தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 1 oktober 2014

பிரிட்டன் பிரதி உயர்ஸ்தானிகரை பின் தொடர்ந்த சிங்கள புலனாய்வுப் பிரிவினர் !

அமெரிக்காவை தாஜாசெய்து விட்டேன் என்கிறாரா மகிந்த ராஜபக்ஷ ?

[ Oct 01, 2014 04:17:39 PM | வாசித்தோர் : 3225 ]
இலங்கை தொடர்பான தனது கடும் நிலைப்பாட்டை அமெரிக்கா தளர்த்தியுள்ளதாக தான் உணர்ந்துள்ளதாக மகிந்த ராஜபக்ச அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரியுடனான சந்திப்பின்போது இதனை தான் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஜோன் கெரியுடனும், இந்திய பிரமருடனும் மேற்கொண்ட பேச்சுக்கள் பயனள்ளதாக அமைந்துள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பிடம் பேசவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை மாத்திரம் முன்வைத்தார். தான் ஏன் விசேட பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைகளை நிராகரித்தார் என்பதையும் தெளிவுபடுத்தினார் என தெரிவித்துள்ளார். இந்தியா இலங்கைக்கு விரோதமாக செயற்படாது என மோடி தெரிவித்ததாகவும் மகிந்த  குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1120.html

பிரிட்டன் பிரதி உயர்ஸ்தானிகரை பின் தொடர்ந்த சிங்கள புலனாய்வுப் பிரிவினர் !

[ Oct 01, 2014 04:23:45 PM | வாசித்தோர் : 3970 ]
இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர் லவுரா டேவிஸ் கண்காணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு தாம் விஜயம் செய்திருந்த போது சிலர் தொடர்ச்சியாக தம்மை கண்காணித்தனர் என லவுரா டேவிஸ் குற்றம் சுமத்தியுள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகராலய இணைய தளத்தின் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு தாம் விஜயம் செய்திருந்த போது சந்தித்தவர்கள் பின் தொடரப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தம்மை சிலர் பின்தொடர்ந்து கண்காணிக்கின்றார்கள் என்பதனை நிராகரிக்க முடியாத அளவிற்கு உணர்ந்துகொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தாம் சந்தித்தவர்களிடம் தொலைபேசி அழைப்பின் மூலமும் நேரடியாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். என்ன பேசப்பட்டது எதற்காக சந்தித்தேன் போன்ற வினாக்கள் தொடுக்கப்பட்டிருந்தன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிலர் தம்மை சந்திக்க அஞ்சியதாகவும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை எனவும், கவலையை உருவாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை விசாரணைகளுக்கு ஆதாரம் திரட்டும் நோக்கில் தாம் கிழக்கிற்கு விஜயம் செய்துள்ளதாக சில இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்
யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் தொடர்பில் பிரித்தானிய கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்டப்ட குற்றச் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்எ ன்பதே தமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணைக் குழுவின் மீது பூரண நம்பிக்கை இருப்பதாகவு அவர்களின் பணிகளை தாம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது எனவும் லவுரா டேவிஸ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு ரீதியில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கம் போன்றன தொடர்பிலும் பிரித்தானிய கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நியாயம் கிட்டக் கூடிய வகையிலான ஓர் பொறிமுறைமையை உருவாக்கி அதன் மூலம் நிரந்தர சமாதானத்தை எட்ட முடியும் என லவுரா டேவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1121.html

Geen opmerkingen:

Een reactie posten