தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 26 oktober 2014

கமலேஸ் சர்மா இலங்கையை சென்றடைந்தார்

ஹிருணிக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்து! மீண்டும் நெருங்கி வந்தார் ஹரின்
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:21.18 PM GMT ]
மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியதன் மூலம் ஹரின் பெர்னாண்டோ மீண்டும் அவரை நெருங்கி வந்துள்ளார்.
ஊவா மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஹரினுக்கும், மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்காவுக்கும் இடையில் பிரிக்கவே முடியாத இறுக்கமான நட்பு நிலவுகின்றது.
இந்நிலையில் ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது ஹிருணிக்காவும் பதுளை சென்றிருந்தார். அரசாங்கத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அவர், ஹரினின் பரம எதிரியான தயாசிறி ஜயசேகரவுடன் ஒன்றாக சுற்றித்திரிந்தார்.
இதன் காரணமாக ஹரின்-ஹிருணிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த நாட்களில் ஹிருணிக்காவும் கனத்த மௌனத்துடன் அமைதியாக இருந்தார்.
இதற்கிடையே ஹிருணிக்காவின் பிறந்தநாள் கடந்த சில நாட்களுக்கு முன் வந்துள்ளது. அதன் போது பழைய பகை மறந்து ஹரினும் தொலைபேசி வழியே ஹிருணிக்காவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஹரினின் தொலைபேசி அழைப்பு வந்த மகிழ்ச்சியில் காருக்குள் துள்ளிக் குதித்த ஹிருணிக்கா, உட்கார்ந்த நிலையிலேயே நடனமாடியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தனது தந்தையின் பாரம்பரிய கட்சியான சுதந்திரக் கட்சியை விட்டு விலகி, ஹரினுக்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளவும் ஹிருணிக்கா தயாராகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr2.html
வசந்த முன்னே, ஏனையவர்கள் பின்னே! ஆளுங்கட்சிக்கு குட்பை சொல்லத் தயார்?
[ சனிக்கிழமை, 25 ஒக்ரோபர் 2014, 04:35.22 PM GMT ]
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்கவே முதலில் எதிர்க்கட்சிக்குத்தாவும் ஆளுங்கட்சி முக்கியஸ்தராக இருப்பார் என்று தெரிய வந்துள்ளது.
வரவு-செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் இனிவரும் நாட்களில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் கட்சி தாவும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இது தொடர்பில் ஆளுங்கட்சியின் முக்கியஸ்தர்கள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் வெறுமனே பேசிக்கொண்டு காலத்தைக் கடத்தாமல், ஒருவராவது எதிர்க்கட்சி வரிசைக்குத் தாவி சிக்னல் கொடுக்க வேண்டும் என்று ஐ.தே.க. நிபந்தனை விதித்துள்ளது.
இதனையடுத்து வரும் வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனநாயக்க எதிர்க்கட்சிக்குத் தாவ தயாராகி விட்டார். அவரையடுத்து ரஜீவ விஜேசிங்க உள்ளிட்டோர் கட்சி தாவ உள்ளனர். இவ்வாறு ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் ஐந்து கட்டங்களாக கட்சி மாறும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARZKXmr3.html
நீர்கொழும்பில் ஜனாதிபதியைத் தோற்கடிப்பேன்! மாகாண அமைச்சர் லான்சா சபதம்?
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 12:46.14 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது நீர்கொழும்பு தொகுதியில் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவுள்ளதாக மாகாண அமைச்சர் நிமல் லான்சா சபதம் செய்துள்ளார்.
மேல் மாகாண சபையின் அமைச்சர்களில் ஒருவர் நிமல் லான்சா. நீர்கொழும்பின் இரண்டு பிரதான அரசியல்வாதிகளான இவருக்கும், பிரதியமைச்சர் சரத் குணரத்தினவுக்கும் ஏழாம் பொருத்தம். இதன் காரணமாக ஒரே கட்சியில் இருந்து கொண்டே இருவரும் அடிக்கடி மோதிக் கொள்கின்றனர்.
இந்நிலையில் நீர்கொழும்பு தொகுதியின் அமைப்பாளர் பதவிக்காக நிமல் லான்சா கடுமையாக முயற்சித்துப் பார்த்தார். எனினும் ஜனாதிபதியின் தீர்மானம் சரத் குணரத்தினவுக்கு ஆதரவாக மாறியபோது கடும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்துள்ளார்.
இதன் காரணமாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் ஜனாதிபதியை தோற்கடிக்கப்போவதாக அவர் தனது ஆதரவாளர்களிடம் சபதம் செய்துள்ளார். இதன் மூலம் தனக்கு அநீதி இழைத்த ஜனாதிபதியை பழிவாங்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் பிரதியமைச்சர் சரத் குணரத்தினவின் தொகுதி அமைப்பாளர் பதவிக்கும் வேட்டு வைக்கலாம் என்றும் நிமல் லான்சா எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmr7.html
ரத்ன தேரரின் 19ம் திருத்தச் சட்டத்தை ஆதரிக்கத் தயார்: ரணில் விக்ரமசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 12:56.04 AM GMT ]
ஜாதிக ஹெல உறுமயவின் அதுரலிய ரத்ன தேரரின் 19ம் திருத்தச் சட்ட யோசனையை ஆதரிக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஏனைய அரசியல் கட்சிகள் ஆதரவளித்தால், நாடாளுமன்றில் விவாதம் நடத்தாமலேயே சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
அரசாங்கம் 19ம் திருத்தச் சட்டத்தை அவசரமாக நிறைவேற்ற முயற்சிப்பதாக சில இணைய ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் இந்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் பதவி வகிக்க வேண்டும், அமைச்சர்கள் குறைக்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு காரணிகள் உள்ளடங்களாக 19ம் திருத்தச் சட்ட உத்தேச யோசனை உருவாக்கப்பட்டுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி அதரிக்கின்றது.
நான் நினைக்கின்றேன் ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று.
ஏனையவர்கள் இணங்கினால் விவாதம் நடத்தாமலேயே நாடாளுமன்றில் சட்டத்தை நிறைவேற்ற முடியும் என ரணில் விக்ரமசிங்க நேற்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இணைய தள வதந்திகளின் அடிப்படையில் அரசாங்கம் சட்டங்களை நிறைவேற்றாது என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சட்டமொன்றை நிறைவேற்ற வேண்டுமாயின் முறையான வகையில் சட்டம் நிறைவேற்றப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmsy.html
வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தங்களது பலத்தை நிரூபிக்க ஆளும் - எதிர்க்கட்சிகள் முயற்சி
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 01:04.12 AM GMT ]
வரவு செலவுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பின் போது தங்களது பலத்தை நிரூபிக்க ஆளும் எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன.
ஆளும் கட்சி உறுப்பினர்களை கட்சித் தாவச் செய்ய எதிர்க்கட்சிகளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்சி தாவச் செய்ய ஆளும் கட்சி உறுப்பினர்களும் முயற்சிகின்றனர்.
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் சில உறுப்பினர்களை தம் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு சலுகைகள் வழங்குவதாகத் தெரிவித்து இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.
இதேவேளை, வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆளும்கட்சியை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிகளை ஆரம்பித்துள்ளன.
வரவு செலவுத்திட்டத்தில் ஆளும் கட்சி தோல்வியடைந்தால் அது பொதுத் தேர்தல் ஒன்று நோக்கி நகர வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.
இதனால் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தங்களது பக்கத்தை பலப்படுத்திக் கொள்ள ஆளும் கட்சிகள் தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXmsz.html
கமலேஸ் சர்மா இலங்கையை சென்றடைந்தார்
[ ஞாயிற்றுக்கிழமை, 26 ஒக்ரோபர் 2014, 01:17.03 AM GMT ]
பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் கமலேஸ் சர்மா நேற்று இலங்கையை வந்தடைந்ததாக, இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை  சென்றுள்ள சர்மா, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இதன்போது அவர் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பில் அமைப்பின் தவிசாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விளக்கம் அளிக்கவுள்ளார்.
இதனையடுத்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதேவேளை தேசிய நல்லிணக்கம் தொடர்பான விடயங்களையும் அவர் ஆராயவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு செல்லும் சர்மா, அங்கு ஒருநாள் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடபகுதி செல்லும் சர்மா, விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளார்
வடக்குக்கு விஜயம் செய்யும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளார்.
நேற்று இலங்கை சென்ற சர்மா, எதிர்வரும் புதன்கிழமை வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இதன்போது பொதுநலவாய நாடுகளின் தற்போதைய தவிசாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அவர் நாளை சந்திக்கவுள்ளார்.
இதன்பின்னர் இலங்கையின் பல்வேறு அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
இதனையடுத்து பொதுநலவாய நாடுகளின் செயலாளர் என்ற அடிப்படையில் முதல்தடவையாக வடக்கு செல்லவுள்ள சர்மா, அங்கு போருக்கு பின்னர் வாழ்க்கை சவால்கள் குறித்து ஆராயவுள்ளார். இதன்போதே முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் சந்திக்கவுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms0.html

Geen opmerkingen:

Een reactie posten