[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 10:12.10 AM GMT ]
பொலிஸ் நிலையத்துக்கு வருகின்றவர்களை சோதனைக்குட்படுத்துவது, பாதையைக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னிட்டு இரும்புக் கம்பிகளைக் கொண்டு இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை இந்த சோதனைச் சாவடியை திருடர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் நிலையம் முன்பாக இருந்த சோதனைச் சாவடி திருடிச் செல்லப்பட்ட சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொலிசாருக்கே பாதுகாப்பில்லாத நிலையில், நமக்குப் பாதுகாப்பு சாத்தியமா என்றும் பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWns7.html
அரசாங்கத்திற்கு புதிய யோசனைகளை முன்வைக்கும் சம்பிக்க ரணவக்க- அமைச்சரவை குழு நியமிப்பு
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 10:33.54 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை திறந்த பொருளாதார முறைக்குள் வந்து 40 வருடங்கள் கடந்து விட்டது.
திறந்த பொருளாதார முறையை அறிமுகப்படுத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது தனிநபர் வருமானத்தை 12 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் என்ற வரையறையை இலங்கையால் கடந்து செல்ல முடியாது போயுள்ளது.
களியாட்டுக்களை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவதனால், நாட்டில் நடுத்தர வருமானம் பெறும் மக்களின் பிரச்சினையை தீர்க்க முடியாது.
இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டுமாயின் அறிவை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நாட்டுக்கு தேவை.
இதனடிப்படையில் புத்திஜீவிகளின் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் மூலம் புதிய முதலீட்டு யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது.
அந்த யோசனைகள் எதிர்வரும் 7 ம் திகதி வெளியிடப்பட உள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கை செலவு பிரச்சினையை தீர்க்க அமைச்சரவை குழு நியமிப்பு
நாட்டு மக்களின் வாழ்க்கை செலவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண விசேட அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான அந்த குழு நேற்று மாலை முதல் முறையாக கூடியது.
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு அடுத்து வரும் காலப்பகுதிக்குள் தீர்வு காண்பதற்காக அந்த குழு பல தீர்மானங்களை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWnty.html
வாஜ்பாய் கூறியது போல, லைசென்ஸை விடுத்து துப்பாக்கியை தூக்க வேண்டும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஒக்ரோபர் 2014, 10:37.00 AM GMT ] [ valampurii.com ]
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது வாஜ்பாய் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
பிரதமர் இந்திரா காந்தி பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, இந்தியா அணுகுண்டைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. நாங்கள் நினைத்தால் அணு குண்டைத் தயாரிப்போம் என்றார்.
இச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது மட்டும் போதுமானதல்ல.
இச் சந்தர்ப்பத்தில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவர் வாஜ்பாய் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருப்பது மட்டும் போதுமானதல்ல.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா என்பன அணுகுண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது நாங்கள் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தை மட்டும் தெரிந்திருப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. இந்தியாவும் அணுகுண்டைத் தயாரிக்க வேண்டும் என்றார்.
வாஜ்பாயின் உரையை அலட்சியம் செய்த இந்திரா காந்தி , அணுகுண்டை தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தால் போதுமானது என்றார். இந்திரா காந்தியின் பதிலுக்கு வாஜ்பாய் மீண்டும் விளக்கம் கொடுத்தார்.
மத்திய பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் புலிகளின் தொல்லை இருந்து வந்தது. அந்த ஊரில் ஒருவர் துப்பாக்கி சுடுவதில் வல்லவராக இருந்தார். அவரிடம் துப்பாக்கி சுடுவதற்கான அனுமதிப் பத்திரமும் (லைசென்ஸ்) இருந்தது. ஆனால் அவரிடம் துப்பாக்கி இருக்கவில்லை.
ஒரு நாள் அவரின் ஊருக்குப் புலி வந்துவிட்டது. அந்த ஊர்ச் சனங்கள் கூக்குரல் இட அந்த மனுசன் வீட்டுக்குள் ஓடிச் சென்று துப்பாக்கி சுடுவதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை எடுத்து வந்து புலிக்கு முன்னால் காட்டி எனக்குச் சுடத் தெரியும் என்றார்.
பாவம், துப்பாக்கியை வைத்திராமல் துப்பாக்கி துடுவதற்கான லைசென்ஸை வைத்துக்கொண்டு அதனைப் புலிக்கு காட்ட, புலி அந்த ஆளைத்தான் முதலில் கொன்று புசித்து மகிழ்ந்தது.
இதுபோலதான் இந்தியாவும் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தூக்கிக் காட்டும்போல் தெரிகிறது என்றார். வாஜ்பாயின் உரையால் பாராளுமன்றில் ஒரே சிரிப்பொலி.
இதுபோலதான் இந்தியாவும் அணுகுண்டு தயாரிக்கும் தொழில்நுட்பத்தைத் தூக்கிக் காட்டும்போல் தெரிகிறது என்றார். வாஜ்பாயின் உரையால் பாராளுமன்றில் ஒரே சிரிப்பொலி.
மிக நீண்டகாலத்திற்கு முதல் நடந்த இச் சம்பவத்தை இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவதற்கும் எங்களுக்கும் தொடர்பு இருக்கவே செய்கிறது.
இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அமெரிக்கா மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் இறுக்கமான போக்கில் மாற்றமில்லை என்று அமெரிக்கா அடிக்கடி கூறிவருகிறது.
அமெரிக்கா கூறுவதும், புலிகளுக்கு லைசென்ஸ் காட்டியது போன்றதுதான் என்பதை சுட்டிக்காட்டுவதில் எந்தத்தவறும் இருக்க முடியாது.
2009 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்து போயினர்.
அப்போதெல்லாம் எங்கள் மீது எந்த நாடும் கவனம் கொள்ளவில்லை. ஐக்கிய நாடுகள் சபை கூட, எங்கள் விடயத்தில் தவறிழைத்தமை நிரூபணமாயிற்று.
இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் ஐ.நா சபை தவறிழைத்துள்ளது என்பதை அதன் செயலாளர் நாய கம் பான் கீ மூன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
அப்படியானால் தவறிழைத்த ஐ.நா சபையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று கேட்பது நியாயமானதே.
எனினும் ஐ.நா சபையின் நடவடிக்கைகள் வெறும் காகிதாதிகளிலும் வாய்ப்பேச்சுக்களிலும் இருக்கிறதே தவிர, இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதாகத் தெரியவில்லை.
ஆக; அமெரிக்கா, ஐ.நா சபை போன்றன இலங்கை மீது இறுக்கமான போக்கை கொண்டிருப்பதாகக் கூறிவருகின்ற கால கட்டத்திலேயே ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளைப் இழந்து வருகின்றனர்.
குறிப்பாக தமிழர் தாயகம் நில ஆக்கிரமிப்புக்கு ஆளாகி எதுவும் செய்ய முடியாத நிலைமையில் உள்ளது.
இது தவிர போர்வடுக்கள் தொடர்பிலான சாட்சியமளிப்புக்களிலும் புலனாய்வின் ஆதிக்கம் என்பதாக நிலைமையிருக்க, இலங்கை தொடர்பான நிலைமையில் மாற்றமில்லை.
நாங்கள் இறுக்கமாகவே இருக்கிறோம் என அமெரிக்கா கூறுவதால் எந்தப்பயனும் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை.
வாஜ்பாய் கூறியது போல, துப்பாக்கி சுடும் லைசென்ஸை தூக்கிப்பிடிப்பதை விடுத்து; துப்பாக்கியை தூக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வரும்.
http://www.tamilwin.com/show-RUmszATZKWntz.html
Geen opmerkingen:
Een reactie posten