தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 oktober 2014

மேற்கு நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு வரிச்சலுகை!- மகிந்த அறிவிப்பு

சாதாரண உடையில் வான் ஒன்றில் பெண்ணுடன் இருந்த இரு பிக்குகள் கைது!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 09:30.21 AM GMT ]
கண்டி தலவத்துஓயா - ஹாரகம பழைய ஆற்று வீதியில் வான் ஒன்றில் காற்சட்டை மற்றும் சட்டை அணிந்த நிலையில் பெண்ணொருவருடன் இருந்த இரண்டு பிக்குமாரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கண்டி மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்த இந்த பிக்குமார் பொதிகளில் காவி உடை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநாகரிகமான நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டில் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns4.html

ஜெயலலிதா கைது!- தீக்குளித்தும், மாரடைப்பாலும் இதுவரை 62 பேர் பலி!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 09:43.50 AM GMT ]
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் அதிர்ச்சியடைந்தும், உடனடியாக அவரை விடுவிக்கக் கோரியும் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தார்கள்.
மேலும், சிலர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.
இதில் பள்ளி மாணவிகளும் அடக்கம் என்பது தான் கூடுதல் வேதனை தரும் விசயம்.
இந்நிலையில், இவ்வாறு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns5.html

மேற்கு நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு வரிச்சலுகை!- மகிந்த அறிவிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 09:48.28 AM GMT ]
மேற்கு நாடுகளில் வாழும் இலங்கை அரசுக்கு ஆதரவான சிங்களவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நேற்று மிலானோ நகரில் வாழும் சிங்களவர்களைச் சந்தித்திருந்தார்.
இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான தீர்மானம் கடந்த வருடம் ஜெனீவாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் இத்தாலி சிங்களவர்கள் பேரணியாகச் சென்று ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவளித்திருந்தனர்.
இந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி இத்தாலியில் வாழும் சிங்கள மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
மேலும் அரசாங்கத்துக்கு ஆதரவான வகையில் செயற்படும், விடுதலைப் புலி அமைப்புகளை எதிர்த்துச் செயற்படும் மேற்கத்தேய நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
முதல்கட்டமாக இவர்களுக்கு தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தாலியில் வாழும் சிங்களவர்களின் நலன் கருதி மக்கள் வங்கியின் கிளையொன்றும் அங்கு திறக்கப்படும் என்றும் ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns6.html

Geen opmerkingen:

Een reactie posten