இந்திய பிரதமர் மோடி, 5 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தார்.
அங்கு, மேடிசன் சதுக்கத்தில் மோடி உரை நிகழ்த்திய வேளையில், சதுக்கத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.
அதேபோல் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு மோடி சென்றிருந்த வேளையில், வெள்ளை மாளிகைக்கு எதிரில் உள்ள லாஃபேட்டி பூங்காவில் 2002ல் நடந்த இனப்படுகொலை தொடர்பாக, சீக்கியர்கள் நீதியமைப்பு என்ற மனித உரிமை அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மக்கள் நீதிமன்ற விசாரணை நடைபெற்றது.
வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் விருந்து உண்ணும் வேளையில், மக்கள் நீதிமன்றத்தில் மோடி மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
முன்னர் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்திற்கு முன்கூட்டியே அனுமதி அளித்திருந்தாலும் போராட்டக்காரர்கள் அதிக அளவு கூடியதால் பாதுகாப்புத்துறை வேண்டுகோளை ஏற்று பூங்காவில் மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது முகமூடி அணிந்த ஒருவர் மாதிரி நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் நிற்க, நீதிபதி முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சி கூறினர்.
வழக்கறிஞர், ஒருவர் மோடியின் மீதான குற்றச்சாட்டை வரிசைப்படுத்திக் கூறிக்கொண்டு இருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக நியூயோர்க்கின் முக்கிய இடங்களில் விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டிருந்ததால், இந்நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அதிகமாக வரத் தொடங்கியது.
இந்நிகழ்ச்சி அமெரிக்கா முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதனிடையே எதிர்ப்பாளர்களுக்கு வெள்ளை மாளிகை முன்பு போராட்ட அனுமதி மறுக்கப்பட்டதால் மோடி ஆதரவாளர்களுக்கும் வெள்ளை மாளிகை பகுதியில் அனுமதியளிக்கப்படவில்லை, அவர்கள் வெள்ளை மாளிகையிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள பென்சில்வேனியா அவன்யுவில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மோடி அமெரிக்காவில் இருந்த 5 நாட்களிலும், போராட்டக்காரர்கள் இரவு, பகலாக தொலைக்காட்சியில் விவாதங்கள் மற்றும் பத்திரிகையில் வாசகர் கடிதம் மூலம் மக்களுக்கு இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், அதற்கு மோடி அரசு எந்த அளவிற்கு துணை போகிறது என்ற விவரத்தை மக்களிடம் எடுத்துரைத்துள்ளனர்.
இந்திய பிரதமர் ஒருவருக்கு அதிகமான அவமதிப்பு இழைக்கப்பட்டது என்றால் அது மோடியின் இந்த பயணத்தில்தான் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten