காமெடிப் பீசாக மாறிவரும் பிரதமர் DM
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, திஸ்ஸ கரலியத்த, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ஜனாதிபதி குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிக்கும் நோக்கில் பிரதமர் பதவியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு வழங்காது, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தாம் தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வருவதாகவும் பதவியை வகிக்கத் தயார் எனவும் தற்போதைய பிரதமர் டி.எம். ஜயரட்ன தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நபர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத நிலை இலங்கையில் உள்ளது. பிரதமர் என்ற போலி பொம்மை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ?
http://www.jvpnews.com/srilanka/84962.html
நந்திக் கடலில் தொடா்ந்து கரையொதுங்கும் மீன்கள்
இம்மாதம் இரண்டாம் திகதி முதல் இரு வாரங்களாக குறித்த கடலிலிருந்து மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
இதனால் நந்திக்கடலில் மீன்பிடிப்பதற்கு அங்குள்ள மீனவர்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
நந்திக்கடலில் இருந்து சிலாப்பி, கெளிறு, மணலை, மன்னா, கூரல் உள்ளிட்ட மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன.
நந்திக்கடலில் இருந்து சிலாப்பி, கெளிறு, மணலை, மன்னா, கூரல் உள்ளிட்ட மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியிருந்தன.
இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கிய மீன்களை வட்டுவாகல் கிராமிய கடற்றொழில் மீன்பிடிக் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்கள் இணைந்து அதனைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் சில நாட்களின் பின்னர் மீண்டும் நந்திக்கடலில் இருந்து மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்குவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுப்புறச் சூழல் மாசடைவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், முன்னரை விடவும் குறைந்தளவான மீன்களே தற்பொழுது இறந்து கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், முன்னரை விடவும் குறைந்தளவான மீன்களே தற்பொழுது இறந்து கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்தும் நந்திக்கட லில் மீன்கள் இறந்த நிலையில் கரை யொது ங்குவதால் தமது மீன்பிடித் தொழில் பாதிக்க ப்பட்டுள்ளதுடன், பொருளாதார ரீதியில் சிரமங் களையும் எதிர்கொள்வதாக வட்டுவாகல் மீன வர்கள் தெரிவிக்கின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/84966.html
ஹந்துன்நெத்தியின் மனைவி மகிந்தவால் ஏமாற்றப்பட்டுள்ளாராம்…
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று பாராளுமன்றத்தில் 2015 ஆம் ஆண்டு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பல்வேறு நிவாரணங்கள் தொடர்பான அறிவிப்புக்களை அடுக்கிச் சென்றிருந்தார். ஆனால் அவரது அனைத்து அறிவிப்புக்களுமே காற்று நிரப்பட்ட பலூன்களாவே பறந்துகொண்டிருந்தன. இந்த விடயத்தை எனது மனைவியால் ஊகித்துக்கொள்ள முடியவில்லை.
வரவு செலவுத் திட்ட உரை நிறைவடைந்து நான் வீட்டுக்கு சென்ற போது ஆசிரியையான எனது மனைவி ஓடி வந்து ஜனாதிபதி இவ்வளவு சலுகைகளை அறிவித்து விட்டாரே. எதிர்க்கட்சியினராகிய உங்களால் இனி என்னதான் செய்ய முடியும். உங்களால் எதுவும் பேசமுடியாது போயுள்ளதே எனக் கேள்வி எழுப்பினார்.
அப்போது இந்த வரவு செலவுத் திட்டத்தில் பொதிந்து கிடக்கும் தத்துரூபம் எனது மனைவிக்கு புரியவில்லை என்பதை தெரிந்துகொண்டேன்.
அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தினூடாக அறிவித்துள்ள நிவாரணங்களை விட மக்களிடத்திலிருந்து பறித்தெடுக்கும் தொகை அதிகமானது என்பது எனது மனைவிக்கு மாத்திரமல்ல இந்நாட்டிலுள்ள பலரும் அறியாதுள்ளனர். அந்தளவுக்கு மாயாஜால வார்த்தைகளால் வரவு செலவுத் திட்டம் வரையப்பட்டடிருக்கின்றது என்றார்.
http://www.jvpnews.com/srilanka/84969.html
ஜெனீவா தூதரக விடயத்தை அம்பலப்படுத்திய ரவி
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தை விட யுத்தம் முடிவுற்ற தற்போதைய நிலையில் இந்த வரவு – செலவுத்திட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்காக 35, 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான ஓர் பெரிய தொகையை ஒதுக்கிய போதும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதா? இல்லையென்றே கூற வேண்டும். நாளுக்கு நாள் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
பாராளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் தொடர்பான முதல்நாள் விவாதத்தை எதிர்க் கட்சித்தரப்பில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/84972.html
Geen opmerkingen:
Een reactie posten