தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 oktober 2014

கனடா பாராளுமன்றத்திற்க்குள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி சமர்.

பெலாரஸ் பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவுள்ளனர்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:33.34 PM GMT ]
பெலாரஸ் நாட்டின் தேசிய சபையின் பிரதிநிதிகள் எதிர்வரும் நவம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
பெலாரஸ் நாடாளுமன்றத்தின் தலைவர் விளாடிமிர் அன்ட்ரெய் சென்கோ தலைமையிலான குழுவே நவம்பர் 17முதல் 21 ஆம் திகதிவரை இலங்கைக்கு வரவுள்ளது.
இதன்போது இலங்கையின் நிர்வாக முறை மற்றும் நாடாளுமன்ற அமர்வுகளை அந்த பிரதிநிதிகள் குழு பார்வையிடவுள்ளது.அத்துடன் பல்வேறு தரப்புக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu6.html

பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்! கபே கண்டனம்
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 04:44.31 PM GMT ]
கல்வித் துறையில் காணப்படும் சீரழிவுகளுக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்னெடுத்த அமைதியான நடை பவனி மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு கபே அமைப்பு கண்டனம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஒன்று நாட்டில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக சமாதானமான முறையில் முன்னெடுக்கும் மாணவர்களின் நடவடிக்கையை கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்து அரசாங்கம் தடுத்துள்ளது.
இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக கபே அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது எதிர்காலத்தில் எதிர்க் கட்சிகளின் அரசுக்கு எதிராக முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு பயம்காட்டும் ஒரு முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாகும்.
உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினை தீர்ப்பதில் உயர் கல்வி அமைச்சின் நடவடிக்கை திருப்தியளிப்பதில்லையெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszARWKWeu7.html

கனடா பாராளுமன்றத்திற்க்குள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி சமர்.
[ புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2014, 05:45.20 PM GMT ]
கனடா பாராளுமன்றத் திற்க்குள்ளேயும் வெளியேயும் துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒட்டா யுத்த நினைவகம் அமைந்துள்ள பகுதியிலிருந்து நபர் ஒருவர் துப்பாக்கி பிரயோகம் செய்துவிட்டு அரசகட்டிடங்களை நோக்கி ஒடியதாகவும், பின்னர் அப்பகுதியில் பல துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இராணுவவீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
கனடா தனது பாதுகாப்பை அதிகரித்து சில மணிநேரங்களில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இந்த தாக்குதலின் போது ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வேளை பாராளுமன்றத்திற்க்குள் இருந்த பிரதமர் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உள்ளூராட்சித் தேர்தல்: 30க்கு மேற்பட்ட தமிழர்கள் போட்டி
http://www.tamilwin.com/show-RUmszARWKWevy.html

Geen opmerkingen:

Een reactie posten