி பாப்பரசர் மன்னார் மடுவுக்கும் சென்று ஆராதனைகளை மேற்கொள்ளவுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியுடன் இந்தமுறை வத்திக்கானுக்கு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்கவை புகைப்படத்தில் உள்ளடக்குவதை ஜனாதிபதியின் படப்பிடிப்பாளர்கள் தவிர்த்துக் கொண்டதாக ஊடகம் ஒன்று கூறியுள்ளது.
- பாப்பரசரின் இலங்கை விஜயத்தில் வேறு நோக்கங்கள் இல்லை
- தேர்தல் அறிவிக்கப்பட்டால் பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய மாட்டார்: அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq0.html
நீதியை நிலைநாட்டிய தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டை கையாள நினைக்கும் இராஜதந்திரம்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:38.22 AM GMT ]
18 வருடங்களுக்கு முன் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணிய சுவாமியால் சிறு பொறியாக பத்தவைக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்குத்தான் இன்று பெருநெருப்பாக மாறி ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வையே சுட்டெரிக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
இந்தத் தீர்ப்பை யார் ஆதரிக்கிறார்கள், யார் யாரெல்லாம் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால், ஜெயலலிதாவை சார்ந்த அரசியல்வதிகளும், அவரது கட்சித் தொண்டர்களும், வாக்களித்த மக்களில் பெரும்பாலானவர்களும் அவருக்கு வளங்கிய தீர்ப்பை தவறெனக்கூறி போராட்டங்களை நடாத்தி வருவகிறார்கள்.
தமது தலைவி செய்தது குற்றமாக இருந்தாலும்கூட, பதினெட்டு வருடங்கள் கழிந்த நிலையில் அவற்றை மன்னித்து மறந்துவிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் அவர்களது இன்றைய நிலைப்பாடாக இருக்கிறது.
அந்த அளவுக்கு அம்மாவின் தலைமைத்துவம் அவர்களை மயங்க வைத்திருக்கிறது. ஆனாலும், ஜெயலலிதாவின் தனிப்பட்ட அறிவு, திறமை,தலைமைத்துவ பண்பு, துணிவு, ஆழுமை, அரசியல் வன்மை என்பவற்றைத் தாண்டி அவர் செய்த முறைகேடான சொத்துக்குவிப்புக்கு எதிரான வழக்கில் நீதியின்பால் கிடைக்க வேண்டிய தண்டனை கிடைத்திருக்கிறது என்பதை பலரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.
தமிழ் நாட்டுக்கு உரிய, ஏற்றதொரு தலைவியாக ஜெயலலிதாவே இருக்க முடியும் என்பதை கடந்த சட்டசபை தேர்தலிலும், மத்திய அரசுத் தேர்தலிலும் தமிழக மக்கள் தங்களது தீர்ப்பாக வெளியிட்டிருந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் மக்களின் தீர்ப்பால் அவர் வெற்றி பெற்றிருந்தாலும், வழக்காடு மன்றத்தில் நீதியின் தீர்ப்பாக விதி அவருக்கு சதி செய்துவிட்டது.
கடந்த மத்திய தேர்தலில் “மோடி அலை” இந்தியா முழுவதும் வீசிய போதும், தமிழ் நாட்டில் ஜெயலலிதா அலை மட்டுமே வீசியது என்பதுதான் அவருக்கு ஆபத்தாக முடிந்ததோ! என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில் ஊழல் செய்யாத அரசியல்வாதிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. பல ஆண்டு காலமாக தமிழ் நாட்டில் தி.மு.க வும் அ.திமு.கவும் மட்டுமே மாறிமாறி பதவி வகித்ததால்,இரண்டு கட்சிகளுமே ஒன்று மாறி ஒன்று ஊழலை பங்குபோட்டுக் கொள்வது வளக்கமாக இருந்தது. ஏனைய கட்சிகளுக்கு ஆட்சிக்குரிய வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால் அவர்கள் ஊழலின் பிடியிலிருந்து தப்பியவர்களாக வலம் வருகிறார்கள்.
ஜெயலலிதா செய்த ஊழலுக்கான நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிட்டது. தி.மு.க வினருக்கான தீர்ப்பு எப்போ? என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையை தி.மு.கவினர் அதிகம் கொண்டாடாதற்கு காரணம் அவர்களுக்கு எதிரான வழக்கில் எதுவும் நடக்கலாம் என்ற நிலை இருப்பதால்தான் என்று சொல்லப்படுகிறது. “அவளைத் தொடுவானேன் கவலைப் படுவானேன்!” என்ற நிலைக்கு தமிழ் நாட்டின் அரசியல்வாதிகளையே கொண்டுவந்துவிட்டது ஊழல்மேலான ஒரு நீதியின் தீர்ப்பு.
ஜெயலலிதாவின் மேலான ஊழல் வழக்கும், அதற்கான தீர்ப்பும் பரவலாக வரவேற்பை பெற்றிருக்கின்ற போதும், உச்சக்கட்ட தீர்ப்பு வளங்கப்பட்டது தொடர்பாக நெருடலான பல தகவல்களும் வந்த வண்ணமே உள்ளன.
இந்தியாவில் புதிய ஆட்சி பதவி ஏற்றபின், மத்திய அரசின் இராஜதந்திர செயல்பாட்டாளர்களின் ஒருமுகப்பட்ட திட்டமிடலின் சாயல் இந்த தீர்ப்பின் பின்னணியில் இருந்துள்ளதாக கருதப்படுகிறது.
கைது செய்யப்பட்டு உடனடியாகவே சிறையில் அடைக்கப்பட்டது, ஜாமீன் உடனடியாக எடுக்க முடியாதபடி தீர்ப்பின் தினத்தை திட்டமிட்டது, ஆட்சியில் செல்வாக்கை செலுத்தும் உரிமையை தடுக்கும் வகையிலான சிறைத் தண்டனை, மற்றும் தேர்தலில் பங்குகொள்ள முடியாதபடி நீண்டகாலத்தடை, உச்சமான தண்டப் பணம், போன்ற அதி உயர் தீர்ப்பின் பின்னணியில், துணிச்சல் மிக்க ஒரு உறுதியானதலைமையை தமிழ் நாட்டிலிருந்து அகற்றும் மத்திய அதிகாரிகளின் இராஜதந்திரம் வெற்றியளித்திருக்கிறது என்றே கருதவேண்டி உள்ளது.
தீர்ப்பு வளங்கப்பட்டபின் இடம்பெறும் ஒவ்வொரு சம்பவமும் அதையே சொல்கிறது. ஜெயலலிதாவின் அதிரடியானதும், உறுதியானதுமான கடும் போக்கு மத்திய அரசுக்கு சவாலாக அமைந்ததே இந்த நிலைக்கு காரணமாகவும் இருக்கலாம்.
கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஊழல் பெருச்சாளிகள் என்;றாலும், கருணாநிதியைப்போல், மத்திய அரசிடம் வேண்டியதை பெற்றுக்கொண்டு வாலாட்டக் கூடியவரல்ல ஜெயலலிதா என்பது இந்திய மத்திய அரசில் உள்ளவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது.
அதனால்தான் அவருக்கு கடிவாளம் போட வடக்கு முடிவு செய்ததாக கருதவும் இடமுண்டு.
இலங்கை அரசைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு வளங்கப்பட்ட தீர்ப்பு மகிழ்ச்சியானதே. அவரது அண்மைக்கால வெளிப்பாடுகள் இலங்கை அரசுக்கு நெருக்கடிகாகவே இருந்துள்ளன.
“இந்திய மத்திய அரசோடுதான் எங்களுக்கான தொடர்பு” என்று இலங்கை அரசு சொல்லிக் கொண்டாலும்கூட, ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் தொடர்பான நடவடிக்கைகளை இலங்கை அரசு ஏதோ ஒரு வகையில் விமர்சிக்க வேண்டியவர்களாகவே இருந்துள்ளார்கள்.
ஜெயலலிதாவின் சிறை வாசம் என்பது ஈழத் தமிழ் மக்களின் கரிசனையை பொறுத்தவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே கருதப்படுகிறது. தமிழ்நாடு என்பது ஈழத்தமிழ் மக்களின் மனங்களில் என்றுமே பிரிக்க முடியாத ஒரு அங்கம். அங்கு ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளும், அரசியல் மாற்றங்களும் ஈழத்திலும் எதிரெலிக்கும் என்பது வரலாறு.
ராஜீவின் மரணத்தின் பின் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பாக ஜெயலலிதாவின் வெளிப்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபட்டவையாகவே இருந்துள்ளன. “விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை எதிர்கிறேன்!
ஈழத் தமிழ் மக்களின் விடுதலையை ஆதரிக்கிறேன்!”என்பது போன்றே ஜெயலலிதாவின் அண்மைக்கால நடவடிக்கைகள் இருந்துள்ளன. அதனால் அவருக்கு எதிராக வளங்கப்பட்ட தீர்ப்புக்குறித்து ஈழத் தமிழ் மக்கள் மகிழ்ச்சி கொள்வதோ, கவலை கொள்வதோ என்பதைத் தாண்டி,தமிழ் நாட்டில் ஒரு உறுதியான, நிலையான அரசு வேண்டும் என்பது ஈழத் தமிழ் மக்களுக்கு என்றுமே ஆதரவுத் தளமாக அமையும் என்பதே எமது நிலைப்பாடாகும்.
அங்கு அமையக்கூடிய உறுதியான அரசுக்கு வாக்களிக்கும் மக்களே எங்களுக்காகவும் குரல்கொடுக்கக் கூடியவர்கள். அவர்களின் வாக்குப் பலத்தால் அவர்களுக்கு கிடைத்த அரசியல் தலைமையைநாம் புறந்தள்ளிவிட முடியாது.
அதுவே தாயக மக்களுக்கான தெரிவாகவும் இருக்கிறது. அனாலும், “தமிழ் நாட்டு அரசியல் இனி என்னாகுமோ?” என்பதே இன்றைய எமது கரிசனையாகவும் இருக்கிறது.
க. ரவீந்திரநாதன்
kana-ravi@hotmail.com
kana-ravi@hotmail.com
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq1.html
Geen opmerkingen:
Een reactie posten