[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 08:39.30 AM GMT ]
திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது.
இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது.
1987ம் ஆண்டு யூலை 29ம் நாள் சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. சிறீலங்கா – இந்திய ஒப்பந்தம் மூலம் தமிழ் மக்களிற்கு நன்மைகள் கிட்டும், இந்தியா எமக்கு ஒரு வழியைக்காட்டும் என நம்பியிருந்த மக்களிற்கு மாறாக துன்பங்களையும் துயரங்களையுமே சிறீலங்கா அரசும், இந்திய அரசபடைகளும் சுமத்தின.
1987ம் ஆண்டு ஒக்டோபர் 3ம் நாள் தமிழீழக் கடற்பரப்பிலே நிராயுத பாணிகளாக எதிர்கால எண்ணக் கனவுகளுடன் லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் படகில் பயணித்தனர். அன்று விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலத்தில் மிகத்திறமையான படகோட்டிகள், ஆழ்கடலோடிகளாகச் செயற்பட்டவர்கள் இவர்கள்.
சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவோடு தமிழீழக் கடற்பரப்பில் வைத்து இந்தியப் படைகளால் கைதுசெய்யப்பட்டனர். 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 3ம் நாள் இவர்களைக் கைதுசெய்து பலாலி இராணுவ முகாமிற்கு கொண்டுசென்று விசாரணகள் நடாத்திவிட்டு, பின் கொழும்பு கொண்டுசென்று அதன் மூலம் ஒரு சதி நாடகத்தை அரங்கேற்றலாம் என எண்ணி சிறீலங்கா பேரினவாத அரசு திட்டம் தீட்டியது.
பலாலி இராணுவ முகாமில் பன்னிருவேங்கைகளும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட சிறீலங்கா அரசபடைகள் எதுவித பலனையும் அடையவில்லை. தமிழர்களின் காவலர்களாகவும், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உயிர் நாடியாகவும் இருந்த இவர்களைக் கைதுசெய்வதன் மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப் போராட்டத்தையும் அழித்துவிட எண்ணி பல சதிகளைச் செய்தனர்.
சிறையிலும் எதுவித தளர்வுகளும் இன்றி தமிழர்களின் உரிமைக்காகவே வாதாடினார்கள். இரண்டு நாட்கள் பலாலி இராணுவ முகாமில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு அது நடைபெறும் சமநேரத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை மீட்டுவிட முடியும் என்ற நம்பிக்கையில் இந்தியப் படைகளுடன் பேச்சுவார்த்தையும் நடாத்திப் பார்த்தனர். அதுவும் பயனற்றுப் போய்விட்டது.
குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளையும் கொழும்பு சிறைச்சாலைக்கு கொண்டு செல்ல அரசு திட்டமிட்டிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் 5ம் நாள், தமிழ் மக்கள் மீதும் தாயக மண்மீதும், தலைவர் மீதும் கொண்ட பற்றினால் அங்கு நின்ற இராணுவத்துடன் தங்களால் இயன்றவரை அவர்களுடன் மோதி இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீர மரபினைக்காக்க சயனைட் அருந்தி பன்னிரு வேங்கைகளும் அந்த மண்ணில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தனர்.
அன்றைய நாட்களில் அச்சம்பவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும், விடுதலைப் போராட்டம் இன்னும் வீச்சுடன் முன்னகர்ந்தது. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் போரிடும் வல்லமையை தூண்டியது.
பலாலி இராணுவ முகாமில் வைத்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவடைந்த லெப்.கேணல் குமரப்பா, லெப்.கேணல் புலேந்திரன் மற்றும் ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன், றெஜினோல்ட், தவக்குமார், கரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் வித்துடல்களும் யாழ்ப்பாணம் வடமராட்சி தீருவிலிற்கு எடுத்துவரப்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் போராளிகள் முன்னிலையில் தீயில் சங்கமமாகின.
இன்று அங்கு அந்தப் பன்னிரு வேங்கைகள் நினைவான நினைவுச் சதுக்கம் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்களப் படைகளால் சிதைக்கப்பட்டாலும், அவர்களின் நினைவுகள் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டே உள்ளன. இந்த திட்டமிட்ட சிறிலங்கா அரசின் சதி நடந்தேறி 27 ஆண்டுகள் நிறைவடைகின்றன.ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் ஆறாத வடுவாகவே அந்தச் சம்பவம் உள்ளது.
************************************************
( எமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது )
( எமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது. இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளின் வீரச்சாவு ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்க்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது )
-தமிழீழத் தேசியத்தலைவர்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள்
மேதகு வே .பிரபாகரன் அவர்கள்
http://www.tamilwin.com/show-RUmszATZKWns0.html
கொத்மலையில் காமினி திசாநாயக்க சிறுவர் பூங்கா திறந்து வைப்பு (மலையக செய்திகள்)
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 08:51.43 AM GMT ]
மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தினூடாக 50 இலட்சம் ரூபாய் செலவில் தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்ட பொது சிறுவர் பூங்கா மறைந்த காமினி திசாநாயக்க எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொது சிறுவர் பூங்கா தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக சேபாலவின் அழைப்பின் பேரில் வருகை தந்த அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் சிறுவர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
மலையகத்தில் அதிக பனி மூட்டம்
மலையகத்தில் பெய்யும் மழை காரணமாக பனிமூட்டத்துடன் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது.
அத்தோடு இரவு நேரங்களில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக ஹட்டன் - கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதோடு நேற்று இரவு கித்துல்கலையிலிருந்து வட்டவளை வரை முன்னால் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அதிக பனிமூட்டம் காணப்பட்டதன் காரணமாகவும் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.
இதனால் இரவு நேரங்களில் இவ்வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை வாகனத்தை அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.
குடாஓயா ஆற்றை அகலமாக்க நடவடிக்கை
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு அட்டன் பகுதியிலிருந்து நீர் செல்லும் அட்டன் குடாஓயா ஆற்றை அகலமாக்குவதற்கு அரச முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சர் நவீன் திசாநாயக்க முன்வந்துள்ளார்.
சிறு மழை பெய்தால் ஆற்றில் உள்ள நீர் வெளியேறி இந்த பகுதியில் உள்ள பல வீடுகள் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்குவதனால் நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ. குமாரசிரியின் வேண்டுகோளின்படி அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் 50 இலட்சம் ரூபா நிதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல காலங்கலாக இந்த ஆற்றை அகலமாக்காததனால் பல தடவைகள் நீர் நிரம்பி இந்த வீடுகளில் உள்ள பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதமாகியது குறிப்பிடதக்கது.
அதேபோல் இந்த ஆற்றில் தீடிரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த வருடம் பல வீடுகள் நீரில் மூழ்கியிருந்தது.
ஆற்றை அகலமாக்குவதனால் வெள்ள அபாயம் ஏற்படாது என நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜீ குமாரசிரி தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns1.html
கட்சி ஆசன ஒதுக்கீட்டை வழங்கினால் பொதுத்தேர்தலில் போட்டியிடுவேன்!- அனந்தி - பேட்டியின் முழுவிபரம் இணைப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 09:21.27 AM GMT ]
கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் வாரவெளியீடு ஒன்றுக்கு வழங்கிய பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
எவருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு இருந்தால் தான் தேர்தலில் வெற்றிபெற முடியும்.
எனக்கு தேர்தலில் போட்டியிடும் விருப்பம் குறைவாக இருந்தாலும் மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுகின்றது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ் மக்கள் என்னை வலியுறுத்துகின்றார்கள். இதனால்தான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன்
எனவே எங்களுடைய கட்சி எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாயின் பொதுத்தேர்தலில் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார்.
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் வழங்கிய பேட்டியின் முழுவிபரம்!
கேள்வி: ஐக்கிய நாடுகள் சபையின் புதிய மனித உரிமைகள் ஆணையாளரை அண்மையில் நீங்கள் சந்தித்திருந்தீர்கள். இந்தச் சந்திப்புத் தொடர்பில் கூறுங்கள்?
பதில்: ஐ.நா. வின் புதிய மனித உரிமை ஆணை யாளரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் எனக்குக் கிடைத்தது. ஆனால், இந்தச் சந்திப்பு நீண்ட நேர சந்திப்பாக அமையவில்லை. இருந்தும் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பு இந்தச் சந்திப்பின் மூலம் எனக்குக் கிடைத்தது.
ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின் போது நான் வழமையாக அங்கு செல்வேன். அவ்வாறு சென்றிருந்தபோதே எனக்கு புதிய மனித உரிமை ஆணையாளரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தொண்டு நிறுவனங் கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போது, மனித உரிமை ஆணையாளர் என்னையும் சந்தித்தார்.
அவரிடம் நான் யார் என்பதை அறிமுகப்படுத்தியிருந்தேன். எங்களுடைய மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவருடன் கலந்துரையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆகவே, எதிர்வரும் காலங்களில் அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்கு நான் முயற்சிப்பேன்.
கேள்வி: வடமாகாண சபை நிறுவப்பட்டு ஒரு வருடங்களுக்கு மேலாகின்றது. அதிகப்படியான வாக்குகளை வழங்கி உங்களைத் தெரிவு செய்த மக்களுக்காக நீங்கள் இதுவரை எவ்வா றான பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: எமது மனச்சாட்சியின்படி கூறுவதாயின் இதுவரை பெரிதாக எதுவும் மக்களுக்காகச் செய்ய வில்லை என்றே கூறவேண்டும். ஆனால் நான் எனது தேர்தல் பிரசாரங்களின் போது, வழங்கிய வாக்குறுதிகளுக்கு ஏற்ப செயற்பட்டு வருகின்றேன். அதாவது, சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவுகளை மீட்பது தொடர்பாகவும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் போராடி வருகின்றேன்.
ஜெனீவாவிற்குச் சென்றபோதும் இந்த விட யம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன். அத்து டன் என்னைச் சந்திக்கும் வெளிநாட்டுப் பிரதிநிதி கள் அனைவரிடமும் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றேன். நான் எனது தேர்தல் பிரசாரங்களின் போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றேன்.
இதைவிடுத்து மாற்று வழிகள் எதனையும் நான் பின்பற்றவில்லை. அந்த வகையில் நான் சொன்னதைச் செய்கின்றேன் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.
கேள்வி: வேறு மாகாணங்களில் மாகாண சபையி னால் வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவ்வாறு வட மாகாண சபையினால் எவ்வாறான வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன?
பதில்: வட மாகாண சபையில் ஐந்து அமைச்சுக் கள் காணப்படுகின்றன. இன்றுவரை வெளிப்படையாக பத்திரிகைகளில் விளம்பரங்களை வெளியிட்டோ அல்லது வேறு வழிகளிலோ எந்தவொரு வேலை வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இதற்குக் காரணம், 13 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளமையினால் எம்மால் மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொடுக்கமுடியாத சூழ்நிலை நிலவுகின்றது.
ஓர் அலுவலகப் பணியாளரை நியமிப்பதற்குக் கூட எமக்கும் எமது அமைச்சுகளுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. இதனால்தான் எம்மால் எந்தவொரு வேலை வாய்ப்பையும் வழங்க முடியவில்லை.
ஏனைய மாகாணங்களைப் பொறுத்தவரை ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் ஒரே கட்சி, ஒரே இனம் மற்றும் மொழி சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் தமது பணிகளை ஆற்றி வருகின்றனர்.
ஆனால் எங்களைப் பொறுத்தவரை அவ்வாறான நிலைமை இல்லை. இனம், மொழி போன்றவற்றால் நாங்கள் வேறுபட்டு இருப்பதால் இந்தப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
வடமாகாண சபையைப் பொறுத்தவரை, அதிகாரங்கள் அனைத்தும் ஆளுநரின் கைகளிலே இருக்கின்றன. அரசாங்கப் பிரதிநிதியான ஆளுநரின் கைகளில் அதிகாரங்கள் இருப்பதால், எம்மால் மக்களுக்கான எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையோ அல்லது வேலைவாய்ப்புக்களையோ வழங்க முடியவில்லை.
ஆனால் மாகாண அமைச்சர்கள் தற்துணிவின் பேரில் நியமனங்களை வழங்கக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கின்றேன். ஆனால் இந்த விடயம் தொடர்பில் என்னால் விவாதிக்க முடியாது. ஏனெனில் நான் ஓர் சாதாரண மாகாண சபை உறுப்பினர். அவ்வாறிருந்துகொண்டு அமைச்சர்களை விமர்சிக்க முடியாது என்ற நிலைமை ஏற்படும்.
கேள்வி: ஏனைய மாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் அனைத்தும் வட மாகாணசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளனவா?
பதில்: எனக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுடன் தொடர்புள்ளது. அங்குள்ள மாகாண சபை உறுப்பினர்களுக்கு இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். கடந்த தேர்தல் பணிகளின்போது அவர்கள் வடமாகாணத்திற்கு வந்தபோது, அவர்களுடன் தலா இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததை என்னால் அவதானிக்க முடிந்தது.
அதேபோல் எமக்கான வாகன வசதியும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இரண்டரை வருடங்களுக்கு பின்னர் தான் வாகன வசதிகள் ஏற்படுத்தித் தருவதாக கூறியுள்ளனர். வடமாகாண சபையைப் பொறுத்தவரை அமைச்சர்களுக்கும், சபாநாயகருக்கும், உதவிச் சபாநாயகருக்கும் வாகன வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
அதிகமாக அச்சுறுத்தப்படும் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையிலும், எனக்கு வாகன வசதியோ, பாதுகாப்போ ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவ்வாற பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில்தான் நான் எனது பணிகளை முன்னெடுத்துச் செல்கின்றேன்.
கேள்வி: அண்மைக்காலமாக வடமாகாணத்தில் பெண்கள் மீதான வன்முறைகளும், சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்துள்ளன. ஓர் பெண் மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில், இவற்றைத் தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள்?
பதில்: பெண்கள், சிறுவர்கள் மீதான வன்முறைகள் தொடர்பிலான பொறுப்பு எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமையினை ஊடகங்கள் வாயிலாக என்னால் அறிய முடிகின்றது. ஆனால் இந்தச் செயற்பாடுகள் வட மாகாண சபையில் எந்த அமைச்சுக்குக் கீழ் இருக்கின்றன என்பது எனக்குத் தெரியவில்லை.
ஆனால் இந்தக் கடமைகளை வடமாகாண சபை என்னிடம் எழுத்துமூலமாக ஒப்படைக்கவில்லை. எழுத்துமூலம் ஒப்டைக்கப்படாத ஓர் விடயத்தில் நான் எவ்வாறு தலையிட முடியும். ஆனால், நான் ஓர் சமூக சேவகி என்ற வகையிலும், மக்களின் நலன் சார்ந்த வகையிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கின்றோம். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களைத் திரட்டி உரிய இடங்களில் ஒப்படைத்து வருகின்றோம். சிறுவர் நன்னடத்தைப் பிரிவு எமது இந்த முயற்சிகளுக்கு உதவி புரிகின்றது.
அத்துடன் பொலிஸாரும் எமக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும். யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரை இவ்வாறான விடயங்களுக்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு குறைவாகவே காணப்படுகின்றது. ஆகவே, இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான அதிகாரத்தை எனக்கு வழங்கினால், நான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.
தற்போதுள்ள நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான விபரங்களைச் சேகரித்து உரிய இடங்களுக்கு அனுப்பி வருகின்றேன். இதனை விடுத்து மேலதிகமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எனக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
கேள்வி: எதிர்வரும் பொதுத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா?
பதில்: என்னுடைய குரலும் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதனை என்னிடம் சிறு சிறு குழுக்களாக வந்து தெரிவித்துள்ளார்கள். எனவே எங்களுடைய கட்சி எனக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்குமாயின், பொதுத் தேர்தலில் களமிறங்க நான் தயாராக இருக்கின்றேன். எவருக்கும் தேர்தலில் போட்டியிடுகின்ற விருப்பம் இருக்கலாம். ஆனால் மக்களின் ஆதரவு இருந்தால்தான் தேர்தலில் வெற்றிபெற முடியும். எனக்கு தேர்தலில் போட்டியிடும் விருப்பம் குறைவாக இருந்தாலும். மக்களின் ஆதரவு அதிகமாகவே காணப்படுகின்றது. பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு தமிழ்மக்கள் என்னை வலியுறுத்துகின்றார்கள். இதனால் நான் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கின்றேன்.
கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. எனவே இந்த விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அழிப்பது தொடர்பில் நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில்: பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரே விசாரணைக் குழுவுக்கு சாட்சியமளிக்கக்கூடாது என்று தெரிவித்தள்ளார். எனவே மக்கள் சாட்சியமளிப்பதில் அச்சம் கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது.
பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பாதிப்புக்கள் தொடர்பாக அறிந்தவர்கள் கூட இந்த விசாரணைக்குழுவுக்கு சாட்சியம் அளிக்க முடியும். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக சாட்சியமளிக்கக் கூடியவர்கள் நிச்சயமாக தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns3.html
Geen opmerkingen:
Een reactie posten