தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

யாழில் காதல் செய்யும் வேலை தொங்கும் இளைஞர்கள் !

யாழில் மகன் களவெடுத்த தொலைபேசி - தாய்க்கு விளக்கமறியல் !

[ Oct 01, 2014 04:40:40 PM | வாசித்தோர் : 4265 ]
மகனால் திருடப்பட்ட தொலைபேசியை வைத்திருந்த தாய் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) இடம்பெற்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வதிரி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து, கடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி மடிக்கணிணி, கைத்தொலைபேசி, கமரா உள்ளிட்ட 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டன. இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் வீட்டு உரிமையாளரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நெல்லியடி பொலிஸார், தொலைபேசியின் ஐ.எம்.ஈ.ஐ இலக்கத்தை வைத்து அலைபேசியை பாவித்து வந்த மானிப்பாய் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரை கைது செய்தனர்.
பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணைகளில் அல்வாயில் வசித்து வரும் தனது மகன் இந்த தொலைபேசியை தனக்கு தந்ததாக கூறியிருந்தார். மகன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வேளை, அவர் ஏற்கனவே பிறிதொரு திருட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது. இதனையடுத்து, மேற்படி பெண்ணை பருத்தித்துறை பதில் நீதவானின் வாசஸ்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை(28) மாலை, பொலிஸார் ஆஜர்ப்படுத்தினார்கள்.
இதன்போது, பதில் நீதவான் அ.நடராஜா மேற்படி பெண்ணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இதுதான் மகன் அம்மாவுக்கு ஆற்றும் தொண்டா ?
http://www.athirvu.com/newsdetail/1123.html

யாழில் காதல் செய்யும் வேலை தொங்கும் இளைஞர்கள் !

[ Oct 01, 2014 04:32:00 PM | வாசித்தோர் : 12430 ]
யாழ்ப்பாணத்து இளைஞர்கள் காதலில் தோல்வியுற்று கயிற்றில் தொங்கும் கலாசாரம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஒரு வருடம் மட்டும் நான்கு பேர் இவ்வாறு மரணித்த சம்பவம் நெஞ்சை ஒரு தடவை உறைய வைத்துள்ளது. ஆண் பிள்ளை வேண்டும் என்று, ஆண்டவனுக்கு விரதம் இருந்து ஈன்றெடுத்த பெற்றோர்களை விட்டுவிட்டு, உற்றார், உறவினர்களை அழ வைத்து விட்டு எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் முட்டாள் ஆண்கள் இருக்கும் வரை தவம் இருந்து பெற்றெடுத்த பெற்றோர்கள் காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்வதுதான் இறுதியானதாகின்றது.
ஏனெனில், ஆண் பிள்ளை பெற்றெடுத்து விட்டோம். நம் காலம் வரை கவலையின்றி வாழலாம் என்ற நினைப்பு அனைத்துப் பெற்றோர்களிடத்திலும் வருவது இயல்பு. இவ்வாறான பெற்றோர்களின் கனவுகளை மண்ணாக்கி விட்டு மரணிக்கின்றனர் இவ் இளைஞர்கள். இதிலும் இந்த இளைஞர்கள் யாருக்காக இறந்தார்களோ, அந்தப் பெண்கள் தற்போது ஒரு சுதந்திரமான வாழ்வை அனுபவித்து வருகின்றனர். தமது குடும்பத்தினருடன், சகோதரர்களுடன் ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
இவை அத்தனையும் தனது குடும்பத்தைத் தலைகுனிய வைத்து விட்டு, நடுத்தெருவில் விட்டு விட்டு இறந்து போன இளைஞர்களுக்குத் தெரியுமா ? ஓ... மரணிக்கும் யாழ். காதலன்களே மீண்டுவந்து பாரும் உம் காதலிகளை. அவர்களின் வாழ்க்கையை. இவளுக்காகவா நான் இறந்தேன் ? என்ற நினைப்பு நிச்சயம் வரும். என்ன செய்வது, போன உயிர் மீண்டு வருவதென்றால் இப் பூமி தாங்குமா ?
http://www.athirvu.com/newsdetail/1122.html

Geen opmerkingen:

Een reactie posten