தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை

அமைச்சுப் பதவியை துறப்பாரா மேர்வின் சில்வா?
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:46.52 AM GMT ]
பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தனது பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெஹலியகொட பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான கிளைக் காரியாலய அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது, அமைச்சர் மேர்வின் சில்வா இது பற்றி கருத்துரைத்துள்ளார்.
பெரிய வாகனம் கிடைத்தது. பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்பட்டார்கள் என்பதற்கான ஓணானின் நிலைமைக்கு வீழ்ந்துவிடக் கூடாது. அவ்வாறான ஓணான்கள் இந்த அரசாங்கத்திலும் உண்டு.  எனினும் நான் அவ்வாறான ஓர் பாத்தரமல்ல.
மக்களின் தேவைகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாவிட்டால் அதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் எனக்கு வழங்கப்பட்ட வாகனங்கள் பாதுகாப்பு அவசியமில்லை. எனக்கு வாகனங்கள் உண்டு பாதுகாப்புக்கு மக்கள் இருக்கின்றார்கள்.
ஒரு ஆண்டும் இரண்டு மாதங்களும் எனக்கு பணியாற்ற அனுமதியளிக்கப்படவில்லை. அது எனக்கு கவலையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
எதிர்காலத்தில் மக்கள் சேவைக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், அமைச்சுப் பதவியில் இருப்பதில் பயனில்லை.
உங்களுக்காக நான் அமைச்சுப் பட்டத்தை துறந்து விடுவேன் நண்பர்களே என அமைச்சர் மேர்வின் சில்வா உணர்ச்சி பொங்கே பெஹலியகொட கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தொகுதி அமைப்பாளர் பதவி பறிக்கப்பட்டது முதல் அமைச்சர் மேர்வின் சில்வா அரசாங்கத்தின் மீது அதிருப்தியை வெளியிட்டு வந்த போதிலும் நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை. எனினும் தற்போது நேரடியாகவே அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் அளவிற்கு முரண்பாடு உக்கிரமடைந்துள்ளது என்பது புலனாகியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq2.html
புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 02:55.42 AM GMT ]
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர் அமைப்புக்களையும் தனிப்பட்டவர்களையும் அதில் இருந்து நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள பொதுநலவாய நாடுகளின் அலுவலகத்திடம் இந்தக்கோரிக்கையை உலக தமிழ் பேரவை முன்வைத்துள்ளது.
இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக தமிழர் பேரவையின் தலைவர், வணக்கத்துக்குரிய எஸ்.ஜே.இமானுவேல் கேட்டுள்ளார்.
ஓக்டோபர் முதலாம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
இதேவேளை இலங்கை தமிழர்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnq3.html

Geen opmerkingen:

Een reactie posten