வட பகுதிக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு, இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டவர்களுக்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் இலங்கையில் பிறந்த வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொண்டிருப்போர் தமது உறவுகளை பார்வையிட செல்லும் போது அவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் முன்னனுமதி தேவையில்லை என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் வெளிநாட்டில் பிறந்தவர்கள் வடக்குக்கு சுற்றுலாவாகவோ அல்லது அபிவிருத்தி திட்டங்களுக்காகவோ செல்லும் போது, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARaKXms1.html
Geen opmerkingen:
Een reactie posten