தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 9 oktober 2014

தம்பி பிரபாவை தனியாகச் சந்தித்தது வரலாறு! எமது ஆட்சி தமிழ் மண்ணில் நிச்சயம்: சுவிஸில் மாவை

சபை ஒழுங்குகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்: சிவஞானம் வேண்டுகோள்
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 07:53.57 AM GMT ]
வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஆடை தொடர்பிலான விடயங்களில் ஒழுங்கை கடைப்பிடிக்குமாறு அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வடமாகாண சபையில் இன்று காலை முதல் காணி தொடர்பிலான விசேட அமர்வு நடைபெற்று வருகின்றது. அமர்வை ஆரம்பித்து வைக்கும் போதே அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
104 உறுப்பினர்களை கொண்ட மேல் மாகாண சபையிலுள்ள உறுப்பினர்கள், சபை அமர்வுகள் இடம்பெறுகின்ற போது, ஒரே மாதிரியான ஒழுங்கான ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
ஆனால் எமது சபை அமர்வில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள், வெவ்வேறு விதமான ஆடைகளை அணிந்து வருகின்றனர். அனைவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிய வேண்டியது கட்டாயமாகும்.
எமது வடமாகாண சபை 25 வருடங்கள் பின்நோக்கிய நிலையில் இருக்கின்றது. இதனை முன்னேற்ற வேண்டியது எமது கடமையாகும். அத்துடன், சபை ஒழுங்குகளில் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
அதாவது, உறுப்பினர்களை பேச அனுமதியளிக்கும் கால எல்லைக்குள் மாத்திரம் பேச வேண்டும், குறுக்காக பேசக்கூடாது, குழப்பங்களை சபைகளில் ஏற்படுத்தக்கூடாது. மேல் மாகாண சபையில் இத்தகைய ஒழுங்குகள் சீராக பேணப்பட்டு வருவதாக அவைத்தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWluy.html
ஆட்சிக்கு வராத அரசாங்கத்தை எதிர்பார்த்து இருப்பதில் பயனில்லை: விமல் வீரவன்ஸ
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:01.01 AM GMT ]
ஆட்சிக்கு வராத அரசாங்கத்தை நோக்கி பார்த்து கொண்டிருக்காது, ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தின் மூலம் கொழும்பை உருவாக்கி அழகுபடுத்தும் பணிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு, வெள்ளவத்தை மயூரா பிளேஸில் நிர்மாணிக்கப்பட்டுள்ள லக்முத்துவ செவன தொடர்மாடி குடியிருப்பை திறந்து வைக்கும் வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துடன் கைகோர்த்து வெற்றியை பெற்றுக்கொடுப்பதற்காக இனம், மதம் பாராது அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே இலங்கைக்கு சொந்தமான நிலத்தை வெளிநாட்டு குபேரர்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை எடுத்தது.
இன்றைய அரசாங்கம் அப்படியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
காலி கோட்டைக்குள் இருக்கும் நிலம் உட்பட பெறுமதியான நிலங்களை வெளிநாட்டு செல்வந்த குபேரர்களுக்கு விற்பனை செய்யும் சட்டத்தை உருவாக்கியவர்கள் இன்றைய அரசாங்கத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் எனவும் அமைச்சர் வீரவன்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWluz.html
சமையல் எரிவாயு விலையை குறைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:17.02 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கு அமைய சமையல் எரிவாயுவிற்கான விலை குறைக்கப்பட உள்ளது.
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நிதி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாளைய தினத்தில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
களனியில் இடம்பெற்ற ஓய்வூதியம் பெறுவோரின் தினத்தை அனுஸ்டிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபை தேர்தலுக்கு முன் சீன ஜனாதிபதி இலங்கை வந்தபோது மின் கட்டணம் மற்றும் எரிபொருள்களின் விலையை குறைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu0.html
தம்பி பிரபாவை தனியாகச் சந்தித்தது வரலாறு! எமது ஆட்சி தமிழ் மண்ணில் நிச்சயம்: சுவிஸில் மாவை
[ வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2014, 08:27.28 AM GMT ]
தம்பி பிரபாவை தனியாகச் சந்தித்த வரலாற்று நாட்களை மறக்க முடியவில்லை. எல்லாவற்றையும் என்னால் கூற முடியாது. எமது இலக்கு தமிழரின் மண்ணில் தமிழரின் ஆட்சியை நிறுவுவதே என தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நேற்று சுவிஸ் துர்க்கா கலை, கலாச்சார மன்ற வளாகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு சிறப்பான வரவேற்பும் கௌரவிப்பும் இடம்பெற்றது.
சிரேஸ்ட ஊடவியலாளர் இரா.துரைரத்தினம் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில், மூத்த ஊடகவியலாளர் குகநாதனும் பொதுமக்கள் மற்றும் ஆரசியல் ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszATdKWlu1.html

Geen opmerkingen:

Een reactie posten