பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்குப் பறந்து சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணையை சீனா சோதனை செய்துள்ளதாக ஹாங்காங்கிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த தகவலை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.
கடந்த 25ம் திகதி டாங்ஃபெங்-31பி ரக ஏவுகணை விண்ணில் செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையை சீன ராணுவம் மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, அந்நாட்டின் அணு ஆயுதத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை சீனா செலுத்தி சோதனை செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பத்தாயிரம் கீலோமீற்றர் தூரம் பறந்து சென்று இலக்கைத் தாக்கும் இந்த ஏவுகணை, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்கள் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலுள்ள நகரங்களைத் தாக்க வல்லது.
தனது அணுகுண்டு வீசும் ஏவுகணைத் திறனை வெளிப்படுத்தவே இந்த சோதனையை சீனா நடத்தியுள்ளது. இதன் மூலம் உண்மையான தாக்குதலுக்குத் தயாராவதாக உலக நாடுகள் கருதக் கூடாது என்றும் சீன ராணுவத்தின் முன்னாள் அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
http://newsonews.com/view.php?20260222222PPBdcceaImOJJ4ceeM6AAbbdcccMQWdbddnlAA004355nZ3e044E8oo23
|
Geen opmerkingen:
Een reactie posten